போட்டி விதிமுறை

ராஜா இசைப் புதிர் #RajaIsaiQuiz
வரும் October 3 முதல் இனிதே ஆரம்பம்
போட்டி குறித்த விளக்கம் இதோ
திரையிசையில் ஆயிரம் படங்களைத் தாண்டிச் சாதனை படைக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு இந்தப் போட்டி இடம்பெறவிருக்கின்றது. 
ஒரு பாடலின் முகப்பு இசை பகிரப்பட்டு அந்தப் பாடல் எதுவென்று நீங்கள் கண்டு பிடிப்பதே இப்போட்டியாக அமையும்.
அனைத்துப் பாடல்களும் தமிழில் வெளிவந்த பாடல்களாகவே இருக்கும்.
உங்கள் பதிலை குறித்த கேள்வி கேட்கப்படும்
https://radiospathy.wordpress.com/
தளத்தின் போட்டிப் பக்கத்தில் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு போட்டியிலும் முதலில் பதிலளித்துச் சிறப்பு முதல்வர் பட்டம் பெறுபவருக்கான தகுதி என்னவெனில் பாடலின் முதல் இரு சொற்களையும் தமிழில் தட்டச்சிப் பகிர வேண்டும்.
பாடலுக்கான பதிலைத் திருத்துபவருக்குப் புள்ளி இல்லை.
புதிருக்கான பதிலை குறித்த போட்டி பகிர்ந்த பதிவின் comment box இல் மட்டும் இடவும்.
ட்விட்டரிலோ, பேஸ்புக்கிலோ பகிராதீர்.
இந்தப் போட்டி திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு இடம்பெறும். போட்டி முடிவு அடுத்த நாள் இந்திய நேரம் நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும்.
500 போட்டிகளாக அமையும் ராஜா இசைப் புதிர் ஒவ்வொரு 100 போட்டிகளும் தனிச் சுற்றுகளாகக் கணிக்கப்படும்.

Advertisements