#RajaChorusQuiz 35/500 மோதிரமே காதல் சாட்சி

#RajaChorusQuiz 35/500

கோரஸ் பாடல்களை வைத்துப் போட்டி அமைக்கவேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு இப்படியான பாடல்கள் தான் எனக்கு உந்து சக்தியாக இருந்தன. பாடகர் ஒரு சங்கதியைக் கொடுக்க, கோரஸ் குரல்களின் ஆலாபனை சங்கமிக்கும்.
ஏ.பி.நாகராஜன் காலத்த்தில் கே.வி.மகாதேவன் அவரின் இசை மணிமகுடமாகத் திகழ்ந்தார். எண்பதுகளைப் பொறுத்தவரை இதிகாச, புராணம் சார்ந்த படங்களின் வருகை மிகவும் சொற்பமாகவே வந்துகொண்டிருந்தன. அப்படியானதொரு படமே இந்தப் படம்.

இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா கொடுத்த பாடல்களில் இந்தப் பாடலே முன்னணியாக ரசிகர்களைக் கவர்ந்தது. பாடலில் வரும் மூல ஜோடிப் பாடகர்களுக்கும் சாஸ்திரீய சங்கீதம் என்றால் அவலாச்சே. அதனாலோ என்னமோ இசையும் புள்ளி மானாய்த் துள்ளி விளையாட, காதலர்களின் வனதேவதைகளாய் கோரஸ் குரல்களின் கும்மாளம் நெஞ்சில் நெருக்கமாக வந்தமர்கின்றது.

#RajaChorusQuiz 35/500
ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி
பாடல்: மான் கண்டேன்
படம்: ராஜரிஷி
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம், குழுவினர்

.

Advertisements

#RajaChorusQuiz 33/500 & #RajaChorusQuiz 34/500 லொள்ளுக்காரன் பாட்டு ரெண்டு

#RajaChorusQuiz 33/500

#RajaChorusQuiz 34/500

ஓக்கே மக்கள்ஸ் வார இறுதி வந்தால் ரெண்டு என்று தெரியும் உங்களுக்கு, ஆனா இங்கே ஒரு பாட்டில் ஒரே ஆளே ரெட்டை வேஷம் போடுறார், ஒலக மகா நடிப்புடா சாமி. இரண்டு பாட்டிலும் இவரின் லொள்ளுத்தன முத்திரை தான். ஆனால் முதல் பாட்டில் காரண காரியங்களே நாயகனே தன்னை விளக்குவார்.

இரண்டாவது பாட்டில் நாயகனின் குறும்புத்தன லீலைகளுக்கு பின்னணி பாடுகிறார்கள், இந்த இரண்டாவது பாட்டை ஒரு பக்திப்பாட்டு மாதிரி மெட்டமைத்து, கோரஸ் குரல்களைக் கூட மென்மையாகக் காட்டியது ராஜ முத்திரை. அந்தக் குரல்களின் ஆலாபனையைக் கேளுங்கள் ஏதோ இசையில் மிதந்து எழும்புவது போல இருக்கும். அந்த கோரஸ் ஐத் தாண்டி ஒரே ட்ரம்ஸ் அடியோடு ஆட்டம் தான் சின்னப்பாட்டு ஆனால் மனசில் நிற்கும் பாட்டு. இரண்டுமே ஒரே நாயகன் நடித்தவை. பதிலோடு ஓரமா வாங்க வரும் திங்கள் இந்திய நேரம் மதியம் 12 மணி வரை இந்தக் கடை திறந்திருக்கும் :-

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
இதோ பதில்கள்

#RajaChorusQuiz 33

படம்: நடிகன்
பாடல்: ஆட்டமா பாட்டமா போடு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்

#RajaChorusQuiz 34

படம் : கடலோரக் கவிதைகள்
பாடல்: பள்ளிக்கூடம் போகாமலே
பாடியவர்கள் : இளையராஜா குழுவினர்

)

#RajaChorusQuiz 32/500 ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டம் போடு

#RajaChorusQuiz 32/500

என்ன மக்கள்ஸ் வெள்ளிக்கிழமை அதுவுமா ஊருக்கு வண்டி கட்டியிருப்பீங்க, வேலை முடிந்த களைப்பைப் போக்க இப்படி ஒரு துள்ளிசைப் பாட்டைக் கேட்டால் தொலை தூர ரயில் பயணமும் சுகம் தானே. ராஜாவும் கோரஸும் சேர்ந்திசைக்கும் இந்தப் பாட்டெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தொடும் ரகமாச்சே எங்கே பதிலோடு ஓடி வாங்க 🙂

ஓக்கே மக்கள்ஸ், போட்டி இனிதே நிறைந்தது. போட்டியில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இந்தப் புதிரில் வந்த பாட்டு “ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா”, அக்னி நட்சத்திரம் படத்துக்காக இளையராஜா குழுவினர் பாடியிருந்தனர். https://www.youtube.com/watch?v=aS5U-Mjd5WA

#RajaChorusQuiz 31/500 படகுச்சவாரியில் ஒரு கல்யாண ஊர்வலம்

#RajaChorusQuiz 31/500

நிகழவிருக்கும் அபாயத்தை அறிந்து கொள்ளாமல் கூடிக் கொண்டாடிக் குதூகலிக்கிறது கல்யாணக் கூட்டம். ஆண், பெண் என்று இருபாலாரும் சம நேரத்தில் கொண்டாடுவதைக் கண் முன்னே கொண்டு வருகிறது சேர்ந்திசைக் குரல்கள்.

என்ன பாடல் என்று சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவீர்களே ;

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
இதோ பதில்கள்

#RajaChorusQuiz 31

படம்: வைதேகி காத்திருந்தாள்
பாடல்: மேகம் கறுக்கையிலே
பாடியவர்கள்: இளையராஜா, உமா ரமணன் குழுவினர்

)

#RajaChorusQuiz 30/500 ஆடலாம் பாய்ஸ் சின்னதா ஒரு டான்ஸ்

#RajaChorusQuiz 30/500

என்னடா இது இந்த நாயகரைச் சுற்றியே கோரஸ் பாட்டு வருது என்று நீங்கள் சிரிப்பீர்கள் ஆனால் என்ன செய்வது ராஜாவுடன் இணையும் பாக்கியம் பெற்ற படங்களில் எல்லாம் அட்டகாசமான கோரஸ் குரல்களை வைத்து எக்சர்சைஸ் பண்ணி நடித்திருக்கிறாரே 🙂 கங்கை அமரனின் அழகு தமிழ் வரிகளும் சேர கோரஸ் தாண்டவம். பதிலோடு வருக :-

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
இதோ பதில்கள்

#RajaChorusQuiz 30

படம்: முந்தானை முடிச்சு
பாடல்: அந்தி வரும் நேரம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர்

)