#RajaChorusQuiz 12/500 & 13/500 பெண்கள் தினத்தை கோரஸ் போட்டு இரண்டு நாள் கொண்டாடுங்க

#RajaChorusQuiz 12/500

#RajaChorusQuiz 13/500

இன்று மார்ச் 8 ஆம் திகதி பெண்கள் தினத்தைக் கொண்டாடும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துகளோடு “அம்மா பாடுமே” பாட்டு போடாமல் பெண்களுக்குப் பெருமை சேர்த்த படங்களில் இருந்து இரண்டு இசைத்துணுக்குகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கான புதிர்களாகத் தருகின்றேன். திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக உங்கள் பதில்களைப் பின்னூட்டிவிடுங்க.
பெண்கள் தினத்துக்கு ஸ்பெஷலாகக் கொடுக்கவேண்டும் என்று நினைத்த போது இங்கே கொடுக்கப் பட்ட ஒரு பாடலை மிகவும் இலகுவாகவே தேர்ந்தெடுத்துவிட்டேன். பெயரேக் கேட்டாலே எந்த பஸ் நாமளும் ஏறலாமா என்று பார்த்து ஏறணுமே.
இன்னொன்றுக்குத் தான் கிட்டத்தட்ட இரண்டு நாளாகப் போட்டுடைத்து ஒருவாறு தேர்ந்தெடுத்து விட்டேன். இது ஒரு கிராமிய இயக்குனர் புரட்சிகரமாக எடுத்த படம், வில்லன் நடிகராக வந்த டாக்டர் பின்னாளில் ஆந்திராவில் கலக்குக் கலக்கிய நாயகன் ஆனாரே.
உண்மையில் ஒரு பாடல் புதிரில் கோரஸ் குரல்களை மட்டும் தேடித் தருவது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதை எனக்குப் பாடமெடுத்தது இந்தப் புதிர்.

#RajaChorusQuiz 12/500 புதிரில் வரும் கோரஸ் குரல்களைக் கேளுங்கள் பெண், ஆண் ஆகிய இரண்டு கூட்டுக் குரல்களையும் ஒன்றிணைத்துப் பெண் சுதந்தரத்துக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் ஆணின் புரிந்துணர்வும் பக்க பலமும் வேண்டும் என்பது போல் ஒத்திசைந்து இசைக்கின்றது. இந்தப் பாடல் முழுக்கவே சேர்ந்திசைக் குரல்களை வைத்தே பின்னப்பட்டிருக்கிறது, இசைக்கருவிகளோடும் கூட்டுக்குரல்களோடும் கேட்டுப் பார்த்தால் ஒரு பெரும் இசைப் புரட்சி கீதமாக ஓங்கி ஒலிக்கும் இது. ஏறக்குறைய எல்லாப் பண்டிகைகளுக்கும் தேசிய கீதம் போட்ட ராஜா இந்த நாளுக்கும் ஒன்று தந்து பெருமை சேர்த்துவிட்டார்

#RajaChorusQuiz 13 இல் வரும் பாட்டு உரிமை கேட்டு வீதிக்கு வந்த பெண்ணின் அசரீரியாக ஒலிக்கின்றது அந்த ஆண் குரல்களின் ஆலாபனை. ஒரு பாடலுக்கு இசைக்கருவிகள் மட்டுமன்றி கோரஸ் குரல்களை வைத்தே விதவிதமான உணர்வுத்தொனியைப் பிரதிபலிக்க முடியும் என்பதற்கு மேலும் இரண்டு உதாரணங்கள் இவை.

சரி, இந்தப் புதிர் விளக்கத்துக்குள்ளேயே பதிலுக்கான க்ளூவும் ஒளிந்திருக்கிறது இனி நீங்க என்ன செய்யணும்கிறதை நான் சொல்லவா வேணும் 😉
ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இந்தப் புதிரில் வந்த பாட்டுகள் இவை

#RajaChorusQuiz 12/500 மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா (மகளிர் மட்டும்)

#RajaChorusQuiz 13/500 ஓ ஒரு தென்றல் புயலாகி (புதுமை பெண்)

Advertisements

24 thoughts on “#RajaChorusQuiz 12/500 & 13/500 பெண்கள் தினத்தை கோரஸ் போட்டு இரண்டு நாள் கொண்டாடுங்க

  1. #RajaChorusQuiz 12/500
    பாடல்-மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா?
    படம்-மகளிர் மட்டும்.
    ஒவ்வொரு நாளும் இதைப் போல எளிதாக கொடுங்களேன்.

  2. 13 – புதுமைப் பெண்… ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே…
    ஈசியான புதுமைப் பெண்ணுக்கு இவ்ளோ க்ளூ. தெரியாத 12க்கு க்ளூவே இல்ல. #அவ்வ்வ்வ் #அழுதுட்டேன்

  3. முதலாவது பாடல் “மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா இனமா”. படம் மகளிர் மட்டும் (1994). முழுக்க முழுக்க கோரஸ் குழுவினர் பாடிய பாடல் !

    இரண்டாவது பாடல் “ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே”. படம் புதுமைப் பெண் (1984). மலேசியா வாசுதேவன் கோரஸ் குழுவினருடன் இணைந்து பாடிய பாடல் !

  4. #13 : “ஓ…ஒரு தென்றல் புயலாகி வருமே…” வாசுதேவரின் குரலில் “புதுமைப்பெண்” படப்பாடல்.

  5. #12 : ”மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா இனமா..” கோரஸ் குரல்கள் மட்டுமே பாடிய “மகளிர் மட்டும்” படப்பாடல். இன்றைய தினத்திற்கான அருமையான தேர்வு!!!

  6. 12. மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா இனமா?… – எஸ். ஜானகி – மகளிர் மட்டும்
    13. ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே… – மலேசியா வாசுதேவன் – புதுமைப்பெண்

  7. 12. மகளிர் மட்டும் – அடிமை பட்டு
    13. புதுமைப்பெண் – ஓஓஓஓஓஓ …ஒரு தென்றல் புயலாகி

  8. மகளிர் மட்டும் – மகளிர் மட்டும்
    ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே – புதுமை பெண்

    ஆஹா! அருமையான பாடல் தேர்வு இந்த அருமையான பெண்கள் தினமன்று. பாராட்டுக்கள்!!

  9. Quiz 12:
    பாடல் – மகளிர் மட்டும் அடிமைப்பட்ட
    படம் – மகளிர் மட்டும்

    Quiz 13:
    பாடல் – ஓ ஒரு தென்றல்
    படம் – புதுமைப் பெண்

  10. 1. மகளிர்மட்டும் from மகளிர்மட்டும்
    2. ஓ ஒரு தென்றல் from புதுமைப் பெண்

  11. 13 க்கான ஓ! ஒரு தென்றல் புயலாகி வருதே புதுமைப்பெண்

  12. 12/500 -> மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா – மகளிர் மட்டும்
    13/500 -> ஓ ஒரு தென்றல் புயலாகி – புதுமைப்பெண்

  13. முதல் பாடல்: மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா
    படம்: மகளிர் மட்டும்

    இரண்டாவது பாடல்: ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே
    படம்: புதுமைப் பெண்

  14. 12 – மகளிர் மட்டும் அடிமைப்பட்ட.. இனமா..
    13 – ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருமே..

  15. 13ன் பதில் படம்-புதுமைப் பெண் —ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே…

  16. 12ன் பதில் படம்-அடுத்தாத்து ஆல்பர்ட்- இதயமே நாளும் நாளும் காதல் பேசவா

  17. ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
    இந்தப் புதிரில் வந்த பாட்டுகள் இவை

    #RajaChorusQuiz 12/500 மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா (மகளிர் மட்டும்)

    #RajaChorusQuiz 13/500 ஓ ஒரு தென்றல் புயலாகி (புதுமை பெண்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s