#RajaChorusQuiz 65/500 நாயகிக்கு மரியாதை

#RajaChorusQuiz 65/500

முந்திய படத்தில் தேசிய விருதை சிறந்த நடிப்புக்காகப் பெற்ற நாயகியை முன்னுறுத்தி அதே இயக்குனர் எடுத்த இரண்டாவது படம் இது. அடேங்கப்பா ஏகப்பட்ட புதுமுகங்கள். சிலர் பின்னாளில் பிரபலங்கள்.

வெறும் ம் என்ற ஒலியை மட்டும் எவ்வளவு ஓசை நயத்தோடு கொடுக்கிறார்கள் இந்த
கோரஸ் குரல்கள். தொடர்ந்து ஒற்றைத் தபேலா வந்து அந்தத் துடிப்பை அடக்கிப் பாடகியை மட்டும் அழைக்க, பாடுகிறார் முதலில் தனியே, சேர்ந்து கொள்கின்றன
வாத்தியங்கள் மெல்ல மெல்ல. இந்தப் பாடலில் புல்லாங்குழலும், மிருதங்கமும் தான் கெளரவ விருந்தினர்கள்.

சங்கீதத்தில் துறைபோன ஆண் பாடகர் மட்டும் விடுவாரா என்ன தன் பங்குக்கு ஜோடி சேர்ந்து கலக்கும் அருமையான இந்தப் பாடலைக் கண்டு பிடித்தால் காது நிறையக் கேட்பீர்கள். #RajaChorusQuiz 65/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: கண்ணா வருவாயா
படம் : மனதில் உறுதி வேண்டும்
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா, குழுவினர்

Advertisements

#RajaChorusQuiz 64/500 கோரஸுக்குத் தலையாட்டும் புல்லாங்குழல்

#RajaChorusQuiz 64/500

எண்பதுகளில் கலக்கிய நடிகரின் நூறாவது படம் இது. தன்னுடைய குருவாக நினைத்தவரின் பட்டத்தையே அடைமொழியாகப் படத்தின் தலைப்பிலும் இட்டிருக்கிறார்.

கைத்தாளத்தோடு கோரஸ் குரல்கள் சொல்லிக் கொடுக்கத் தலையாட்டி ரசித்து வாசிக்கும் புல்லாங்குழல் இசையும் கூடவே பந்தியில் கலந்து சுதி சேர்க்கும் கிட்டாரும் இன்ன பிற வாத்தியங்களுமாய் ஒரு அற்புதக் கலவை இது. பாடலோடு வருக.
#RajaChorusQuiz 64/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே
படம் : வாத்தியார் வீட்டுப் பிள்ளை
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்

#RajaChorusQuiz 63/500 தேடும் நெஞ்சமே

#RajaChorusQuiz 63/500

மலையாளத்தில் ராஜகுமாரனாய் வந்த படம். தமிழுக்குத் தாவியபோது கலைஞர் கருணாநிதி மகனின் குடும்ப நிறுவனம் தயாரித்த படம். அட்டகாசமான பாடல்கள், நல்ல நடிகர்கள், மலையாளத்தின் புகழ்பூத்த இயக்குனர் இருந்தும் படம் பெரிதாக ஓடவில்லை.
#RajaChorusQuiz 63/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: ப்ரியசகி ஓ ப்ரியசகி
படம்: கோபுர வாசலிலே
பாடியவர்கள் : மனோ, எஸ்.ஜானகி, குழுவினர்

#RajaChorusQuiz 61/500 & #RajaChorusQuiz 62/500 ஒரே ஆண் பாடகர் இரு வேறு பாடகிகள்

#RajaChorusQuiz 61/500

#RajaChorusQuiz 62/500

இரண்டு வெவ்வேறு நாயகர்களின் பாடல்கள் இந்த வார இறுதி ஸ்பெஷலாக வருகின்றன. இந்தப் பாடல்களைக் கண்டுபிடித்து வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக அறியத்தாருங்கள்.
இரண்டு பாடல்களிலும் ஒரே ஆண் பாடகர் இரு வேறு பெண் பாடகிகள்.
#RajaChorusQuiz 61/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: வருது வருது இளங்காற்று
படம்: பிரம்மா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர்

#RajaChorusQuiz 62/500

பாடல்: பூத்துப் பூத்து குலுங்குதடி பூவு
படம்: கும்பக்கரை தங்கய்யா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன், குழுவினர்

#RajaChorusQuiz 60/500 காதல் பறவைகளின் ஊர்கோலம்

#RajaChorusQuiz 60/500

எண்பதுகளின் தனித்துவம் வாய்ந்த இந்தப் பெண் குரலை மறக்க முடியுமா என்ன? இன்று கேட்டாலும் சொர்ணலதாவின் அக்காவோ எனக் கேட்கத் தோன்றும். ராஜாவின் பின்னணி இசையிலும் புதுப்பரிமாணத்தைக் கொடுத்த படத்தின் பாட்டு இது.

#RajaChorusQuiz 60/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: இரு பறவைகள் மலை முழுவதும்
படம்: நிறம் மாறாத பூக்கள்
பாடியவர்கள் : ஜென்ஸி, குழுவினர்

#RajaChorusQuiz 59/500 பல்லவனுக்குள் பாட்டு

#RajaChorusQuiz 59/500

ராஜா ராஜாதிராஜனெங்கள் ராஜா பாட்டின் ரிதத்தில் வரும் இந்தப் பாட்டு ஒரு நாயகனின் இரண்டாவது படத்தில் ராஜாவோடு முதன்முதலில் கைகோர்த்தபோது அமைந்த பாட்டு.இதே பாட்டின் மெட்டு சித்ரா பாடும் இன்னொரு பாட்டாகவும் இருக்கின்றது. அதிகம் கவனிக்கப்படாத அற்புதப்பாட்டு நான் அடிக்கடி விரும்பிக் கேட்பேன்.

ஓக்கே மக்கள்ஸ் போட்டி நேரம் நிறைந்தது. இதோ பதில்
பாடல்: யாரடி நான் தேடும் காதலி
படம்: பொண்டாட்டி தேவை
பாடியவர்கள் : இளையராஜா குழுவினர்

#RajaChorusQuiz 58/500 பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்கும் தெரியும்

#RajaChorusQuiz 58/500

இன்று மிகவும் சுலபமான ராஜா பாட்டு. ராஜா பாடிய பாடல்களில் சூப்பர் ஹிட் ரகங்களில் ஒன்று இது. இசையைக் கேட்டாலே கண்டு பிடித்துவிடுவீர்களே 😉

#RajaChorusQuiz 58/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: ஆறும் அது ஆழமில்ல
படம்: முதல் வசந்தம்
பாடியவர்கள் : இளையராஜா,குழுவினர்