#RajaChorusQuiz 96/500 & #RajaChorusQuiz 97/500 ராஜாவோடு ஆட்டம் போடு

#RajaChorusQuiz 96/500

#RajaChorusQuiz 97/500

வார இறுதி வந்தாச்சு வழக்கம் போல இரண்டு பாடல்கள் இவற்றுக்கான பதில்களோடு நீங்கள் வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

#RajaChorusQuiz 96/500

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: வீட்டுக்குக் கதவிருக்கு/ஐயா வீடு
படம்: காதலுக்கு மரியாதை
பாடியவர்கள் : இளையராஜா , குழுவினர்

#RajaChorusQuiz 97/100

பாடல்: மைனா மைனா மாமன் புடிச்ச மைனா
படம்: பகல் நிலவு
பாடியவர்கள் : இளையராஜா , குழுவினர்

வருகின்ற ஜூன் மாதம் 2 ஆம் திகதி இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்றிலிருந்து அடுத்த ஐந்து போட்டிகளும் அவரும் அவரோடு இணைந்து கோரஸ் குரல்களும் சங்கமிக்கும் பாடல்களாக அமையவிருக்கின்றன.
அந்த வகையில் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு பாடல்கள், இசைஞானியின் துள்ளிசை வகையறாவில் வரும் செமத்தியான பாடல்கள்.

ஒன்று எண்பதுகளில் வெளிவந்த படம், இன்னொன்று தொண்ணூறுகளில் வெளிவந்தது. ஒரு படத்தின் இயக்குனர் கிராமியத்திலிருந்து நவீனத்துக்குச் சென்றவர் இன்னொருவர் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அடிக்கடி வந்து படம் பண்ணுபவர்.

இலகுவான பாடல்கள் என்பதால் 🙂 க்ளூ கொடுக்கவில்லை, பாடல்களோடு வாருங்கள்.

Advertisements

#RajaChorusQuiz 95/500 பார்ட்டி சொல்லைத் தட்டாதே

#RajaChorusQuiz 95/500

ஓக்கே மக்கள்ஸ் வெள்ளிக்கிழமை நாளில் விடுமுறை காண வார இறுதியை எதிர் நோக்கிக் காத்திருக்கும் உங்களுக்கு இதோ ஒரு இலகுவான போட்டி.

பழைய பாட்டு மாதிரிப் பண்ணியிருக்கும் பியூட்டியான பாட்டு.
கேட்பவர் உள்ளங்களைக் கொள்ளையடிக்கும் வெள்ளிக்கிழமை விருந்து.

பாடலோடு வருக

#RajaChorusQuiz 95/500

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான்
படம்: இதயம்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் , குழுவினர்

#RajaChorusQuiz 94/500 மோடி நாடி நாடி வருடி

#RajaChorusQuiz 94/500

இந்த கோரஸ் போட்டிகளில் திருமணப் பாடல்கள் அரிதாகவே வந்திருக்கின்றன என்ற குறையை நீக்க ஒரு அரிய பாடல்.

ஆகா அந்த வயலினும், புல்லாங்குழலும் இசையில் சரசமாடும் இடைவெளியில் கோரஸ் குரல்கள் தோழியர்களாகப் புகுந்து இன்பக் கூத்து செய்கிறார்களோ?

இதுக்காக நீங்கல்லாம் டெல்லிக்குப் போய் கன்னத்தைத் தடவி ஆசி பெற வேண்டாம் கஸ்தூரி மானே கல்யாணத்தேனே மாதிரிப் பாட்டோடு வருக 😉
#RajaChorusQuiz 94/500

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: குங்குமம் மஞ்சளுக்கு
படம்: எங்க முதலாளி
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, கே.ஜே.ஜேசுதாஸ் , குழுவினர்

#RajaChorusQuiz 93/500 ஆறு செக்கனுக்குள் ஓடிடு :-)

#RajaChorusQuiz 93/500

இதோ இன்னொரு புதுமையான கோரஸ் துளி, வெறும் ஆறு செக்கன் மட்டுமே ஒலிக்கும் இந்த இசைத்துளி படத்தின் அடி நாதமாய் அமைந்திருக்கும்.

இந்தப் பாட்டைக் கண்டுபிடித்தால் படத்தின் கதை என்னவென்று கூடப் பலர் ஊகிக்க முடியும். என் பிரிய தாண்டவக்கோனே ஊரை விட்டே ஓடிப் போ

பாட்டோடு வாங்க பதிலை ட்விட்டரில் பகிராமல் இங்கே இருக்கும் பின்னூட்டப் பெட்டியில் மட்டும் பகிருங்க 🙂
#RajaChorusQuiz 93/500

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: வீட்டுக்குள்ள கட்டுப்பட்ட பச்சைக்கிளி
படம்: மை டியர் மார்த்தாண்டன்
பாடியவர்கள் : இளையராஜா , குழுவினர்

#RajaChorusQuiz 92/500 குரு பாகம் இரண்டு

#RajaChorusQuiz 92/500

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் பாகம் 2 வருவது அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது.

அதிலும் ஒரு புதுமை இது, அது என்னவென்றால் தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குனரின் உதவியாளர் முன்னர் எழுபதுகளில் இயக்கிய படத்தின் பாகம் இரண்டை குரு ஸ்தானத்தில் இருந்த அந்த இயக்குனர் இயக்கியிருந்தார்.

வெளிநாட்டில் படமாக்கினால் தான் என்ன முதல் பாகம் கொடுத்த வெற்றியைக் கொடுக்காத படம்

ஆனால் பாடல்கள் செம செம

குறிப்பாக இந்தப் பாட்டைக் கண்டுபிடித்தீர்களானால் உங்களைக் கட்டிப் போட்டுவிடும் மாந்திரீகம் நிறைந்த பாட்டு.

#RajaChorusQuiz 92/500

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: சின்னப்பூ சின்னப்பூ
படம்: ஜப்பானில் கல்யாணராமன்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி , குழுவினர்