#RajaChorusQuiz 74/500

வார இறுதி விடுமுறையை எதிர்நோக்கியிருக்கும் அன்பர்ஸ் உங்களுக்கு மிகவும் இலகுவான பாடல் புதிர் இன்று.

இந்தப் படத்தின் கதையைப் பிரபல எழுத்தாளர் ஒரு வார இதழுக்காக எழுதியபோதே படப்பிடிப்பும் சம காலத்தின் ஆரம்பித்தது. தமிழின் அன்றைய இன்றைய முன்னணி நட்சத்திரம் நடித்த இந்தப் படத்தின் தலைப்பு இன்னொரு நாயகனின் பெயரை ஞாபகப்படுத்தும். பாடலும் அப்படியே.

கதா நாயகன் துதி பாடும் மேற்கத்தேய மெட்டில் எஸ்.ஜானகியோடு ஜோடி சேரும் கோரஸ் குரல்களை வெகு இலாவகமாகப் பொருத்தி ரசிக்க வைக்கும் இசைஞானி கொடுத்த இந்தப் பாட்டின் இரண்டு இடையிசையைப் பொருத்தி 1.10 நிமிடம் ஓடும் இசைத்துணுக்காகப் பகிர்கிறேன் கேட்டு இன்புற.

ஐ பாட்டை நான் கண்டுபிடிச்சிட்டேன் கண்டுபிடிச்சிட்டேன்னு இந்த நேரம் வந்துடுவீங்களே 😉

#RajaChorusQuiz 74/500

ஓக்கே மக்கள்ஸ் போட்டி இத்தோடு முடிந்தது பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் புதிருக்கான பதில்

பாடல்: விக்ரம் விக்ரம்
படம் : விக்ரம்
பாடியவர்கள் கமல்ஹாசன், எஸ்.ஜானகி குழுவினர்

Advertisements