#RajaChorusQuiz 128 குழந்தைகளோடு ஒரு பாட்டு

#RajaChorusQuiz 128/500

வார் இறுதிப் புதிர்கள் காதலும், கல்யாணமும் ஆகிப்போனதால் இந்த வாரத்தை ஆரம்பிக்க குழந்தைகளோடு ஒரு தாய் சேர்ந்து பாடும் பாட்டு.

இந்தப் பாடலின் இரண்டு சரணங்களில் தனித்தனியாக பெண், ஆண் கோரஸ் குரல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பானதொரு விடயம்.

இதே பாடலின் ஆண்குரலும் தனியாக உண்டு.

இந்தப் படத்தின் தலைப்பு, வானொலி நிகழ்ச்சிக்கு விருப்பமாகச் சூடிக் கொள்வது.
பாடலோடு வருக.

#RajaChorusQuiz 128

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
படம் : நீங்கள் கேட்டவை
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்

Advertisements

#RajaChorusQuiz 126 & 127 கல்யாணமும் காதலும்

#RajaChorusQuiz 126/500

#RajaChorusQuiz 127/500

இந்த வார இறுதிக்கும் வரும் இரண்டு பாடல்களில் ஒன்று கல்யாணத்தம்பதி பாடும் பாட்டு இன்னொன்று காதலர் பாட்டு. இவற்றுக்கான பதில்களை வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்பதாகக் கொடுத்துவிடுங்கள்.

எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் முன்னணி நாயகர்களாக விளங்கிய இருவரது படங்கள் இவை. இதில் ஒருவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இன்னொருத்தர் கட்சிகளை கலாய்ப்பதைக் காலாகாலமாகத் தன் படங்களில் செய்து வருபவர்.

இரண்டு படங்களிலும் ஒரே நாயகி நடித்திருப்பார். ஒரு படத்தில் இரு வேறு நாயகிகல் உண்டு, இந்தப் பாடல் ஒன்றில் நாயகியும் அந்த இன்னொருத்தர் தான். (யெப்பூடி). ராம்ராஜ் ஐ நினைத்தால் ஒரு படம் பேர் வந்துடும். இங்கே கொடுக்கப்பட்ட இன்னொரு படத்தின் பாடலை நீங்கள் யாராவது நினைத்தால் அந்தப் பாடல் வந்துடும். அங்கேயிருந்து பிறகு போட்டிப் பாடலைக் கண்டுபிடிக்கலாம் தலைவா.
வீட்டுக்கு ஒருவர் பாட்டுக்கு ஒன்றோடு வருக வருக.
#RajaChorusQuiz 126

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : மனசுக்குள்ள நாயனச்சத்தம் நான் கேட்டேன்
படம் : மல்லுவேட்டி மைனர்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, அருண்மொழி, குழுவினர்

#RajaChorusQuiz 127

பாடல்: அழகிய நதியென அதில் வரும் அலையென
படம் : பாட்டுக்கு ஒரு தலைவன்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்

#RajaChorusQuiz 125 வாத்தியார் வண்டி

#RajaChorusQuiz 125/500

ஓக்கே மக்கள்ஸ், வெள்ளிக்கிழமை வந்தாச்சு. இப்பவே வார இறுதியில் வாகனத்தின் மீதேறி ஊர் சுற்றத் திட்டமெல்லாம் போட்டிருப்பீங்க.
இந்த வேளையில் ஒரு பயணப்பாட்டு இன்றைய புதிரில்.

வாத்தியாரின் படத்தின் பெயர் ஒன்றை ஞாபகத்தில் வைத்தால் படமும் கிட்டிவிடும் பாடலும் கிட்டிவிடும்.

பாடலோடு வருக.
#RajaChorusQuiz 125

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : ஒத்துக்கோ ஒத்துக்கோ
படம் : ரிக்‌ஷா மாமா
பாடியவர்கள் : மனோ, குழுவினர்

#RajaChorusQuiz 124 குயில் பாடும் ராகம்

#RajaChorusQuiz 124/500


இந்தப் படம் ஒரு வாரிசு நடிகரும், தங்கை நடிகையும் ஜோடி போட்ட படம். கலைஞர் கருணாநிதி வசனம்.

நாயகனாக நடித்தவர் கலைஞர் வசனத்தில் பேசிய வசனப்பகுதி கூட அப்போது படத்தின் இசைத்தட்டிலும் வந்திருந்தது.

இந்தப் பாடலைக் கேட்கும் போது தாளக்கட்டு அப்படியே “அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே” பாடல் போன்றிருக்கும் ஆனால் இந்தப் பாட்டு ஒரு காதல் ஜோடிப்பாடல்.

இம்புட்டுக் க்ளு கொடுத்தும் பாடலைக் கண்டுபிடிக்காவிட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும் 🙂

பாடலோடு வருக.
#RajaChorusQuiz 124

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : சோலை இளங்குயில் யாரை எண்ணியெண்ணி ராகங்கள் பாடுதோ
படம் : காவலுக்குக் கெட்டிக்காரன்
பாடியவர்கள் : சித்ரா, மனோ, குழுவினர்

#RajaChorusQuiz 123 மெல்லிசை மன்னர் & இசைஞானி இன்னொரு கூட்டு

#RajaChorusQuiz 123/500

மெல்லிசை மன்னரின் பிறந்த நாள் ஸ்பெஷல் பாடல் ஒன்றை இந்த வார ஆரம்பத்தில் கொடுத்திருந்தாலும் மீண்டும் இன்னொரு இசைப்புதிரோடு.

இந்தப் படமும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்த இன்னொரு படம். பலருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு உலோகத்தின் பெயரும், செடியில் தோன்றும் ஒரு பொருளையும் இணைத்தால் படம் பெயர் வரும் அவ்வ்வ்வ் :-))) பின்னர் பாடலைக் கண்டுபிடிக்கலாம் யெப்பூடி நம்ம டீலு 🙂

பதிவில் சிறு குழப்பம் ஏற்படுவதால் நண்பர்
@eestweets சுட்டிக் காட்டியதன் பிரகாரம் ஒரு சிறு திருத்தம். இந்தப் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இருவரும் இசையமைத்திருந்தாலும் தனித்தனியாகவே ஆளுக்கு இரண்டு பாடல்களைக் கொடுத்திருந்தார்கள்.
இந்தப் புதிரில் வரும் பாடல் இளையராஜா மட்டும் இசையமைத்த பாடல்.

பாடலோடு வருக.

#RajaChorusQuiz 123

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : ரெட்டைகுருவி ரெட்டை வாலுக்குருவி இப்ப கூட்டுக்குள்ள தான்
படம் : இரும்புப் பூக்கள்
பாடியவர்கள் : பி.சுசீலா, மனோ, குழுவினர்