#RajaChorusQuiz 111 மலையாளத்தில் ராஜா, கங்கை கொண்ட தமிழ்

#RajaChorusQuiz 111

#RajaChorusQuiz 111a

உண்மையில் இன்றைய புதிருக்காக நான் எடுத்து வைத்திருந்த பாடல் இன்னொன்று. ஆனால் நேற்றிரவு எதோச்சையாக இன்று பகிரும் பாடலின் தமிழ் வடிவம் ஞாபகத்துக்கு வந்து என் கணினியில் ஒலிக்கவிட்டேன்.அப்படியே சிலிர்த்துப் போனேன்.
உடனேயே தமிழ் மற்றும் மலையாளப்பாடல்களின் கோரஸ் பகுதிகளைப் பகுத்து இன்றைய போட்டிக்காக ஒதுக்கினேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வியாழன் இரவு 10.46 மணி 🙂

அந்த இடையிசையோடு வரும் கங்கை அமரனின் குரலும் அதைத் தொடர்ந்த கோரஸ் குரல்களும். பாடகி மட்டும் சளைத்தவரா என்ன? மலையாள மூலப் படத்திலும் தமிழ் மொழி மாற்றுப் படத்திலும் அதே பாடகி. ஆனால் கோரஸ் குரல்களோடு வரும் ஆண் குரல்களில், மலையாளத்தில் இசைஞானி இளையராஜா குரல் கொடுத்திருப்பார். தமிழுக்கு வந்த போது அந்தத் திண்ணையைத் தம்பி எடுத்து விட்டார்.

இந்த இரண்டு பாடல்களிலும் முதல் சரணத்துக்கு முன் வரும் கோரஸ் பகுதியைப் பின்னாலும், இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் கங்கை அமரன் மற்றும் இளையராஜா குரல்களை முன்னாலும் சேர்த்து இங்கே கொடுக்கின்றேன்.

இப்படியான புதுமைகளை இனிக் காண்பது எக்காலம் என ஏங்க வைக்கும் அமைந்த பாடல்கள் இவை. முதலாவது இசைத்துண்டு தமிழ் வடிவமாகவும், இரண்டாவது இசைத்துண்டு மலையாள வடிவமாகவும் இருக்கின்றது.

ஒரு பெண்ணின் தவிப்பு, எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் பாடகியின் குரல், சேர்ந்திசைக்கும் கோரஸ் குரல்கள், இசை, பாடல் வரிகள் எல்லாவற்றையும் இறுகக் கட்டித் திரட்டிய இனிப்புப் பொதி இது. உண்மையில் இப்படியான பாடல்களைக் கேட்கும் போது ஏனென்றே தெரியாமல் கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடிவதில்லை.

மலையாளத்தில் கிரிஷ் புத்தன்சேரியும், தமிழில் பெருமதிப்புக்குரிய அறிவுமதி அண்ணனும் பாடல்வரிகளை இழைத்துச் செதுக்கி அழகிய ஆரமாக்கியிருக்கிறார்கள். ராஜாவின் இசைக்குக் கொடுக்கும் மகத்துவமான மணியாரம் இது.

இரண்டில் ஏதாவது ஒரு பாடலின் ஆரம்ப அடிகளைக் குறிப்பிட்டால் போதும். இரண்டையும் ஒரே பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் உங்களுக்கு போனஸ் புள்ளி கிட்டும்.

தமிழக மற்றும் கேரள முதல்வராகும் வாய்ப்பைத் தவறவிடாதீர் பாடல்களோடு வருக 😉

இன்றைய க்ளூ : விடுதலை, விடுதலை, விடுதலை

#RajaChorusQuiz 111/500

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : மன்னன் கூரைச்சேலை
படம் : சிறைச்சாலை
பாடியவர்கள் : கங்கை அமரன், சித்ரா, குழுவினர்

மலையாளம்
பாடல் : மாரிக்கூடின் உள்ளில்
படம் : காலாபாணி
பாடியவர்கள் : இளையராஜா, சித்ரா, குழுவினர்

Advertisements

66 thoughts on “#RajaChorusQuiz 111 மலையாளத்தில் ராஜா, கங்கை கொண்ட தமிழ்

 1. மன்னன் கூரைச் சேலை சிறைச்சாலை படத்தில் இருந்து… காதல் திருமணம் செய்த என் தோழி கருவுற்று இருக்கும் பொழுது அவங்க கணவர் வரும் வரை இந்தப் பாடலை விரும்பிக் கேட்டதாகச் சொன்னாங்க..அதில் இருந்து இது ரொம்பப் பிடிச்சுப் போச்சு

 2. மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை , படம் : சிறைச்சாலை

 3. #111
  மன்னன் கூரை சேலை – கங்கை அமரன் – சித்ரா
  படம்” சிறைச்சாலை

  #112
  Marikkoodinullil – K. S. Chithra, Ilaiyaraaja
  Movie : Kaalapani (Malayalam)

  Baaghon Ki Bahaarein – K. S. Chithra, M. G. Sreekumar
  Movie: Kaalapani (Hindi)

 4. மாரிப்பூவின் மேலே காலாபானி பாடம் வாவ் வாட்டே ஆல்பம் கலீல்@kaleel_rahuman….

 5. #RajaChorusQuiz 111
  பாடல்: மன்னன் கூரை சேலை
  படம்: சிறைச்சாலை
  #RajaChorusQuiz
  பாடல்: Marikkoodinullil
  படம்: Kaalapani

 6. மாமன்குறை சேலை பாட்டு சிறைச்சாலை படம் கலீல்@kaleel_,rahuman…

 7. Marikkoodin Ullil – Kaalapani in Malayalam 🙂
  மன்னன் கூரைச் சேலை – சிறைச்சாலை 🙂

  amas32

 8. தமிழ்: சிறைச்சாலை
  மன்னன் கூரைச்சேலை…மஞ்சம் பார்க்கும் மாலை
  கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ

  மலையாளம்: காலாபானி
  மாரிக்கூடின் உள்ளில்… பாடும் மாடப்புறாவே

  மலையாளம் தெரியாது குத்துமதிப்பா வரிகள் எழுதிருக்கேன். கன்சிடர் செய்து கொள்ளவும் 🙂

 9. மன்னன் கூரை சேலை மஞ்சம் பார்க்கும் மாலை – சிறைச்சாலை
  இந்தப் பாடல் முதல் முறையாக கேட்கிறேன் .. நன்றி:-) ❤ சித்ரா

 10. மன்னன் கூரை சேலை — சிறைச்சாலை
  மாறிக்கூ டினுள் — காலபாணி

 11. மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை..

  தமிழில் : சிறைச்சாலை

  மலையாளத்தில் : காலாபானி.

 12. மன்னன் கூரை (ச் கிடையாது… Selai 🙂 சேலை – சிறைச்சாலை
  Marikkoodinnullil – kaalapani

  கேட்டதும் கண்டுபிடிச்சூ. ஆனாலும் நம்ம முதல்வர் இல்லன்னு ஆனப்பறம் பொறுமையா கமென்ட் போட்டுக்கலாம் ன்னு எல்லா பாட்டையும் கேட்டுட்டு, (அதும் இந்த பாட்டுல தபு ரியாக்சன்ஸ் நினைவு வந்து விஷுவல்சும் பார்த்துட்டு கமெண்டிங்)

  இந்த மாதிரி பாட்டுகளக் கேக்கறப்ப, மாபியாஸ் பக்கம் நியாயம் இருக்க மாதிரி தோணுது :):)

  @priyakathiravan

 13. மன்னன் கூரைச்சேலை – சிறைச்சாலை (தமிழ்)
  மாரிக்கூடின்னுல்லில் – காலப்பனி (மலையாளம்)

  கோரஸ் போட்டியில வரிகள் வராம பாத்துக்கலாமே ஜீ? வரியக் கூகுள் பண்ணா ஈசியா பதில் கிடைச்சுடுது… 🙂

 14. மாரிக்கூடின் உள்ளில் பாடும் மாடப்றாவே – காலா பாணி
  (நான் வேற படம் ன்னு நினைச்சேன்..அதே தானே …)

 15. மன்னன் கூரைச் சேலை மஞ்சம்பார்க்கும் மாலை… கே.எஸ். சித்ரா & கங்கை அமரன் – சிறைச்சாலை

  மாரிக்கூடனுள்ளில் பாடும் மாடப்ப்றாவே கண்மனியே கானான் வாயோ…. – கே. எஸ். சித்ரா & இளையராஜா – காலாபாணி

  //இப்படியான பாடல்களைக் கேட்கும் போது ஏனென்றே தெரியாமல் கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடிவதில்லை.// இன்று மீண்டும்.

 16. மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் நாளை.. கனவுகள்தான்… – சிறைச்சாலை
  ***
  மாரிக்கூடின் உள்ளில் போடும் தாள… – காலாப்பானி

 17. மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை – சிறைச்சாலை
  Marikkoodin Ullil – Kaalapani (Malayalam)

 18. மன்னன் கூரை சேலை – சிறைச்சாலை

  மாரிக்கோயின் உள்ளே – காலாபாணி

 19. படம்-சிறைச்சாலை
  பாடல் -மாமன் கூரைச் சேலை

 20. Tamil: மன்னன் கூரைச் சேலை from சிறைச்சாலை
  Malayalam: Maarikkoodinulli from Kaalaapaani

 21. சிறைச்சாலை – மன்னன் கூரை சேலை 🙂 இந்த படத்துல இந்த பாட்டு அவ்வளவா கேட்டதே இல்ல மாஸ்டர் 🙂 வெறும் மூணு பாட்டு தான் கேப்பேன் 🙂 நல்ல பாட்டு 🙂

 22. பாடல் : மன்னன் கூறை சேலை
  படம் : சிறைச்சாலை

  பாடல் : மாரிகூடின் உள்ளில்
  படம் : காலாபாணி
  @Qatarseenu

 23. பாடல் : மன்னன் கூரைச் சேலை
  படம் : சிறைச்சாலை

  @vforveeru

 24. 111. பாடல் “மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள்தான் கை கூடாதோ சிறைக்கதவுகள்தான் தாழ் திறவாதோ”. படம் சிறைச்சாலை (1995). சித்ரா, கங்கை அமரன் பாடிய சூப்பர் ஹிட் பாடல்.

  111 A. பாடல் “ மாரிக்கூடினுல்லில் பாடும் மாடப் ப்றாவே”. மலையாளப் படம் காலா பானி (1995). சித்ரா, இளைய ராஜா பாடிய சூப்பர் ஹிட் பாடல்.

 25. மாமன் குறை(?) -சிறைச்சாலை
  மரிக்கூடினுள்ளில்- காலாபானி

 26. தமிழ்: மாமன் கூரை சேலை … -சிறைச்சாலை
  மலையாளம் : marikoodin ullil …-kalapani

  @shanthhi

 27. பாடல்: மாரிக்கூடினில்லில் (மலையாளம்) / மன்னன் கூரைச் சேலை (தமிழ்)
  படம்: காலாபானி (மலையாளம்) / சிறைச்சாலை (தமிழ்)

  மன்னிக்கணும் அண்ணே. போட்டி ஆரம்பத்திலேயே பங்கெடுக்கத் தொடங்கினேன் பிறகு ஏதேதோ காரணங்கள், சோம்பேறித்தனத்தால் விட்டுட்டேன். இனித் தொடர்ச்சியாக பங்கெடுக்க முயல்கிறேன். 🙂

 28. #111: “மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை” சின்னக்குயில், அமர் & கோரஸ் குரல்களில் “சிறைச்சாலை” படப்பாடல்.

  #111a: “மாரிக்கூடினுள்ளில் பாடும் மாடப்பிறாவே கண்மணியே காணான் வாயோ ..” சின்னக்குயில், ராசா & கோரஸ் குரல்களில் “காலபாணி” படப்பாடல்.

 29. 111 மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் படம் சிறைச்சாலை

  111 maarikoodinillil paadum mada Puravae film kalapani

 30. சிறைச்சாலை படத்திலிருந்து மன்னன் கூரைச் சேலை பாடல்.

  மலையாள வெர்ஷன் – Maarikkoodinullil from Kaalapaani

  இந்தப் பாட்டு சில மாசத்துக்கு முன்னாடி #365RQ2லயும் வந்துருந்தது 🙂 .

 31. 111. mannan kooraichchElai manjam paarkkum maalai kanavugaLthaan kaikoodaathO – Siraichaalai sung by Chitra, Gangai Amaran and Chorus
  111a. maarikoodinullil paadum maadappravE kaNmaNiyai kaanaan vaayO – Kaaalaapaani sung by Chitra, ILaiyaraaja and Chorus

  Maestro’s masterpiece. I still vividly remember when some of my friends went for Kaadhal Desam, me and one other friend went for this film (Siraichaalai), as we surely knew we are in for treat musically. The whole duration of the film, I was in tears not just because of the film, for the music in the film and how people forgot his works in just couple of years without knowing what they were truly missing.

  Here we are after almost 18 years after the film released and still we are listening to these gems without an inch of interest going down. Truly mesmerizing melodies with mesmerizing and soulful orchestration.The background score of the film is even more memorable. While I love the Malayalam lyrics, I prefer Thamizh version of songs mainly because of SPB’s rendition.

  This song reaches some unknown surreal destinations which we would have never heard anytime before or after, yet it comes back to its roots at the right time. I can go on and on describing every song’s beauty, but I will come back after doing some homework and recall the memorable moments I relished when listened the first time. Songs which give life to our tired body and mind. These are the songs which carried me through those toughest years of my life when I was preparing for one my most important exams of my life. Not to mention I was successful in exams. As you rightly ended your descriptions with விடுதலை, விடுதலை, விடுதலை, that is not only the film’s theme, it gave me the real independence and turning point in my life.

 32. தமிழ்ப்பாடல்: மன்னன் கூரைச் சேலை
  படம்: சிறைச்சாலை
  மலையாளப் பாடல்: மாரிக்கூடினுள்ளில் பாடும்
  படம்: காலாபானி

 33. மன்னன் கூரை சேலை மஞ்சம் பார்க்கும் நாளை – சிறைச்சாலை.

  In Malayalam, it’s Kaalapaani.

 34. மரிக் கூண்டினுல்லில் ….காலப்பணி
  மன்னன் கூரைச் சேலை….சிறைச்சாலை

 35. #RajaChorusQuiz 111/500

  ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
  இதே பதில்

  பாடல் : மன்னன் கூரைச்சேலை
  படம் : சிறைச்சாலை
  பாடியவர்கள் : கங்கை அமரன், சித்ரா, குழுவினர்

  மலையாளம்
  பாடல் : மாரிக்கூடின் உள்ளில்
  படம் : காலாபாணி
  பாடியவர்கள் : இளையராஜா, சித்ரா, குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s