#RajaChorusQuiz 119 & #RajaChorusQuiz 120 இரட்டை விஜய் இசை விருந்து

v#RajaChorusQuiz 119/500

#RajaChorusQuiz 120/500

ண்ணா வணக்கம்ணா, இந்த வார இறுதியிலும் வழக்கம் போல ரெண்டு புதிர் கொடுப்பேங்கண்ணா நீங்க திங்கக்கெழமை இந்திய நேரம் மதியம் பன்ரெண்டு மணிக்குள்ளார பதிலை சொல்லணும்னு கண்டீஷன் வைக்கிறேன்ங்கண்ணா.

🙂 இந்த வார இறுதியில் ஒரு ஸ்பெஷல் அது உங்கள் எல்லோருக்குமே தெரியும் நடிகர் விஜய் இன் பிறந்த நாள் ஜூன் 22. எனவே அவரின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் முகமாக நடிகர் விஜய்க்காக இசைஞானி இளையராஜா கொடுத்த படங்களில் இரண்டு படங்களில் இருந்து இந்த வார இறுதி இசைப்புதிர்கள் இடம்பெறுகின்றன.

இங்கே கொடுக்கப்பட்ட இசைப்புதிரில் #RajaChorusQuiz 119 பாடல் நேரப்பாடலாக அமைகின்றது. பாடலின் இடையிசையில் வரும் இரண்டு கோரஸ் பகுதிகளை இணைத்திருக்கிறேன் எவ்வளவு அழகான ஆலாபனை அது. இதே மாதிரி இசைக்கோர்வை இன்னொரு பாட்டு ரஜினி நடிச்ச படத்தில் இருக்குதல்லவா? ஆனா நீங்க விஜய் படப்பாட்டுத் தான் சொல்லணும்ணா.

ஆனால் #RajaChorusQuiz 120 இன் இசை ஒரு பாடலின் ஆரம்ப இசையாக இருக்கின்றது. அந்தப் பாடலை முழுமையாக நீங்கள் கேட்கும் போது குறித்த பாடலின் முடிவில் வரும் பாடல் வரிகள் அதே படத்தில் வரும் இன்னொரு பாடலின் ஆரம்ப வரிகளாக இருக்கும். எனவே கேள்வி என்னவெனில் நீங்கள் சொல்ல வேண்டியது அந்த மற்றைய/ இன்னொரு பாடல் எது என்பதே. எனவே பதிலளிக்கும் போது கவனமாகப் பதிலளிக்கவும்.
அந்த அரிதான பாடலைக் கண்டுபிடித்தால் கட்டிப் போடும் உங்களை அது.

இசைஞானி இளையராஜா, நடிகர் விஜய் இற்கு இசையமைத்தவை சொற்பமான படங்கள் எனினும் எல்லாப் படங்களின் பாடல்களுமே தவிர்க்க முடியாத இசை விருந்து என்று தங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை யுவர் ஆனர் 🙂
எனவே இந்த இசைப்புதிர்கள் குறித்த க்ளூ அதிகம் இல்லாமல் விஜய், இசைஞானி இளையராஜாவின் இசையில் நடித்த படங்களின் பாடல்களை மேய்ந்தாலே பதில் கிட்டும்.

ஓக்கே ப்ரோ சீக்கிரமா பதிலோடு வாங்கண்ணா
#RajaChorusQuiz 119

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல் : ஒரு சுடர் இரு சுடர்
படம் : ராஜாவின் பார்வையிலே
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ, குழுவினர்

#RajaChorusQuiz 1120

புதிரில் கொடுத்த இசை
பாடல் : தரை வராமல்
படம் : சந்திரலேகா
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன் குழுவினர்

அந்தப் பாடல் வழியாகக் கேட்கப்பட்ட பாடல்
பாடல் : அரும்பின் தளிரே
படம் : சந்திரலேகா
பாடியவர்கள் : அருண்மொழி, குழுவினர்

Advertisements

50 thoughts on “#RajaChorusQuiz 119 & #RajaChorusQuiz 120 இரட்டை விஜய் இசை விருந்து

  1. 119)ஒரு சுடர் – ராஜாவின் பார்வையிலே – மனோ,ஜானகியம்மா

    120- விடை -அரும்பும் தளிரே சந்திரலேகா – அருன்மொழி

    120 புதிருக்காக கொடுக்கப்பட்ட பாடல் – தரை வராமல் – அருன்மொழி,உன்னி கிருஷ்ணன்

  2. முதல் பாடல் : ஒரு சுடர் இரு சுடர் படம் : ராஜாவின் பார்வாயிலே
    இரண்டாவது : இரவு பகளை தேட இதயம் ஒன்றை தேட படம் : கண்ணுக்குள் நிலவு

  3. #119. ஒரு சுடர் இரு சுடர் – ராஜாவின் பார்வையிலே

  4. தூக்கக் கலக்கத்தில் கேள்வியைச் சரியாப் படிக்கவே இல்லை.:(((

    இரண்டாவது பாடல்: அரும்பும் தளிரே
    படம்: சந்திரலேகா

  5. முதல் பாடல் ஒரு சுடர் இரு சுடர் ராஜாவின் பார்வையிலே படத்திலிருந்து இரண்டாவது பாடல் பூங்காற்றே கொஞ்சம் பாடல் ப்ரெண்ட்ஸ் படத்திலிருந்துன்னு நினைக்கேன் கலீல்@kaleel_rahuman

    • அரும்பும் தளிரே பாடல் சந்திரலேகா படத்திலேருந்து என்னா ட்ரிக்கா கேக்குறீங்க நான் வேற படத்துல எல்லாம் பொருத்திப் பார்த்துட்டேன் கடைசி வரியை….பூந்தென்றலே வா ன்னு தானே முடயுதுன்னு அவ்வ். கலீல்@kaleel_rahuman

  6. ஒரு சுடர் இரு சுடர் படம் ராஜாவின் பார்வையிலே..இரண்டாவது இசை தரை வராமல்..இறுதியில் வரும் பாடல் அரும்பும் தளிரே..பாடல் ..போங்க பாஸ் ..நான் இந்த ஆட்டைக்கே வரல..நெம்ப கஷ்டமா இருக்கு..எந்த இசை கொடுக்கிறீங்களோ அதற்குரியதே கண்டுபிடிக்க சிரமம்..இதுல இப்படி வேற சொல்றீங்களே

  7. 119:ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி .திரைப்படம் :ராஜவின் பார்வையிலே
    120:படம் : சந்ரலேகா?

  8. 120: இன்னொரு பாடல் :அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பணியே பனித் தூய்மையே
    மூலப் பாடல் : தரை வராமல் ஆகாயமே
    திரைப்படம் : சந்ரலேகா

  9. #119 ஒரு சுடர் இரு சுடர் , ராஜாவின் பார்வையிலே. என்னா வில்லத்தனம்! #120 will need some time 🙏

  10. #120 தென்றலே பேசும் தென்றலே , சந்திரலேகா? Not sure

  11. 119-ராஜாவின் பார்வையிலே(ல்)-ஒரு சுடர் இரு சுடர் முத்து சுடர் ஆடுதடி

    120-சந்திர லேகா- அரும்பும் தளிரே

  12. 119-ராஜாவின் பார்வையிலே(ல்)-ஒரு சுடர் இரு சுடர் முத்து சுடர் ஆடுதடி

    120-சந்திரலேகா-தரை வராமல்

  13. 120/500=Arumbum thalirey from Chandralekha .First time hearing.Made me cry.Thank you and Raja.

  14. #RajaChorusQuiz 119/500
    ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர்
    மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி
    திருவருள் வழங்கிட தெருவெங்கும் விளங்கிட
    வண்ணச் சுடர் ஆடுதடி…

    படம்: ராஜாவின் பார்வையிலே
    பாடியவர்கள்: மனோ – எஸ் ஜானகி & குழுவினர்
    படம் வெளியான ஆண்டு: 1995
    *************************************************************************************************
    #RajaChorusQuiz 120/500

    நீங்கள் கொடுத்த இசை துணுக்கின் பாடல்:
    ”தரை வராமல் ஆகாய மேகம் தொலை தூரம் நீந்தி போகுமே…”
    ஆனால் இந்தப் பாடலின் இறுதியில் வரும் வரிகள் தான் இன்றைய புதிருக்கு சரியான பதில்:

    அது இந்த வரிகள் தான்:

    ”அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்
    பனியே பனித்தூய்மையே
    மலரும் மனமே மனம் ஏந்திடும்
    கனியே கனிப்பாவையே
    வானாடும் மீனே நீதானே வேண்டும்
    ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்”

    படம்: சந்திரலேகா
    பாடியவர்கள்: அருண்மொழி & கீதா (சரியாக தெரியவில்லை) & குழுவினர்
    படம் வெளியான ஆண்டு: 1995
    பாடல் வரிகள்: வாலி

  15. 119
    படம்;-ராஜாவின் பார்வையில்
    பாடல்;-ஒரு சுடர்

  16. 119:
    பாடல்: ஒரு சுடர் இரு சுடர்
    படம்: இராஜாவின் பார்வையிலே

    120:

    கொடுக்கப்பட்ட இசைத் துணுக்கின் பாடல்: தரை வராமல் ஆகாய மேகம்
    கண்டுப்பிடிக்க வேண்டிய பாடல்: அரும்பும் தளிரே தளிர்தூங்கிடும்
    படம்: சந்திரலேகா

  17. 120
    படம்;-சந்திரலேகா
    பாடல் ;-அல்லா உன் ஆணைப்படி

  18. 119க்கான விடை:
    பாடல்: ஒரு சுடர் இரு சுடர்
    படம்: ராஜாவின் பார்வையிலே

    120க்கான விடை”
    கோரஸ் இடம்பெற்ற பாடல்: தரைவராமல் ஆகாய மேகம்
    அதன் முடிவிலிருந்து தொடங்கும் பாடல்: அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்
    படம்: சந்திரலேகா

    இந்த ‘அரும்பும் தளிரே’ பாடலை எழுதியவர் இப்பாடலைப் பாடிய ராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் இசைக்கலைஞர் அருண்மொழி என்கிற நெப்போலியன்தான் என்பது கூடுதல் சிறப்பு.

  19. முதலாவது பாடல்: ராஜாவின் பார்வையிலே – ஒரு சுடர் இரு சுடர்
    இரண்டாவது பாடல் : ராஜாவின் பார்வையிலே – தலைவராம
    நீங்கள் கேட்டபடி இரண்டாவது கேள்விக்கான விடை : அரும்பும் தளிரே

  20. #119/500:
    “ஒரு சுடர் இருச்சுடர் ஒளிச்சுடர் மணிச்சுடர் முத்துச்சுடர் ஆடுதடி” – மனோ, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “ராஜாவின் பார்வையிலே” படப்பாடல்.

    #120/500:
    ”அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே…” அருண்மொழி, கீதா & கோரஸ் குரல்களில் “சந்திரலேகா” படப்பாடல். உன்னி கிருஷ்ணன் & அருண்மொழி குரல்களில் வரும் versionனும் அருமையாக இருக்கும் ( நீங்கள் தந்த க்ளுப்பாடல் – ”தரை வராமல் ஆகாய மேகம்” – அட்டகாஷ் தான்).

    இரண்டுமே அம்சமான பாடல்கள்!!!

  21. விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்ணா 🙂 .

    119/500:
    ராஜாவின் பார்வையிலே படத்திலிருந்து ஒரு சுடர் இரு சுடர் பாடல்.

    120/500:
    சந்திரலேகா படத்திலிருந்து அரும்பும் தளிரே பாடல்.

  22. 119/500 – ஒரு சுடர் இரு சுடர் ஒளிச்சுடர் மணிச்சுடர் முத்துசுடர் ஆடுதடி… – எஸ். ஜானகி & மனோ – ராஜாவின் பார்வையிலே
    120/500 – அரும்பும் தளிரே தளிர் ஓங்கிடும் பனியே பனித் தூய்மையே … – உன்னிகிருஷ்ணன் – சந்திரலேகா

  23. #120 -அரும்பும் தளிரே, தளிர் தூங்கிடும் பனியே..
    சந்திரலேகா.
    கேட்டதும் கண்களில் நீர் கோர்க்கிறது . அழகான பாடல். தேடலும் இனிதே இந்த போட்டியில்:)

  24. 1.ஒரு சுடர்…இரு சுடர்…
    ராஜாவின் பார்வையிலே.

    2.அரும்பும் தளிரே…
    சந்திரலேகா

  25. 119. oru sudar iru sudar oLichchudar maNichchudar muththuchchudar aaduthadi – Raajaavin PaarvaiyilE sung by Mano, S Janaki and Chorus
    120. arumbum thaLirE – Chandralekha sung by Arunmozhi, Geeta and Chorus [audio clip was tharaivaraamal sung by Arunmozhi, Unnikrishnan and Chorus]

    Wonderful selections! I love mid-late 90s Raja’s songs. It gave a new dimension to film music.

    oru sudar is a classic, I am lost on words how to describe the melody, harmony embellishments and bass rhythm.

    arumbum thaLirE gives a mystical feel. It takes us beyond earth and to those undiscovered planets and other parts of our galaxy and milky way. Love is such a unique phenomenon. The arrangements especially during charaNams describe that feel as the lovers are exhibiting their ecstasy. The interludes enhance the feel.

    These two songs are perfect examples on how Maestro plays and gives his best given only synth as the tool. It is the man behind the compositions, not the tools. Thanks for reminding these classics, I am going to play all these songs today.

    • tharaivaraamal aagaaya mEgham is a beautiful slow version of arumbum thaLirE that when it starts right as the charaNam melody, it doesn’t strike it is arumbum thaLirE slower version. Only when the pallavi comes in it strikes us. That’s why he starts with a 9 second chorus so that the song does not start abruptly. Very thoughtful compositions by Maestro and very thoughtful quizzing! Very interesting 🙂

  26. 119 – ஒரு சுடர் – ராஜாவின் பார்வையிலே
    120 – அரும்பும் தளிரே – சந்திரலேகா

  27. ஊருக்கு வந்து இறங்கியாச்சுங்கண்ணா .. பெட்டியை எடுத்த கையுமாக வந்துட்டேங்கண்ணா ..

    119/500. பாடல் “ஒரு சுடர் இரு சுடர் ஒளிச்சுடர் மணிச்சுடர் முத்துச் சுடர் ஆடுதடி”. படம் ராஜாவின் பார்வையிலே (1995). மனோ, ஜானகி, கோரஸ் குழு பாடிய பாடல்.

  28. 120/500. இந்த இசைத் துணுக்கு வரும் பாடல் “தரை வராமல் ஆகாய மேகம் தொலை தூரம் நீந்திப் போகுமே”. படம் சந்திர லேகா (1995). உன்னிகிருஷ்ணன், அருண்மொழி, கோரஸ் குழு பாடிய பாடல்.

    இந்தப் பாடலில் கடைசியில் துவங்கும் என நீங்கள் கேட்ட / குறிப்பிட்ட அந்த பாடல் அதே படத்தில் வரும் ”அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே”. அருண்மொழி பாடிய அட்டகாஷ் பாடல்.

  29. 119 பாடல் : ஒரு சுடர்
    படம் : ராஜாவின் பார்வையிலே
    (அந்த ரஜினிப்பாடல் – மலைக்கோவில் வாசலில்)

    120 பாடல் : அரும்பும் தளிரே
    படம் : சந்திரலேகா

    அருமையான தேர்வுகள்….
    @Qatarseenu

  30. RajaChorusQuiz 119/500
    Oru sudar iru sudar olichchudar manichchudar muththuchudar aaduthadhee from “Raajavin Paarvaiyile”

    #Vijay birthday kku ajit kooda serndhu nadichcha padappaattu kuduththa ungal “Nu Ka Pi Ni” Bro :):)

    @priyakathiravan

  31. #RajaChorusQuiz 119

    ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
    இதே பதில்

    பாடல் : ஒரு சுடர் இரு சுடர்
    படம் : ராஜாவின் பார்வையிலே
    பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ, குழுவினர்

    #RajaChorusQuiz 1120

    புதிரில் கொடுத்த இசை
    பாடல் : தரை வராமல்
    படம் : சந்திரலேகா
    பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன் குழுவினர்
    [audio src="http://m02.wapkafile.com/music/2669015/2268023/5ce8YJ57w0OgMvMkm90ROZNasN7K2XWfVxLXFp92wjtOOQT8/736f2.mp3" /]

    அந்தப் பாடல் வழியாகக் கேட்கப்பட்ட பாடல்
    பாடல் : அரும்பின் தளிரே
    படம் : சந்திரலேகா
    பாடியவர்கள் : அருண்மொழி, குழுவினர்

    [audio src="http://m05.wapkafile.com/music/2669018/2268023/ee4cu9djCs2uXZF1Niubl9jdThgWhfXOJv3qoXwF0D5mx5F9/9f393.mp3" /]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s