#RajaChorusQuiz 159 பாடகி சித்ராவின் இசை முத்துகளில் நான்காவது முத்து

#RajaChorusQuiz 159/500

குழந்தையோடு பாடும் ஒரு பாட்டாக இன்றைய புதிர்.

மிகவும் பிரபலமான திகில் வகைப் படம், மலையாள இயக்குனர். படத்தின் நாயகியின் பெயர் 80 கள், 90 களில் பிரபலமாக இருந்த கதாநாயகனை நினைவுபடுத்தும்.

இந்தப் பாடல் ஜேசுதாஸ், சித்ரா குரல்களிலும், தனியாகவும் கிடைக்கின்றது.

பாடலோடு வருக.
#RajaChorusQuiz 159

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: ஒரு கிளியின் தனிமையிலே
படம்: பூவிழி வாசலிலே
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா , குழுவினர்

Advertisements

#RajaChorusQuiz 158 பாடகி சித்ராவின் இசை முத்துகளில் மூன்றாவது முத்து

#RajaChorusQuiz 158/500

கடல் மீது காதல் கொண்டு வைத்த படத்தலைப்பு. ஒரு புது நாயகியும் வாரிசு நடிகரும் நடித்த 90 களில் வெளிவந்த படம்.

இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால் பாடல்களுக்கு இசை இளையராஜா. பின்னர் தயாரிப்பாளருக்கும் இளையராஜாவுக்கும் மனஸ்தாபம் வரவே பின்னணி இசையை இன்னொரு இசையமைப்பாளர் கவனித்துக் கொண்டார்.

இந்தப் பாடலில் வரும் முதல் இரண்டு சொற்கள் ஒன்றே தான். ஜெயிச்சுக் காட்டுங்க மக்கா

பாடலோடு வருக.
#RajaChorusQuiz 158

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில் மணி
படம்: கட்டுமரக்காரன்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா , குழுவினர்

#RajaChorusQuiz 157/500 பாடகி சித்ராவின் இசை முத்துகளில் இரண்டாவது முத்து

#RajaChorusQuiz 157/500

நான் தான் என் மனசு சொல்றாப்ல நடப்பேன் என்பதற்குப் பயன்படுத்தப்படும் சொற்தொடர்தான் படத்தின் தலைப்பு.

ஒரே நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை இயக்கியவர் இதற்கு முதல் படத்தின் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார். இரண்டு படத்திலும் ஆண்பாடகர் அதிக பாடல்களைப் பாடியிருக்கிறார்.

இங்கே கொடுக்கப்பட்ட ஜோடிப்பாடல் அதிகம் அறிமுகமாகாததற்குக் காரணம் இதே படத்தின் இன்னொரு கலக்கல் பாடல் என்றும் சொல்லலாம்.

எங்களுக்கும் நகைச்சுவை பண்ணத் தெரியும்ல அங்ங் என்று நாயகன் மாறுபட்ட வேடத்தில் நடித்த படம்.

பதிலைச் சொன்னால் மன்னர் பதவி இல்லாட்டி நீ எந்திரி 🙂
பாடலோடு வருக.

#RajaChorusQuiz 157

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: தேகம் சிறகடிக்கும்
படம்: நானே ராஜா நானே மந்திரி
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன், சித்ரா , குழுவினர்

#RajaChorusQuiz 156 பாடகி சித்ராவின் ஐந்து இசை முத்துகள் – முதல் முத்து

ir-ksc
#RajaChorusQuiz 156/500

பாடகி சித்ராவின் பிறந்த நாளாக நேற்றைய தினம் அமைந்திருந்தது. ஒரு நாள் தாமதமாக சின்னக்குயில் சித்ராவுக்கான பிறந்த நாள் வாழ்த்தோடு இந்த வாரத்தின் ஐந்து நாட்களும் சித்ரா பாடிய ஐந்து இன்னிசை முத்துகளோடு உங்களைச் சந்திக்க இருக்கிறது ராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள்.

இன்று வரும் பாடல் சித்ராவின் பிறந்த நாளுக்கான பாடலாகக் கொடுக்க வேண்டும் என்று நான் மனதில் நினைத்து எடுத்து வைத்திருந்த பாடல்.

இந்தப் பாடலின் கோரஸ் குரல்கள் நாயகி தன் மன உணர்வை வெளிப்படுத்தும் போது அதை ஆமோதித்து வழிமொழிதல் செய்வது போல அழகாகப் பின்னப்பட்டிருக்கும்.
பாடலின் ஆரம்பம் மற்றும் இரண்டு சரணங்களில் கலந்திருக்கும் இந்த கோரஸ் குரல்களைப் பிணைத்து இங்கே தந்திருக்கிறேன்.

சித்ராவுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட பாடல் இது. இதே தொனியில் எஸ்.ஜானகிக்கு சின்னச் சின்ன வண்ணக்குயில் பாடலைச் சேர்க்கலாம்.

மிகவும் சுலமான பாடல், கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஏதாவது திசை நோக்கிப் பிரார்த்திக்கவும் பாடல் வந்து விழும் 🙂

பதிவில் இடம்பெற்ற புகைப்படம் நன்றி: jackofall.blogspot.com

#RajaChorusQuiz 156

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: வந்ததே ஓ குங்குமம்
படம்: கிழக்கு வாசல்
பாடியவர்கள் : சித்ரா , குழுவினர்

#RajaChorusQuiz 154 & #RajaChorusQuiz 155 இரு காதலிகளுக்கு ஒரே ஜானகி

#RajaChorusQuiz 154/500

#RajaChorusQuiz 155/500

வணக்கம் மக்கள்ஸ், இந்த வார இறுதிக்கான போட்டிப்பாடல்கள் எவை என்ற பதிலை வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக அறியத்தரவும்.
சரி இனி இந்த வார இறுதியில் கொடுத்த பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

இங்கே தந்திருக்கும் இரண்டு பாடல்களிலும் எஸ்.ஜானகி இடம்பெற்றிருக்கிறார். ஒன்றில் இன்னொரு பின்னணிப் பாடகரும் இணைந்திருக்கிறார்கள். இரண்டுமே காதலிகள் பாடும் பாடல்கள். ஒன்றில் எஸ்.ஜானகியின் குரலில் குறும்பும், துள்ளிசையும் கலந்திருக்கும்.
இன்னொன்றில் அமைதியாக, சோகம் இழையோடுமாற் போல ஒரு தொனியோடு பாடியிருப்பார். இந்த இரண்டு பாடல்களைக் கேட்கும் போதுதான் எஸ்.ஜானகி போன்ற பாடகிகளின் அசுரத்தனமான உழைப்பு ஒரு பாடலை வித்தியாசப்படுத்த இசைஞானிக்கு எவ்வளவு தூரம் கைகொடுத்திருக்கின்றது என்பது புலனாகும்.

இரண்டு படத்தலைப்பிலும் பெண்ணை வர்ணிக்கும் அல்லது பெண்களை உயர்த்திப் பேசும் சொற்கள் இடம்பெற்றிருக்கும். அந்தச் சொற்களில் ஒன்று பூலோகத்தில் அந்தஸ்த்தில் உயர்ந்த பெண், இன்னொன்று மேலோகப் பெண். இவற்றில்
ஒரு சொல் ஆண், பெண்ணுக்கான பொதுச் சொல்லாகவும் உண்டு.

அட்டகாசமான இரண்டு பாடல்கள், பதில்களோடு வருக.
#RajaChorusQuiz 154

ஓக்கே மக்கள்ஸ் இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இதே பதில்

பாடல்: ராஜா ராஜா தான்
படம்: ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, அருண்மொழி, குழுவினர்

#RajaChorusQuiz 155

பாடல் : ஒரு நாள் அந்த ஒரு நாள்
படம்: தேவதை
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்