#RajaChorusQuiz 189 & 190 தேவரின் யானை இரண்டு

#RajaChorusQuiz 189

#RajaChorusQuiz 190

யானைப்படம் என்றால் ஒன்றை இலகுவாகப் பிடித்து விடுவீர்களே. இரண்டு படங்களிலுமே தேவரின் யானை நடித்திருக்கிறது. இரண்டு படங்களுமே தமிழின் உச்ச நட்சத்திரங்கள் நடித்த படங்கள் இவை.

இந்தப் பாடலின் இன்னொரு ஒற்றுமை பாடிய ஆண், பெண் மூலப் பாடகர்கள் இருவரும் இரண்டு பாடலிலும் ஒருவரே

வரும் திங்கள் இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக பாடல்களோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 189

பாடல் : நதியோரம் நாணல்
படம் : அன்னை ஓர் ஆலயம்
பாடியவர்கள் : பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

#RajaChorusQuiz 190

பாடல் : விழியில் என் விழியில்
படம் : ராம் லக்‌ஷ்மண்
பாடியவர்கள் : பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Advertisements

#RajaChorusQuiz 188 மாண்புமிகு முன்னாள் அமைச்சரின் ஆசை

#RajaChorusQuiz 188

அறந்தாங்கி இந்த முன்னாள் மாண்புமிகு அமைச்சரை ஆறு முறை தாங்கியிருக்கிறது. இவர் தயாரிப்பாளராகவும் இருந்தவர். பின்னர் ஒரு வெற்றிப்படத்தால் தானே அரிதாரம் பூசினால் என்ன என்று நடிக்க வந்த படம் இது.

ஆனால் ரசிகர்களின் பார்வை இவர் மீது படவில்லை அப்போது, இப்போது வாக்காளர்களும் கண்டுக்கவில்லை.  இந்தப் போட்டிப்பாடல் ஒரு இசைப்போட்டியாக மேற்கத்தேய, சாஸ்திரீய சங்கீதம் கலந்த அட்டகாசமான பாடல்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 188

பாடல் : இதழ் இனிக்க இசைக்கும்
படம் : அக்னி பார்வை
பாடியவர்கள் : சித்ரா, மனோ, குழுவினர்
நாயகன் : திருநாவுக்கரசர்

#RajaChorusQuiz 187 மோகம் மூன்று விநாடிகள்

#RajaChorusQuiz 187

வெகு பிரபலமான பாடலில் கோரஸ் வரும் இசைப்பகுதிகளை இறுகக் கட்டிக் கொடுக்கிறேன். வெறும் மூன்று விநாடிகள் வரும் இசை ஜாலம் தான் ஆனால் பாடலைக் கூவிக் கொண்டே கண்டுபிடித்து விடுவீர்கள்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 187

பாடல் : ஏதோ மோகம்
படம் : கோழி கூவுது
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, கிருஷ்ணசந்தர், குழுவினர்

#RajaChorusQuiz 186 கிராமத்துச் சொந்தம்

#RajaChorusQuiz 186

கிராம நாயகன் நடிச்ச அதிகம் பிரபலம் இல்லாத ஒரு படம். பெயர் கூட இசையோடு இணைந்திருக்கும். இதில் அண்ணன் சைக்கிள் ஓட்டுறாப்ல (சைக்கிள் இல்லாம) ஒரு ஆட்டம் போடுவார் பாருங்க 😉 சரி அதை நீங்களே பார்த்துடுங்க.

இப்ப நீங்க பாட்டோடு வாங்க.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 186

பாடல் : பூவே பூவே பொன்னம்மா
படம் : பாட்டுக்கு நான் அடிமை
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், சித்ரா, குழுவினர்

#RajaChorusQuiz 185 காதல் இளவரசன் அழைக்கிறான்

#RajaChorusQuiz 185/500

காதல் இளவரசன் என்று இவருக்கு அந்த நாளில் பட்டம் இருந்திருக்கு, கூடவே படத்தின் பேரும் காதலோடு சம்ப்ந்தப்பட்டது.

அக்கா, தங்கையே நாயகனோடு இணைந்து நடித்த படம்.

சூப்பர் எண்பதுகள் என்றால் இந்தப் பாடலையும் சேர்க்க வேண்டும்

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 185

பாடல் : காதல் மகராணி
படம் : காதல் பரிசு
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

#RajaChorusQuiz 184 கேப்டன் விஜய்காந்த் பிறந்த நாள் இசை

#RajaChorusQuiz 184/500

இன்று நடிகர் விஜய்காந்த் இன் பிறந்த நாள். எனவே அவரை வாழ்த்துமாற்போல ஒரு சிறப்பான பாடல் ஒன்று. பாடலில் வரும் கோரஸ் பகுதி கொடுக்கும் குரலோசையிலேயே பாடலைக் கண்டுபிடித்து விடுவீர்கள்.

அவ்வளவு இலகுவான பாடல். உங்களை நான் கஷ்டப்படுத்த மாட்டேன் ஏன்னா நான் ரெம்ப நல்ல்லவன் தங்க மனசுக்காரன் :-))

நடிகர் விஜய்காந்த் படங்களுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்த அத்தனை படங்களிலும் கலக்கலான பாடல்கள் இருக்கும். ஏனோ இவர் படங்களில் வந்த பாடல்கள் கொஞ்சம் தனித்துவமாக இருப்பது போலவும் தெரியும்.
வைதேகி காத்திருந்தாள், நினைவே ஒரு சங்கீதம், அம்மன் கோயில் கிழக்காலே போன்ற படங்களின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் இதில் எது மிகச்சிறந்தது என்ற போட்டி வைத்தால் எல்லாமே சம வாய்ப்பில் வெற்றி பெறும்.

இங்கே கொடுக்கப்பட்ட பாடல் சினிமாவைத் தாண்டி, கேப்டனின் அரசியல் வாழ்வுக்கும் தற்போது உதவுகிறது.

பாடலோடு வருக குறிப்பாக முதலடியில் வரும் அந்த ஒரு சொல் உடன் வந்தாலே முதல்வர்.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 184

பாடல் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்
படம் : பொன்மனச் செல்வன்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், சித்ரா, மனோ, குழுவினர்

#RajaChorusQuiz 182 & #RajaChorusQuiz 183 கதாநாயகனுக்கு கிட்டாத பாட்டுகள்

#RajaChorusQuiz 182/500

#RajaChorusQuiz 183/500

ஓக்கே மக்கள்ஸ் இன்னொரு வார இறுதியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வார இறுதிப் போட்டியும் வழமை போல் இரண்டு பாடல்களுக்கும் பொது ஒற்றுமை கிட்டும் பாடல்களாக அமைகின்றன.

இந்தப் பாடல்கள் இரண்டையும் கண்டுபிடித்து நீங்கள் வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக இங்கே கொடுத்து விடுங்கள்.

இந்த இரண்டு பாடல்களும் எண்பதுகளில் வில்லனாக, பின்னர் கதாநாயகனாகத் திகழ்ந்த ஒரு நடிகர் நாயகன் வேஷம் கட்டிய போது கிட்டிய ஆரம்ப காலப் படங்கள்.

இங்கே கொடுக்கப்பட்ட இரண்டு பாடல்களிலும் அவர் தோன்றி நடிக்கவில்லை. ஒரு படத்தின் தலைப்பு திருமணத்தோடு சம்பந்தப்பட்டிருக்கும்.

இன்னொரு படத்தின் பாடலே திருமணம் கண்ட இளம் தம்பதிக்கான பாட்டு.

இந்தப் பாடல்களில் ஒன்றை இளையராஜாவும் ஆரம்ப வரிகளில் சிறு மாற்றதோடு இன்னொரு பாடலாகப் பாடியிருப்பார்.

இங்கே தந்திருக்கும் இரண்டு பாடல்களையும் இரண்டு வெவ்வேறு பெண் பாடகிகள் பாடியிருக்கிறார்கள்.

அதிகம் கேட்டிருக்க மாட்டீர்கள் இந்த இரண்டு பாடல்களையும், சிலர் கேட்டே இருக்க மாட்டீர்கள். ஆனால் கேட்டால் நெஞ்சை அள்ளும் அற்புதமான மெல்லிசை நாதம் கொண்டு வரும் பாடல்கள்.

 

பாடல்களோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 182

பாடல் : இனிமேல் நாளும் இளங்காலை தான்
படம் : இரவு பூக்கள்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்

#RajaChorusQuiz 183

பாடல் : காலம் இளவேனில் காலம்
படம்: விடிஞ்சா கல்யாணம்
பாடியவர்கள் : சித்ரா, குழுவினர்