#RajaChorusQuiz 185 காதல் இளவரசன் அழைக்கிறான்

#RajaChorusQuiz 185/500

காதல் இளவரசன் என்று இவருக்கு அந்த நாளில் பட்டம் இருந்திருக்கு, கூடவே படத்தின் பேரும் காதலோடு சம்ப்ந்தப்பட்டது.

அக்கா, தங்கையே நாயகனோடு இணைந்து நடித்த படம்.

சூப்பர் எண்பதுகள் என்றால் இந்தப் பாடலையும் சேர்க்க வேண்டும்

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 185

பாடல் : காதல் மகராணி
படம் : காதல் பரிசு
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Advertisements

54 thoughts on “#RajaChorusQuiz 185 காதல் இளவரசன் அழைக்கிறான்

 1. படம்-காதல் பரிசு
  பாடல்-காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்

 2. காதல் பரிசு திரைப்படத்திலிருந்து – காதல் மஹராணி பாடல்

 3. காதல் மகராணி கவிதை பூ விரித்தாள் – காதல் பரிசு

 4. காதல் மஹராணி.. காதல் பரிசிலிருந்து.. கரெக்டா காபி அவர்களே!
  pizhaithiruthi

 5. காதல் மகராணி
  காதல் பரிசு

  நன்கு தெரிந்த பாடல். என்றாலும், இன்று மீட்டிங்கில் மாட்டிக்கொண்டதால், நினைவுக் கிறுக்கல்கள் மட்டும் எழுதுகிறேன்!

  1985இல் சத்யா மூவிஸ் தயாரித்த காக்கி சட்டை ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. கமல்ஹாசனுக்கும் வரிசையாக (சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, காக்கி சட்டை என்று) சூப்பர் ஹிட் படங்கள் வந்தன. தமிழில் தேர்வு செய்து சில படங்களே நடித்த கமல், இந்த சமயத்தில்தான் ஹிந்தியிலும் நடித்து வந்தார். ஹிந்தியில் படங்கள் தோற்ற போதிலும், தமிழில் அவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகவே அமைந்தன. காக்கி சட்டைக்குப் பிறகு, அவர் தமிழுக்கே முழுதுமாகத் திரும்பி விட்டார்.

  வெற்றிப் படமான காக்கிச் சட்டையின் ஹீரோக்களான கமலையும், இளையராஜாவையும் வைத்து சத்யா மூவீஸ் தொடங்கிய அடுத்த படம்தான் காதல் பரிசு. அதே ஆறு எழுத்து சென்டிமென்ட் (superstition), அருமையான பாடல்கள், கமலின் நடனம் எல்லாம் அமைந்த போதிலும் திரைக்கதை சரியாக அமையாததில் படம் எதிர் பார்த்த வெற்றி அடையவில்லை. அந்தக் காலகட்டத்தில் வந்த அந்த ஒரு நிமிடம், விக்ரம் முதலிய படங்கள் ராஜாவுக்கு வெற்றியாகவும், கமலுக்குத் தோல்வியுமாகவே அமைந்தன. கமல் வெற்றிக்காகப் புன்னகை மன்னன் வரை காத்திருக்க நேர்ந்தது.

  ராஜாவின் பாடல்கள் அன்று கேட்ட மாத்திரத்தில் பிரம்மாண்டமான இசையுடன் வசீகரித்து இன்றும் கேட்கும்படி இருக்கின்றன.

  • இந்தப் படத்தில் வந்த “ஹேய் உன்னைத்தானே” பாடலின் ரிதம்தான் முக்காலா முக்காப்லா பாடல் ரிதத்தின் முன்னோடி (எனக்குத் தெரிந்த வரையில்) 🙂

 6. காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்.. – எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி – காதல் பரிசு

 7. காதல் மகராணி – காதல் பரிசு படத்தில் இருந்து அதி அற்புதமான பாடல். My most fav song of this album.

  Muthulingam deserves s Special mention for the lovely Lyrics.

  “கவிதைப்பூ விரித்தாள்
  புதுக்கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்
  முத்துப் போல் சிரித்தாள்
  மொட்டுப் போல் மலர்ந்தாள்
  விழியால் இவள் கணை தொடுத்தாள்”

  இது மாதிரி இப்போல்லாம் யார் எழுதுறாங்க ?

 8. காதல் மகராணி – காதல் ரிடு பரிசு படம். 1000முறை இப்பாடலைக் கேட்டிருந்தாலும் இந்த ‘இம’ ரீங்காரத்தை இப்போது தான் தனித்துவமாக்க் கேட்கிறேன்.

 9. பாடல் ” காதல் மஹராணி கவிதைப் பூ விரித்தாள், புதுக் கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள் ”. படம் காதல் பரிசு (1987). எஸ்பிபி, ஜானகி பாடிய இனிய டூயட்.

 10. “காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்” SPB, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “காதல் பரிசு” படப்பாடல்.

 11. இன்றைய புதிரைக் கேட்டதிலிருந்து இந்தப் பாடலை அலுவலகத்தில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். கொஞ்சம் கூட சலிப்பே ஏற்படவில்லை.

  பிரம்மாண்டமான முதல் இசையே ஒரு மகாராஜா குதிரையில் போகும் உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. ட்ரம்பெட்டைத் தொடர்ந்து வரும் கோரஸ் குரல்கள் அழகிய மகாராணியின் வரவை மிக அழகாக உணர வைக்கிறது. எஸ்.பி.பி தனக்கே உரிய அழகிய குரலால் பல்லவியைப் பாடுகிறார்.

  பல்லவியைத் தொடர்ந்து முதல் இடையிசை. பாஸ் கிட்டார் அதகளம்.

  சரணத்தின் முதல் இரண்டு சிறு வரிகளைத் தொடர்ந்து நீளமான மூன்றாவது வரி.

  பூவை நீ… பூமடல்….
  பூவுடல்… தேன்கடல்…
  தேன்கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன்

  இப்போதுதான் மகராணி பாடத் துவங்குகிறார்

  மான்விழி ஏங்குது
  மையலும் ஏறுது
  பூங்கொடியை பனிபோல் மெதுவாய்த் தழுவு

  கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்
  கண்கள் மூடி தூங்கும் நேரம்
  இன்பம் கோடி ஊஞ்சலாடும்
  உள்ளம் போகும் ஊர்வலம்

  தொடர்ந்து வரும் பல்லவியில் எஸ்.பி.பி கவிதைப் பூஊஊஊஊ விரித்தாள் என்று குழையும் குழைவு அடடா

  ராஜாவின் அனேக பாடல்களில் இரண்டாம் இடையிசைதான் உச்சம். இதுவும் விதிவிலக்கல்ல.

  அந்த இசையிலேயே காதல் ரசம் பொங்கி வழிகிறது. கூடலுக்கான இசை அது என்று காணொளி காணாமலேயே உணர்த்துகிறது. தொடர்ந்து சரணத்தின் வார்த்தைகள் அதை உறுதி படுத்துகின்றன

  பஞ்சணை… கூடத்தில்…
  பால்நிலா… காயுதே…
  நான் எனையே மறந்தேன் கனவில் மிதந்தேன்

  உன்முக… தீபத்தில்…
  ஓவியம்… மின்னுதே…
  உன் அழகால் இரவை பகலாய் அறிந்தேன் (Wow!!!)

  மண்ணில் உள்ள இன்பம் யாவும்
  இங்கே இன்று நாமும் காண்போம்
  அன்பே அந்த தேவலோக
  சொர்க்கம் இங்கே தேடுவோம்

  ராஜாவின் இசைக்கு ஈடாக முத்துலிங்கத்தின் வரிகள் போட்டி போடுகின்றன. எஸ்.பி.பி.ஜானகிக்கு இணையாக திரையில் கமலும் ராதாவும் கிரேக்க ராஜா ராணி சிலைகள் உருபெற்றது போல் அவ்வளவு கச்சிதம். Wonderful Chemistry!

  No wonder this is my most fav song from this album!

 12. காதல் மகாராணி கவிதை பூ விரித்தாள் பாடல் காதல் பரிசு படத்திலிருந்து

 13. காதல் பரிசு படத்திலிருந்து காதல் மகராணி கவிதை பூ விரித்தாள் பாடல்.

 14. காதல் மகராணி கவிதை பூ விரித்தாள் – காதல் பரிசு – எஸ்.பி.பி, எஸ். ஜானகி, குழுவினர்

  This song will sound heavenly when you listen in a supreme quality system/headphones. We can appreciate how much is going in this composition. After the pompous start (in prelude) with trumpets, grand violins, choir, drums, how it achieves serenity in the second interlude, Wow! The drums which play during the pallavi/charaNam finishes is just outstanding. The way Maestro blends tightly the Western melody with classical MayamaaLavagowLai is another wonder still yet to be heard from his contemporaries. Same way he orchestrates Classical idioms with contemporary western without any ambiguity/difficulty but puts us into ambiguity on what genre are we listening to.

  I normally rewind this portion again and again whenever I listen to this song.
  இன்பம் கோடி ஊஞ்சலாடும் உள்ளம் போகும் ஊர்வலம் (1st charaNam)
  அன்பே அந்த தேவலோகம் சொர்க்கம் இங்கே தேடுதோ (2nd charaNam)
  What a graceful slide from a high pitched earlier line only to again follow with another high octave with காதல் மகராணி…

  My heart will overflow with unbridled happiness and ecstasy whenever I listen to this portion. That’s how a composer makes/should make a connection with a listener.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s