#RajaChorusQuiz 220 சக்தியைப் போற்றி – ஆறாம் நாள்

#RajaChorusQuiz 220

நவராத்திரி காலத்தின் ஆறாவது நாளில் பவதாரணி, குழுவினர் பாடிய ஒரு  இறை பக்திப்பாடல். இந்தப் படத்தின் தலைப்பே ஆண்டவனுடன் சம்பந்தப்பட்ட பெயர் தான் 😉

கடவுள் மறுப்பாளர் எடுத்த படத்தில் வந்த ஒரு அட்டகாஷ் பாடல் இது.
இன்றைய பாடல் இடம்பெற்ற படத்தின் களமே பாடலுக்கு முரண் ஆனாலும் சைக்கிள் கேப்பில் அழகிய இறைபக்திப் பாடலைத் தந்திருப்பார் ராஜா, அதான் ராஜா.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ஆதிசிவன் தோளிருக்கும் நாகமணி
படம் : கடவுள்
பாடியவர்கள் : பவதாரணி, குழுவினர்

http://play.raaga.com/tamil/album/kadavul-t0002741

 

Advertisements

#RajaChorusQuiz 219 சக்தியைப் போற்றி – ஐந்தாம் நாள்

#RajaChorusQuiz 219

இரண்டு முக்கிய பெண் பாடகிகள் குழுவினருடன் பாடும் ஒரு பாடலோடு இன்றைய புதிர். இந்தப் பாடகிகளில் ஒருவரின் சிறப்பு வாரம் கூட இந்தப் போட்டிகளில் இடம்பெற்றிருந்தது.

படத்தின் தலைப்பின் ஒரு பாதியில் பறவை ஒன்றின் பெயர் இருக்கும்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள் இதோ போட்டி முடிவு

பாடல்: அம்மன் கோவில் கும்பம்
படம் : அரண்மனைக் கிளி
பாடியவர்கள் : ஸ்வர்ணலதா, மின்மினி, குழுவினர்

#RajaChorusQuiz 217 & 218 சக்தியைப் போற்றி – வார இறுதி

#RajaChorusQuiz 217

#RajaChorusQuiz 218

வார இறுதிப் போட்டியில் வழக்கம் போல இரண்டு பாடல்கள், இவற்றுக்கான பதில்களை வரும் திங்கட்கிழமை மதியம் பன்னிரண்டு மணிக்கு முன்பதாகக் கொடுத்துவிடுங்கள்.

படத்தின் ஒரு பாடல் மனோ தன் குழுவினரோடு பாடியது. இன்னொரு பாடல் டி.எ.மகராஜன், எஸ்.என்.சுரேந்தர் குழுவினரோடு பாடியது.

இரண்டுமே 90களில் வெளிவந்த படங்கள்.  ஒரு படத்தை நல்ல உள்ளம் படைத்தவர்கள் கண்டுபிடிக்கலாம். இன்னொரு படத்தின் தலைப்பை இந்திய சுதந்தரத்துக்காகப் போராடிய இருவரில் மூத்தவரின் பெயரோடு இருக்கும்.
ஒன்று முரளி நடிச்ச படம் இன்னொன்று அங்க்க்க்

பாடல்களோடு வருக.

#RajaChorusQuiz 217

பாடல்: அம்மா அருள் கொடுத்திட/ பூந்தேரில் ஏறி வரும்
படம்: பெரிய மருது

பாடியவர்கள்: டி.எல்.மகராஜன், எஸ்.என்.சுரேந்தர், குழுவினர்

#RajaChorusQuiz 218
பாடல்: உடுக்கை சத்தம் கேட்ட தாயி /தீயை மிதிப்போம்
படம்: தங்க மனசுக்காரன்

பாடியவர்கள்: மனோ குழுவினர்

#RajaChorusQuiz 216 சக்தியைப் போற்றி – இரண்டாம் நாள்

#RajaChorusQuiz 216

நவராத்திரி நாட்களில் இரண்டாவது நாளாக அமையும் இன்றைய நாளில் சரஸ்வதி தேவியைப் போற்றிப் பாடும் பாடல் இது.

உயிர் மெய் எழுத்துகளில் ஒன்று இந்தப் பாடல் இடம்பெறும் படத்தின் தலைப்பின் ஆரம்ப எழுத்தாக அமைகின்றது.
படத்தின் பெயரை இடப்பெயர் என்ற வகுப்புக்குள்ளும் அடக்கலாம்.தலைப்பில் ஒரு பாதி ஒரு நாட்டின் பெயராக இருக்கின்றது.

பாடலோடு வருக

ஓக்கே மக்கள் இதோ போட்டி முடிவு

பாடல்: கை வீணையை ஏந்தும் கலைவாணியே
படம் : வியட்நாம் காலனி
பாடியவர்கள் : பாம்பே ஜெயஶ்ரீ, குழுவினர்

#RajaChorusQuiz 215 சக்தியைப் போற்றி – முதலாம் நாள்

#RajaChorusQuiz 215

இன்று முதல் நவராத்திரி காலம் ஆரம்பமாகின்றது. இம்முறை எட்டு இரவுகள் இந்தப் பண்டிகை இம்முறை எட்டு இரவுகளாக இந்தப் பண்டிகை அமையவிருக்கின்றது.

கல்விக்கு சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு இலக்குமி தேவியையும், வீரத்துக்கு காளி தேவியையும் என்று மூன்று செல்வங்களை வேண்டிப் போற்றிப் பணியும் இந்த நாட்களில் சற்று விசேஷமாக நாமும் கோரஸ் போட்டிகளினூடாகச் சக்தியைப் போற்றும் பாடல்களில் கோரஸ் பாடகர்களின் பங்களிப்போடு களம் இறங்குகிறோம்.

இன்றைய பாடல் உயிர் எழுத்துகளில் நெடில் வகைக்குள் அடங்கும் ஒரு எழுத்தை ஆரம்ப எழுத்தாகக் கொண்டு அமையும் ஒரு திரைப்படத்தில் இருந்து வருகின்றது.

ஜீவனோடு கேட்டால் பாடல் எதுவென்று தெரியும் 😉

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள் இதோ போட்டி முடிவு

பாடல்: இன்னருள் தரும் அன்னபூரணி
படம் : ஆத்மா
பாடியவர்கள் : டி.என்.சேஷகோபாலன் குழுவினர்

#RajaChorusQuiz 214 சித்திரத்துத் தேனே வா

#RajaChorusQuiz 214

ஸ்வர்ணலதா வாரத்தில் கொடுக்க வேண்டிய பாடல் கொஞ்சம் தாமதித்து வருகின்றது.  இனிமையான ஜோடிப்பாட்டு. எந்த மொழியைத் தாய் மொழியாகக் கொண்டாலும் நம்மை இணைப்பது இசை மொழி ஆச்சே. ஆமா எதுக்கு இப்ப சம்பந்தா சம்பந்தமில்லாமப் பேசுறேன்? 😉

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள் இதோ போட்டி முடிவு

பாடல்: சிங்கார மானே பூந்தேனே
படம் : தாய்மொழி
பாடியவர்கள் : மனோ, ஸ்வர்ணலதா, குழுவினர்

#RajaChorusQuiz 213 தாயின் சங்கீதம்

#RajaChorusQuiz 213

இன்றைய போட்டிப் பாடல் அருமையானதொரு தாலாட்டுப் பாடல், வழக்கமாக மெல்லிசையாக அமையும் தாலாட்டுப் பாடல்கள் போலல்லாது கொஞ்சம் துள்ளிசையோடு வருகின்றது சுஜாதா மற்றும் கோரஸ் குரல்களோடு.

இந்தப் படத்தின் தலைப்போடு கள் போட்டால் யோவ் கள்ளு இல்லை சொல்லு போட்டால் சமீபத்தில் மறைந்த இயக்குனர் ஒருவரின் கடைசிப்படத்தின் தலைப்பாகிவிடும். இரண்டுக்குமே ராஜா தான் இசை.

இசைஞானியின் பாடல்கள் தலைமுறைகளெல்லாம் தாண்டி நிற்கும் என்பதற்கு இம்மாதிரி அரிய பாடல்களைத் தேடிக் கேட்கும் போது  தெரிகிறது.

மேலே சொன்ன வாக்கியங்களுக்குள் க்ளு எல்லாம் இருக்குலே தக்காளி பாடலோடு வாங்க 😉

ஓக்கே மக்கள் இதோ போட்டி முடிவு

பாடல்: தத்தித் தத்தித் தாவும் பூவே
படம் : தலைமுறை
பாடியவர்கள் : சுஜாதா, குழுவினர்