#RajaChorusQuiz 195 பாடலாசிரியர் மு.மேத்தா பிறந்த நாள் ஊர்வலம்

1#RajaChorusQuiz 195

இன்று கவிஞர், பாடலாசிரியர் மு.மேத்தாவின் பிறந்த நாள்.

நந்தவன நாட்கள், ஊர்வலம் என்று மு.மேத்தா அவர்களின் புதுக்கவிதைகளில் மோகித்துக் காதல் செய்ததும் காதலுக்குப் பயன்பட்டதும் ஒரு காலம்.

தமிழ்த்திரையுலகில் எண்பதுகளில் இருந்து மு.மேத்தா அவர்களின் ஊர்வலம் சிறப்பானது. ஆனால் பரவலாக அறியப்படாது போனது.

இன்றுவரை இசைஞானியின் நெருக்க வளையத்தில் இருக்கும் பண்பாளர்.

இந்தப் படப் பாடல் மு.மேத்தா அவர்களுக்குக் கச்சிதமான கோரஸ் வாழ்த்தாக அமையும்.

அப்புறம் இந்தப் பாட்டுக்கு அபிநயத்திருக்கும் நாயகி பற்றி சொல்லணும்னா ஹிஹி ஹாஹா ஹோஹோ சர்ரி சர்ரி நானு பேசப்பலைப்பா 🙂

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 195

பாடல் : வா வா வா கண்ணா வா
படம் : வேலைக்காரன்
பாடியவர்கள் : சித்ரா, மனோ, குழுவினர்

Advertisements

58 thoughts on “#RajaChorusQuiz 195 பாடலாசிரியர் மு.மேத்தா பிறந்த நாள் ஊர்வலம்

 1. வா வா வா வா கண்ணா வா
  தா தா தா தா கவிதை தா
  உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
  தொட தொட தொடர்கதை தான் தனிமையில்… கே.எஸ்.சித்ரா & மனோ
  வேலைக்காரன்

 2. வா வா வா வா கண்ணா வா.. படம்: வேலைக்காரன் ,
  அண்ணே ஜொள்ளு ஒழுகுது தொடச்சிக்கங்க😀 ஹேஹே ஹோஹோ அமலா பேரவை ஹேப்பி அண்ணாச்சி :))

 3. குத்த வைத்து உட்கார்ந்து ப்ரௌசரை உரலாட்டி உட்கார்ந்திருந்த அன்று எல்லாம் வராத தெரிந்த பாடல், நான் மூன்று நிமிடம் தாமதமாக வந்த அன்று வந்திருக்கிறது. Murphy’s law wins most of the time.

  இந்தப் பாடல் வெளிவந்த புதிதில் நான் படித்த செய்தி: ரஜினிகாந்த் இந்தப் பாடலைக் கமலஹாசனுக்குப் போட்டுக் காட்டினாராம். கமல் வழக்கம் போல அருமையாக இருந்தது என்று சொன்னதாக ஞாபகம்.

  இந்தப் படத்தை ரிலீசாகி சில மாதங்களில் கேரளாவில் ஒரு கிராமத்தில் பார்த்தேன். இதே படத்தின் இன்னொரு பாடலில் வரும் “கல்லூரிக்குப் போனா கன்னிப் பொண்ணே மீனா, கல்லூரியில் படிச்சதில கர்ப்பம் ஆனா” என்ற வரிக்கு அத்தனை சிரிப்பு மலையாள ரசிகர்களிடம் இருந்து. மலையாளிகள் தமிழ் மொழி தெரிந்திருக்கும் அளவு நாம் அவர்கள் மொழியை அறிந்திருப்பதில்லை என்பது உண்மையே!

  என்ன, பாட்டைப் பத்தி ஒண்ணுமே எழுதலையா. நல்ல பாட்டுன்னு எழுதறதைத் தவிர எனக்கு ஒண்ணும் தெரியாது. அதெல்லாம் maestroworld பாத்துப்பாரு!

 4. காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
  கம்ப நாடன் உன்னைக் கண்டு சீதை என்று துள்ளுவான்
  ஷாஜகானைப் பார்த்ததில்லை நானும் உன்னைப் பார்க்கிறேன் ..
  தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்
  தாஜ்மகாலின் காதிலே ராம காதை கூறலாம்
  மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்
  பாதி நீயும் பாதி நானும் ஜோதியாக இணைந்திட
  வா வா வா கண்ணா வா..தா தா தா கவிதை தா
  எனக்கொரு சிறுகதை நீ ஆ ஆ ஆ
  தொடத் தொட தொடர்கதை நீ ஆ ஆ ஆ ..
  அப்படியே முடிச்சா தான் மனசுக்கு நிறைவாகுது 🙂

 5. படம்-வேலைக்காரன்
  பாடல்-வா வா வா கண்ணா வா
  ,தா தா தா கவிதை தா,,உருகி உருகி உனை படித்திட…

  கவிஞர் பிறந்தநாளுக்கு பொருத்தமான பாட்டு வாத்தியாரே,இதுமாதிரி கவிதை நடையில் இப்பல்லாம் யாரு பாட்டு எழுதறாங்க.

 6. படம் : வேலைக்காரன்
  பாடல் : வா வா வா கண்ணா
  இசை : இளையராஜா
  பாடலாசிரியர்: மூ.மேத்தா
  பாடியவர்கள் : சித்ரா, மனோ
  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  வா வா வா கண்ணா வா
  வா வா வா வா கண்ணா வா
  தா தா தா தா கவிதை தா

 7. vA vA vA kaNNA vA from vElaikkAran sung by Mano and Chithra

  What a song! One of the songs with 3 charanams in the late 80s

  //உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
  தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
  உருகி உருகி இதைப் படித்திட வா // – What a lyrics

  //காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ
  காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ//

  Love the lyrics of 3rd charanam

  //காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
  கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான் – Perfect lyrics of Amala 😉

  ஷாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
  தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்

  தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
  மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்

  பாதி நீயும் பாதி நானும்
  ஜோதியாக இணைந்திட//

  Happy B’day to Mu.Metha.

  pAdu nilAvE thEn kavidhai from urimai geetham is an all time fav written by Mu.Metha

 8. “வா வா வா கண்ணா வா …தா தா தா கவிதை தா..” சின்னக்குயில், மனோ & கோரஸ் குரல்களில் “வேலைக்காரன்” படப்பாடல்.

 9. வா வா வா கண்ணா வா
  எனக்கு பிடிச்ச பாடல் படம் ரஜினி அமலா விகேஆர் (இருபது வருஷத்துக்கு முன்னாடி அமலா அவர்களை நேரில் பார்த்திருக்கிறேன் திருவான்மியுர் கலாக்ஷேத்ராவுக்கு வருவாங்க
  என்னோட தங்கையை கூப்பிட்டு பாத்துட்டீங்களா ஓகே எல்லாம் வீட்டுக்கு போங்கனு சிரித்த முகத்தோடு சொன்னது இன்னும் நினைவில் இருக்கு…….

 10. வா வா வா கண்ணா வா – வேலைக்காரன் – சித்ரா, மனோ, குழுவினர்

  Because of the way this chorus melody is arranged in this interlude (exactly from where you cut the clip), it also takes me to thEr kondu sendravan song as they both belong to the same raagam; Hamsadwani. This interlude is a complete deviation from the rest of the orchestration and the song.

  Happy Birthday to Kavignar Mu. Metha. Long live!! What gems of songs he had given to us! Thanks a lot for featuring his songs here. Otherwise we would not have got opportunity to recognize his songs. I am making a playlist of his songs, thanks to you!!!

 11. வா வா வா கண்ணா வா தா தா தா கவிதை தா #வேலைக்காரன்
  -@beingSKR

 12. வா வா வா கண்ணா வா தா தா தா கவிதை தா
  வேலைக்காரன்
  @beingSKR

 13. வா வா வா கண்ணா வா- வேலைக்காரன்.எல்லா பாடல்களுமே சூப்பர்.

 14. வா வா வா கண்ணா வா தா தா தா கவிதை தா #வேலைக்காரன்
  ஏற்கனவே மூன்று தடவை கைபேசியில் பதிலிட்டது வந்ததா என்று தெரியவில்லை அதனால் நான்காம் முறையாக..அந்த பதில்கள் வந்திருந்தால் மன்னிச்சூ
  இன்னொன்று ..அமலாவைத்தேடினால் அமலாபாலை கைக்காட்டும் கொடூர கூகிளிது

 15. வேலைக்காரன் படத்திலிருந்து வா வா வா வா கண்ணா வா பாடல்.

 16. வா வா வா கண்ணா வா
  வா வா வா வா கண்ணா வா
  தா தா தா தா கவிதை தா
  உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
  தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
  உனக்கொரு சிறுகதை நான்
  தொடத் தொட தொடர்கதை தான்
  உருகி உருகி இதைப் படித்திட
  வா வா வா வா கண்ணா வா
  வா வா வா
  ——————————–
  வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
  தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ

  காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ
  காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ

  நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை
  வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை

  நாலு கண்கள் பாதை போட
  நாகரீகம் தொடர்ந்தது
  ———————————-
  வா வா வா வா கண்ணா வா
  தா தா தா தா கவிதை தா

  எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்
  தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்
  எனக்கொரு சிறுகதை நீ
  தொடத் தொட தொடர்கதை நீ
  உருகி உருகி உனைப் படித்திட
  வா வா வா அன்பே வா
  வா வா வா
  ————————————
  ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
  ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே

  ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதி மன்றம் போகுமே
  பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே

  ராக வீணை போலவே நானும் வந்து போகவோ
  தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ

  நானும் நீயும் காதல் கைதி
  எண்ண எண்ண இனிக்குது
  —————————————–
  வா வா வா அன்பே வா
  தா தா தா அமுதம் தா

  காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
  கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்

  ஜாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
  தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்

  தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
  மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்

  பாதி நீயும் பாதி நானும்
  ஜோதியாக இணைந்திட
  ——————————————-
  வா வா வா வா கண்ணா வா
  தா தா தா தா கவிதை தா

  எனக்கொரு சிறுகதை நீ

  இனிமையில்

  தொடத் தொட தொடர்கதை நீ

  தனிமையில்

  எனக்கொரு சிறுகதை நீ…ஆ…
  தொடத் தொட தொடர்கதை நீ…ஆ…
  உருகி உருகி உனைப் படித்திட
  வா வா வா அன்பே வா
  வா வா வா

  *************************************************************************************
  படம் : வேலைக்காரன்
  பாடல் : வா வா வா கண்ணா
  இசை : இளையராஜா
  பாடலாசிரியர்: மூ.மேத்தா
  பாடியவர்கள் : சித்ரா, மனோ

 17. ஓக்கே மக்கள்ஸ்
  போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

  இதோ போட்டி முடிவு

  #RajaChorusQuiz 195

  பாடல் : வா வா வா கண்ணா வா
  படம் : வேலைக்காரன்
  பாடியவர்கள் : சித்ரா, மனோ, குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s