#RajaChorusQuiz 202 பாடகி ஸ்வர்ணலதா நினைவில்

swarna#RajaChorusQuiz 202

திரையிசையில் பல அரிய முத்துகளை அளித்து விட்டு ரசிக நெஞ்சங்களைப் பிரிந்து விட்ட பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு நாள் இன்றாகும்.

அவரின் பாடல்களில்  பாடும் போது ஒருவித சோகம் கலந்திருப்பது போன்ற உணர்வைத் தன் வாழ்வின் முடிவிலும் விட்டுச் சென்றது பெருஞ்சோகம்.

இங்கே தந்திருக்கும் பாடல் ஸ்வர்ணலதா என்ற பாடகி எவ்வளவு தூரம் தனித்துவமாக விளங்கியிருந்தவர் என்பதற்கான ஒரு சாம்பிள்.

இப்பேர்ப்பட்ட பாடகி பிறக்க இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் வராமல் இல்லை.

சிம்பொனி கேட்கும் பரவசம் கிட்டும் இந்தப் பாடலின் இரண்டு முக்கியமான கோரஸ் பகுதிகளை இணைத்துக் கொடுக்கிறேன்.

பாடலோடு வருக,

ஓக்கே மக்கள்ஸ்
போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 202

பாடல் : என்னுள்ளே என்னுள்ளே
படம் : வள்ளி
பாடியவர்கள் : ஸ்வர்ணலதா, குழுவினர்

முழுப்பாடல் ஆரம்ப இசையோடு

Advertisements

72 thoughts on “#RajaChorusQuiz 202 பாடகி ஸ்வர்ணலதா நினைவில்

 1. “என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழுந்திடும்” சொர்ணம் & கோரஸ் குரல்களில் “வள்ளி” படப்பாடல்.

 2. எத்தனை அருமையான பாடலின்று … நன்றி மாஸ்டர்.

  பாடல் “என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம், எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்”. படம் வள்ளி (1993).

 3. என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் – வள்ளி. என்ன ஒரு அருமையான இசைக்கோர்ப்பு. ராஜா ராஜா தான். இந்த குரலில் ஒரு வேதனை, ஒரு சிலிர்ப்பு என்று பல பாவம் காட்டியிருப்பார் ஸ்வர்ணலதா…

 4. என்னுள்ளே என்னுள்ளே – வள்ளி

  2 நாளா இந்தப் பாட்டை அடிக்கடி கேட்டுட்டுருந்தேன்

  அதுவும் “காண்பவை யாவுமே சொர்க்கமே தான்” – இந்தவரியை திரும்ப திரும்ப ஓட்டி…ஏன்னு தெரியல… 🙂

  ஒரு ட்விட் கூட அந்தப் பாதிப்புல —> https://twitter.com/eestweets/status/509924299302371328

 5. ennuLLE ennuLLE pala minnal ezhum nEram from vaLLI.

  Masterpiece of Swarnalatha! What a song! I get goosebumps whenever I listen to this song and automatically shed tears.

 6. என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்—வள்ளி

 7. ஆஹா என்ன ஒரு பாடல்!! நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச்செல்வது போல்.

 8. அற்புதமான பாடல் வாத்தியாரே,வித்தியாசமான கட்டமைப்பு கொண்ட பாடல்,பல்லவியை கோரஸ் குரல்கள் ஆரம்பிக்க,ஏதோ மோகம் என்ற இடத்தில் சுவர்ணலதா இணையும்போது,உருக்கிவிடுகிறது.குறைந்த அளவு வாத்தியங்களே பயன்படுத்தி,இவ்வளவு உயர்ந்த இசையை தர,ராஜாவை விட வேறு யார்..சுவர்ணலதா என்ற ஒரு அற்புதம் இவ்வளவு சிறு வயதில் மறைந்தது சோகம்..கடவுள் கருணையில்லாதவன்…
  காலமென்னும் தேர் ஆடிடாமல்தான் நிற்கிறது இந்த பாடலை கேட்கும்போது…!!

 9. என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் – வள்ளி

 10. என்னுள்ளே என்னுள்ளே பாடல் வள்ளி படத்திலிருந்து

 11. என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் – வள்ளி

  எவ்வளவு முறை இந்த பாடல் கேட்டலும் தாகம் தணியாது. ஒவ்வொரு முறை கேட்கும்பொழுதும் பாடலின் சுவை அதிகரித்துக்கொண்டே இருக்கும். பாடல் ஆரம்பமாகும் விதமே தனி.

  மிருதங்கம், செண்டை, ஜதி என்று நம் நாட்டின் பாரம்பரியத்தில் ஆரம்பித்து கிடார் மற்றும் மேற்கத்திய செவ்வியலுக்கு லாவகமாக தாவி மீண்டும் நம் நாட்டு சந்தத்துடன் கலந்து உறவாடி மறுபடி மேற்க்கத்திய புல்லாங்குழல் பாணியில் பெண் குழுவினரின் ஒத்திசைவும் சேர்ந்து நம்மை ஆட்கொள்ளும் அந்த ஆளுமை இசைஞானியை தவிர வேறு யாரும் அவ்விடத்தை அடையமுடியாது என்று நச்சென்று பறை சாற்றுகிறது.

  ஸ்வர்ணலதாவின் மற்றுமொரு பரிமாணத்தை இந்த பாடல் மூலம் உணரலாம் பொதுவாக நல்ல தீர்க்கமான ஆணித்தரமான அழுத்தமான குரலில் பாடும் பாடல்களால் அறியப்பட்டவர் இந்த பாடல் மூலம் அவரின் இன்னொரு மென்மையான குரல் மாயத்தால் மயிலறகைப்போல் நம்மை வருடிச்செல்வதை உணரலாம்.

  இந்த பாடல் ஆரம்பத்தில் ஸ்வர்ணலதா பெண் குழுவினர்களோடு சேர்ந்து பாடும் பொழுது ஒலிக்கும் அந்த எதிரொலி அவர் தனியாக சரணம் பாடும் பொழுதும் ஒலிக்கும் அற்புதம் அவரின் குரலில் அது இயற்கையாகவே இருக்கிறது என்று இசைஞானி நமக்கு எடுத்துக்காட்டும் ஒரு அற்புதம். ஸ்வர்ணலதா நம்மிடம் இல்லையென்றாலும் அவர் விட்டு சென்ற அந்த அதிர்வும் எதிரொலியும் நம்மை வாழ்நாள் முழுவதும் ஆட்கொள்ளும்.

  • //ஸ்வர்ணலதா நம்மிடம் இல்லையென்றாலும் அவர் விட்டு சென்ற அந்த அதிர்வும் எதிரொலியும் நம்மை வாழ்நாள் முழுவதும் ஆட்கொள்ளும்.// +100%

   பாடலைப் போலவே அருமையான தமிழ் வரிகள், நன்றி விஜய் !!

 12. திரைப்படம் : வள்ளி
  பாடல் : என்னுள்ளே என்னுள்ளே
  பாடகர்கள் : ஸ்வர்ணலதா
  இசை : இளையராஜா
  பாடல் ஆசிரியர்: வைரமுத்து

  என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
  எங்கெங்கோ எங்கெங்கோ என் என்னம் போகும் தூரம்
  நான் மெய் மறந்து மார ஓர் வார்தை இல்லை கூர
  எதுவொ மொகம்………………

  கண்ணிரெண்டில் நூரு வெண்ணிலாக்கள் தோன்றும்
  ஆனாலும் அனல் பாயும்
  நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
  ஆனாலும் என்ன தாகம்
  மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்ததென்ன
  தூபம் போடும் நேரம் தூண்டிளிடதென்ன
  என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

  கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது
  ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
  ஊன் கலந்து ஊனும் ஒன்று பட த்யானம்
  ஆழ்நிலையில் அரங்கேற
  காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
  இக்கணத்தை போலே இன்பம் ஏது சொல்லு
  காண்பவை யாவும் சொர்கமே தான்

  கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் பொது
  ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
  ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
  ஆழ் நிலையில் அரங்கேற
  காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
  இக்கனதை பொலே இன்பம் ஏது சொல்லு
  காண்பவை யாவும் சொர்கமே தான்

 13. வள்ளி படத்திலிருந்து என்னுள்ளே என்னுள்ளே பாடல்.

 14. என்னுள்ளே என்னுள்ளே படம் வள்ளி .அதுக்கு முதல்ல மல்லிகை மொட்டு சக்தி வேல் படத்தில் இருந்து .மொபைல் இருந்து சிரமத்தோட கமெண்ட் .சிஸ்டம் மூலமாக பாடலை சிலாகிக்க முடியாம பண்ணிடுச்சே மழை 😦
  by umakrishh

 15. ஓக்கே மக்கள்ஸ்
  போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

  இதோ போட்டி முடிவு

  #RajaChorusQuiz 202

  பாடல் : என்னுள்ளே என்னுள்ளே
  படம் : வள்ளி
  பாடியவர்கள் : ஸ்வர்ணலதா, குழுவினர்

  முழுப்பாடல் ஆரம்ப இசையோடு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s