#RajaChorusQuiz 251 சகோதரி குயில் அவர்களே!

#RajaChorusQuiz 251

இன்று வரும் பாடல் கதாநாயகி தன் தோழியருடன் பாடும் பாடல் வகையறாவாகும்.

கோரஸ் குரல்களே  என்று துள்ளாட்டம் போட்டுப் பாடியிருக்கும் பாங்கே பாடலுக்கு மெருகேற்றுகின்றது.

இந்தப் பாடலைச் சேர்ந்திசைக்குரல்களோடு பாடியிருப்பவர் பிரபல நடிகரின் மனைவி.

ஒரு கடவுளின் மூன்றெழுத்து மனைவியின் பெயர் படத்தின் பெயராகும்.

பாடலோடு வருக.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா

பாடியவர்கள்: லதா ரஜினிகாந்த், குழுவினர்

படம் : வள்ளி

Advertisements

#RajaChorusQuiz 250 வெற்றிகரமான 250 வது நாளில் வெற்றியாளர் பட்டியலோடு

ilayaraja#RajaChorusQuiz 250

இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டியின் 250 வது நாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.

250 வது நாள் பாடல் இசைஞானி இளையராஜாவும், ரஜினிகாந்தும் சேர்ந்த வெற்றிக் கூட்டணிப் படமொன்றில் இருந்து வருகின்றது.
போட்டிப்பாடலின் ஆரம்ப மற்றும் இடையிசையில் வரும் கோரஸ் கூட்டணி திருமண நிகழ்வில் தோழியர் இன்னிசைத்தவாறே திருமண ஜோடியை அழைத்துச் செல்லும் பாங்கில் அமைந்திருக்கும்.

 

அடுத்த  நூறு நாட்கள் (போட்டி இலக்கம் 101 தொடக்கம் 200 வரை) இடம்பெற்ற போட்டிகளில் அதிகப்படியான புள்ளிகளைப் பெற்றுப் பரிசை வென்ற நேயர்கள் குறித்த பகிர்வு இதோ

ilayaraja

ஒவ்வொரு நாளும் இந்தப் புதிர்ப்போட்டி வழியாகப் பகிரும் பாடல்கள் ஏற்கனவே அறிமுகமாகிப் பல நாள் கேட்டிராதவை அல்லது முன்பே கேட்காத பாடல்கள் என்று கலவையாக வந்தமர்கின்றன உங்கள் நெஞ்சங்களில். தொடர்ந்து இந்தப் போட்டிகளில் நீங்கள் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.

இன்றைய நாளில் அடுத்த  நூறு நாட்கள் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அன்பர்களின் விபரங்களையும் அறிவிப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன். போட்டியில் ஏற்கனவே பரிசை வெல்லாத போட்டியாளர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குப் புத்தகப் பரிசு என்று முதலில் சொல்லியிருந்தேன்.

 

வ்கடந்த நூறு போட்டிகளோடு தொடந்து அடுத்த நூறு போட்டிகளிலும் முதலாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட விஜய் (@maestrosworld)  அவர்கள் மொத்தம் இரு நூறு புள்ளிகளைப் பெறுகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது போட்டியில் கலந்து கொள்வது மட்டுமல்ல, போட்டியில் கொடுத்த பெரும்பாலான பாடல்களுக்கு இவர் கொடுத்த விரிவான வர்ணனை வெகு சிறப்பாக அமைந்தது. அதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டும், நன்றிகளும் விஜய்.

ர்முதல் நூறு போட்டிகளில் 99 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ரிஷி (@i_vr) இந்தச் சுற்றில் 100 புள்ளிகள் எடுத்து மொத்தம் 199 புள்ளிகளோடு இரண்டாவது நிலையில் இருக்கின்றார்.

 

ராமுதல் நூறு போட்டிகளில் 81 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ராஜா @rajabalanm  இந்தச் சுற்றில் 100 புள்ளிகள் எடுத்து மொத்தம் 181 புள்ளிகளோடு மூன்றாவது நிலையில் உள்ளார்.

தொடந்து 101 – 200 போட்டிகளில் பங்கேற்றுப் பரிசைப் பெறும் அன்பர்கள் விபரம் இதோ

tparavaiநூறு போட்டிகளில்  மொத்தம் 31 போட்டிகளில் முதல்வராக வந்து சாதனை படைத்ததோடு  94 போட்டிகளில் சரியான பதிலை முதல் தடவையில் கொடுத்திருக்கிறார் தமிழ்ப்பறவை  @tparavai

1

கடந்த நூறு போட்டிகளில் நூற்றுக்கு நூறு எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் @muthiah

 

1

நூறு போட்டிகளில் மொத்தம் 99 புள்ளிகள் பெற்றிருக்கிறார் விவேக் @iTamizh

nila

நூறு போட்டிகளில் மொத்தம் 97 புள்ளிகள் பெற்றிருக்கிறார் நிலாக்காலம்

 

 

azhimathiநூறு போட்டிகளில் மொத்தம் 89 புள்ளிகள் பெற்றிருக்கிறார் ஆழிமதி

 

vbsசெப்டெம்பர் 3 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் https://radiospathy.wordpress.com/2014/09/03/rajachorusquiz193/ சிறப்புப் பரிசாக மூன்றாவது இடத்தைப் பிடித்த பாலாஜி @vbss75

ய்இவர்களுக்கு இசைஞானி இளையராஜா எழுதிய “யாருக்கு யார் எழுதுவது” கட்டுரைத் தொகுதி அடங்கிய புத்தகம்  பரிசாக வழங்கப்படும்.

முதல்வராக வந்த தமிழ்ப்பறவைக்கு மேலும் ஒரு பரிசு வழங்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளைப் பரிசில் வென்றோருக்குத் தனிமடலில் அறியத்தருகின்றேன்.

போட்டியில் தொடர்ந்து பங்கேற்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்  எனது வாழ்த்துகளோடு  நன்றி கலந்த வணக்கங்கள்.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 250

பாடல்: ஒரு நாளும் உனை மறவாத
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : எஜமான்

#RajaChorusQuiz 249 வாலியின்னா ஜாலி

vaali#RajaChorusQuiz 249

பெருமதிப்புக்குரிய அமரர் கவிஞர் வாலி அவர்களது 83 வது பிறந்த தினம் இன்றாகும். தன்னுடைய இறுதி மூச்சு வரை வாலிப வரிகளோடு வாழ்ந்த இளைஞர் அவர்.

வாலி ஐயா இன்று நம்முடன் இல்லாவிட்டாலும் அவரின் பாடல்களால் நம்மோடு வாழ்ந்து கொண்டு தன்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.

கவிஞர் வாலி – இளையராஜா கூட்டணி மகத்தானது எத்தனையோ சூழ் நிலைகளுக்குப் பாடல்களை ஆக்கி அளித்திருக்கின்றன.

இன்று நான் பகிரும் பாடல் அவருக்கான தனி முத்திரை பதித்த ஒரு ஜாலியான பாடல், இந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தில்  வந்த போது கிட்டிய பிரமாண்ட வரவேற்பை அனுபவித்தவன்

என்ற வகையில் இதுவே அவரின் பிறந்த நாள் கொண்டாட்ட முத்திரைப் பாடலாக அமையும்.  பாடலில் இரண்டு இடையிசையோடு கலக்கும் கோரஸ் பகுதிகளை இறுகக்கட்டித் தரும் ஒரு பிறந்த நாள் கேக் இது.

வெற்றிவேல் வீரவேல் என்று முழங்கிக்கொண்டே பாடலோடு வருக

 
ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 249

பாடல்: சின்னராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ, குழுவினர்
படம் : வால்டர் வெற்றிவேல்

#RajaChorusQuiz 248 விலை விசாரணை

#RajaChorusQuiz 248

இன்று வரும் பாடல் எஸ்.ஜானகி குழுவினர் பாடும் துள்ளிசை ஒன்று.
இந்தப் பாடலின் சிறப்பே கோரஸ் குரல்களை ஆரம்பத்தில் புதுமையாகக் கையாண்டு பின்னர் பாடல் ஓட்டத்தில் மேற்கத்தேய இசையிலிருந்து அப்படியே இந்துஸ்தானி ரக இசைக்குத் தொட்டுவிட்டு நிதானமாக மேலெழும் விமானம் போல மீண்டும் மேற்கத்தேய இசையில் பறக்கும்.

படத்தை இயக்கியவருக்கு அறிமுகப் படம் என்பதோடு இவரைத் திரையுலகமே திரும்பிப்பார்க்க வைக்கும் அளவுக்கு வெற்றிப்படம். ஆட்டோ சங்கர் மாதிரி ஒரு பாத்திரத்தை வைத்து கல்லா கட்டிவிட்டார்.

பாடலோடு வருக அங்க்க்

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 248

பாடல்: இளமைக்கு என்ன விலை
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : புலன் விசாரணை

#RajaChorusQuiz 247 கிளித்தோப்பு

#RajaChorusQuiz 247

இன்று இடம்பெறும் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குரல்களில் வரும் இனிய காதல் பாடல். மலையாள நடிகர்களோடு தமிழ், ஹிந்தி நடிகர்களும் நடித்த படமிது.

படமும் மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று மொழி தாவி வெளியிடப்பட்டது.

பாடலைத் தேட அக்ரகாரா எல்லாம் தேடி அலைவேண்டியதில்லை உந்த மான் எந்த மான் அந்த மான் இந்த மான் என்று மந்திரம் போலச் சொன்னால்

பாடல் கிட்டும்

 

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 247

பாடல்: ஆலோலங்கிளித் தோப்பிலே
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்
படம் : சிறைச்சாலை

#RajaChorusQuiz 245 & 246 ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்

#RajaChorusQuiz 245

#RajaChorusQuiz 246

வாங்க மக்கா வாங்க இந்த வார இறுதிக்கான பாடல்களாக வரும் பாடல்கள் ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில் வரும் இரண்டு படப்பாடல்கள்.

இரண்டுமே அவருக்கான தனித்துவமான படங்கள்.

நேற்று நான் கொடுத்த http://www.radiospathy.com/2014/10/blog-post_24.html பதிவை அலசினால் படங்களை இலகுவாகக் கண்டுபிடிக்கலாம். இங்கே கொடுக்கப்பட்ட பாடல்கள் அந்தப் பதிவில் இடம்பெறும் படங்கள் மட்டுமே என்பதை ‘கவனத்தில்” கொள்ளவும்.

ஒரு மனோ குழுவினர் பாடும் ஜாலியான பாடல் இன்னொன்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினருடன் பாடும் அழகிய காதல் பாடல்

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வாருங்கள்

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 245

பாடல்: ஆஹோ ஐய்யாஹோ தேரோட்டமா
பாடியவர்கள் : மனோ, குழுவினர்
படம் : தம்பிக்கு ஒரு பாட்டு

#RajaChorusQuiz 246

பாடல்: அதே காதல் அதே கீதம்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : காதல் கீதம்

#RajaChorusQuiz 244 முத்துக்குளிக்க வாரீகளா

#RajaChorusQuiz 244

இசைஞானியின் கடின விசிறி நடித்து இயக்கிய படம் இது. விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என்று தன் பணியைப் பரவலாக்கியவர்.

ராகதேவன் இளையராஜாவின் கீத மழையில் என்றெல்லாம் போஸ்டர் அடிச்ச தயாரிப்பாளர் இவர் தான் இயக்கி நடிச்ச படத்துக்கு மட்டும் ராஜாவை விட்டுவிடுவாரா?

தக்காளி, பாட்டைக் கண்டுபிடீங்கய்ன்னா முத்துக் குளிக்குற ஊருக்குப் போயிடுவீயளா

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: தூத்துக்குடி முத்து முத்து

படம்:  எல்லாமே என் ராசா தான்

பாடியவர்கள்: ஆஷாலதா, லேகா, குழுவினர்