#RajaChorusQuiz 250 வெற்றிகரமான 250 வது நாளில் வெற்றியாளர் பட்டியலோடு

ilayaraja#RajaChorusQuiz 250

இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டியின் 250 வது நாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.

250 வது நாள் பாடல் இசைஞானி இளையராஜாவும், ரஜினிகாந்தும் சேர்ந்த வெற்றிக் கூட்டணிப் படமொன்றில் இருந்து வருகின்றது.
போட்டிப்பாடலின் ஆரம்ப மற்றும் இடையிசையில் வரும் கோரஸ் கூட்டணி திருமண நிகழ்வில் தோழியர் இன்னிசைத்தவாறே திருமண ஜோடியை அழைத்துச் செல்லும் பாங்கில் அமைந்திருக்கும்.

 

அடுத்த  நூறு நாட்கள் (போட்டி இலக்கம் 101 தொடக்கம் 200 வரை) இடம்பெற்ற போட்டிகளில் அதிகப்படியான புள்ளிகளைப் பெற்றுப் பரிசை வென்ற நேயர்கள் குறித்த பகிர்வு இதோ

ilayaraja

ஒவ்வொரு நாளும் இந்தப் புதிர்ப்போட்டி வழியாகப் பகிரும் பாடல்கள் ஏற்கனவே அறிமுகமாகிப் பல நாள் கேட்டிராதவை அல்லது முன்பே கேட்காத பாடல்கள் என்று கலவையாக வந்தமர்கின்றன உங்கள் நெஞ்சங்களில். தொடர்ந்து இந்தப் போட்டிகளில் நீங்கள் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும்.

இன்றைய நாளில் அடுத்த  நூறு நாட்கள் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அன்பர்களின் விபரங்களையும் அறிவிப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன். போட்டியில் ஏற்கனவே பரிசை வெல்லாத போட்டியாளர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குப் புத்தகப் பரிசு என்று முதலில் சொல்லியிருந்தேன்.

 

வ்கடந்த நூறு போட்டிகளோடு தொடந்து அடுத்த நூறு போட்டிகளிலும் முதலாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட விஜய் (@maestrosworld)  அவர்கள் மொத்தம் இரு நூறு புள்ளிகளைப் பெறுகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது போட்டியில் கலந்து கொள்வது மட்டுமல்ல, போட்டியில் கொடுத்த பெரும்பாலான பாடல்களுக்கு இவர் கொடுத்த விரிவான வர்ணனை வெகு சிறப்பாக அமைந்தது. அதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டும், நன்றிகளும் விஜய்.

ர்முதல் நூறு போட்டிகளில் 99 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ரிஷி (@i_vr) இந்தச் சுற்றில் 100 புள்ளிகள் எடுத்து மொத்தம் 199 புள்ளிகளோடு இரண்டாவது நிலையில் இருக்கின்றார்.

 

ராமுதல் நூறு போட்டிகளில் 81 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ராஜா @rajabalanm  இந்தச் சுற்றில் 100 புள்ளிகள் எடுத்து மொத்தம் 181 புள்ளிகளோடு மூன்றாவது நிலையில் உள்ளார்.

தொடந்து 101 – 200 போட்டிகளில் பங்கேற்றுப் பரிசைப் பெறும் அன்பர்கள் விபரம் இதோ

tparavaiநூறு போட்டிகளில்  மொத்தம் 31 போட்டிகளில் முதல்வராக வந்து சாதனை படைத்ததோடு  94 போட்டிகளில் சரியான பதிலை முதல் தடவையில் கொடுத்திருக்கிறார் தமிழ்ப்பறவை  @tparavai

1

கடந்த நூறு போட்டிகளில் நூற்றுக்கு நூறு எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் @muthiah

 

1

நூறு போட்டிகளில் மொத்தம் 99 புள்ளிகள் பெற்றிருக்கிறார் விவேக் @iTamizh

nila

நூறு போட்டிகளில் மொத்தம் 97 புள்ளிகள் பெற்றிருக்கிறார் நிலாக்காலம்

 

 

azhimathiநூறு போட்டிகளில் மொத்தம் 89 புள்ளிகள் பெற்றிருக்கிறார் ஆழிமதி

 

vbsசெப்டெம்பர் 3 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில் https://radiospathy.wordpress.com/2014/09/03/rajachorusquiz193/ சிறப்புப் பரிசாக மூன்றாவது இடத்தைப் பிடித்த பாலாஜி @vbss75

ய்இவர்களுக்கு இசைஞானி இளையராஜா எழுதிய “யாருக்கு யார் எழுதுவது” கட்டுரைத் தொகுதி அடங்கிய புத்தகம்  பரிசாக வழங்கப்படும்.

முதல்வராக வந்த தமிழ்ப்பறவைக்கு மேலும் ஒரு பரிசு வழங்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளைப் பரிசில் வென்றோருக்குத் தனிமடலில் அறியத்தருகின்றேன்.

போட்டியில் தொடர்ந்து பங்கேற்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்  எனது வாழ்த்துகளோடு  நன்றி கலந்த வணக்கங்கள்.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 250

பாடல்: ஒரு நாளும் உனை மறவாத
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : எஜமான்

Advertisements

67 thoughts on “#RajaChorusQuiz 250 வெற்றிகரமான 250 வது நாளில் வெற்றியாளர் பட்டியலோடு

  1. தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கும் கானாபிரபாவுக்கு வாழ்த்துக்கள். 500 பாடல்கள் எனும் தொடர்பணியில் பாதிக்கிணறு தாண்டியமைக்கு வாழ்த்துக்கள். ஆல் இஸ் வெல்…!!!!! #ராஜா ராஜாதான்

    வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்…!!!!

  2. ஒரு நாளும் உனை மறவாது எஜமான் -இளந்தென்றல்

  3. ஒரு நாளும் எனை மறவாத – எஜமான்.
    வெற்றி பெற்றோர்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  4. 250 ஆம் பதிவு எனும் இன்றைய மைல் கல்லுக்கு வாழ்த்துகள்.

    பாடல் “ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்”. படம் எஜமான்.

  5. ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும் 🙂

    வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த ராஜ வாழ்த்துகள் 🙂

    amas32

  6. பார்க்கவே சந்தோஷமா இருக்கு மாஸ்டர்..;)) வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் :))

  7. வெற்றியாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு ஸ்பெஷல் 250 வாழ்த்துக்கள் மாஸ்டர்.
    ஒரு நாளும் உனை மறவாத/எஜமான்

  8. பாடல் – ஒரு நாளும் உன்னை மறவாத…

    படம் – எஜமான்

    நடிகர்கள் – ரஜினிகாந்த், மீனா

    பாடகர்கள் – எஸ்.பி.பி. அண்ட் ஜானகி அம்மா

  9. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் பார்வை தொடர்ந்து வெற்றிப்படம் கொடுக்கும் ஆர்.வி.உதயகுமார் மீது விழுந்த போது அது ஏவி.எம் என்ற பெரும் தயாரிப்பு நிறுவனமும் கூட்டுச் சேர “எஜமான்” படமாகியது. படம் முழுவதும் ரஜினியை வேஷ்டி கட்டவைத்து வானவராயர் ஆக்கியது ஒரு புதுமை என்றால், ஏவிஎம் உடன் ஊடல் கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவை வைத்துத் தான் படம் பண்ணுவேன் என்று விடாப்பிடியாக இருந்து அதைச் சாதித்தது ஆர்.வி.உதயகுமாரின் இன்னொரு சாதனை. கிழக்கு வாசல் படத்தில் வாலியும் பாட்டெழுதினார் ஆனால் தொடர்ந்து வந்த உறுதி மொழி, பொன்னுமணி படங்களில் முழுமையாக ஆர்.வி.உதயகுமாரே எல்லாப்பாடல்களையும் எழுதினார். மீண்டும் வாலிக்கும் ஒரு வாய்ப்பு எஜமான் படத்தில்.
    இசைஞானி இதில் கொடுத்த பாடல் முத்துக்கள் ஒவ்வொன்றுமே நட்சத்திரத் தகுதி. அதிலும்
    “ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
    விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
    இனியான இளமானே துணையான இளமானே”
    என்ற பாடல் உச்சம். இதே பாடலை சோக மெட்டோடு ராஜாவே பாடியிருப்பது படத்தில் மட்டும் வரும்.

    ஹா ஹா இதை நான் சொல்லல நம்ம மாஸ்டர் அவர் பதிவுகள்ல சொல்லிருந்தார்..காபி பேஸ்ட் பண்ணிட்டேன்.:-))

    ஆர்.வி.உதயகுமார் ஒரு படவிழால சொன்னார் ராஜாவிடம் எஜமானுக்கு டியூன் வாங்க சென்றிருந்தேன்..முன்னர் என் ஒரு (படம் பேர் என்னவோ சொன்னாரு ) படத்துக்கு பாடல்களே தேவையில்லைன்னு சொல்லிருந்தேன்.அது அவர்காதுக்கும் போயிருக்கு.அதனால நீதான் படத்துக்கு பாட்டே வேணாம்னு சொல்லுவியே இப்ப நான் வேற பிசின்னு சொல்லி நாட்களை கடத்தினார்.அவர் உதவியாளர் (அப்படித்தான் சொன்னாரு)கிட்ட கேட்டேன் டியூன் முழுக்க சீனியர் இயக்குனர்களுக்கு கொடுத்தாச்சுன்னார்.ரொம்ப யோசிச்சி ராஜாவே வேணாம்னு ஓதுகின டியூன்கள் இருக்குன்னார்.அதையாவது கொடுங்கன்னேன்.ராஜாகிட்ட கேட்க சொன்னார்.அடுத்த நாள் போய்க்கேட்டேன்.வேணாம்னு ஒதுக்கின டியூன் போதுமான்னார்.அதே போதும் கொடுங்கன்னேன்.சிரிச்சிக்கிட்டே விடமாட்டன்னு கொடுத்தார்..அதுதான் எஜமான் படத்துக்கான பாடல்கள். ராஜா சார் வேணாம்னு ஒதுக்குனதே இவ்ளோ அருமையான மெலோடீஸ்னா …?என்ன சொல்ல? (hope he told for this film only)

    இந்தப்பாடல் இளையராஜா அதிகம் பயன்படுத்திய அவருக்கு பிடிச்ச சிந்துபைரவி ராகம். 70 பாடல்களுக்கு மேல இந்த ராகத்துல போட்டுருக்காரு. மெல்லிய சோகத்தை இந்த ராகத்துல அருமையா சொல்லலாம் போல. இதில் அமைந்த சில பாடல்கள் :- அம்மான்னா சும்மா இல்லடா, முதல் படத்துப்பாடலான அன்னக்கிளி உன்னைத் தேடுதே,என் மனவானில் சிறகை விரிக்கும்,என்ன சத்தம் இந்த நேரம்,,பட்டாசான என்னம்மாக்கண்ணு சவுக்கியமா, தேவர்மகனில் இஞ்சி இடுப்பழகி ,கல்யானமாலை கொண்டாடும் பெண்ணே,மானே தேனே கட்டிப்பிடி,மணியோசை கேட்டு எழுந்து,சிந்துபைரவியில் நானொரு சிந்து,

    சிந்துபைரவியின் அவரோகனத்தை பயன்படுத்தி பொன்னைப்போல ஆத்தா பாடல்,

    மூன்றாம்பிறையின் பூங்காற்று புதிரானது,அவதாரத்தின் தென்றல் வந்து தீண்டும் போது,சிகரமாய் வளையோசை கலகலவென பாடல் இவைகளை சொல்லலாம்..
    கோரஸ்கலைப் பயன்படுத்த அதுவும் ஒழுங்கா பயன்படுத்தத் தெரிந்த ஒரே இசையமைப்பாளர் ராஜா சார்தான்.

    250 ஆவது நாளை வெற்றிகரமாகக் கடக்கும் இலக்கியாவின் தந்தையாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 300 ஆவது நாளில் இதே போன்ற எளிதான பாடலைத் தந்து அருளுமாறு கேட்டுக்கொள்கிறேன் அவ்வ்

  10. பாடல் : ஒருநாளும் உன்னை மறவாத
    படம் : எஜமான்

    250க்கு நன்றிகள் & வாழ்த்துக்கள்
    வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    @Qatarseenu

  11. வெற்றிகரமான 250வது நாள் – வாழ்த்துக்கள்!

    ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்… – எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி – எஜமான்

  12. சக ரசிக நண்பர்கள் விஜய்,ராஜபாலன்,பரணி,விவேக்,நிலாக்காலம்,ஆழிமதி & பாலாஜிக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்!!!

    வெற்றிகரமாக 250ஐ தாண்டி வீரநடைப் போடும் Massuக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் & நன்றி!!

  13. “ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்” ஜானகியம்மா, SPB & chorus குயில்கள் குரல்களில் “எஜமான்” படப்பாடல்.

  14. oru nALum unai maRavAdha from EjamAn

    Congrats for 250! As Parani said pAdhi kiNaRu thAndiya ungaLukku vAzhthugaL 🙂

    BTW, how many correct answers I’ve given? Less than 89??

    • கார்த்திக் அருள் உங்கள் மொத்த மதிப்பெண் 94. கடந்த முறை பரிசு வென்றவர்களில் இம்முறை 100 புள்ளி எடுத்தவர்களையே மீண்டும் குறிப்பிட்டிருக்கிறேன்

  15. ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் – எஜமான் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பி, குழுவினர்

    வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! எல்லா பெருமையும் இசைஞானிக்கும் கானாபிரபாவுக்குமே சேரும்.

    250 நாள் மைல்கல்லை (50 சகவீதம்) வெகு சிறப்பான முறையில் தொட்டமைக்கு கானாபிரபாவுக்கு இனிய வாழ்த்துகளும் அளவில்லா பாராட்டுகளும். இதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்றும் இது எவ்வளவு கடினம் என்பதையும் நன்கு அறிவேன். மீதம் 250 நாட்களும் வெகு சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

    இந்த போட்டிகளின் மூலம் இசைஞானியின் இசையை கேட்பதற்கும் போட்டி இல்லாமல் நாம் மட்டும் தனியாக கேட்பதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன. நாம் ஒருவரை ஒருவர் முகம் காணாமல் போனாலும் இசையின் மூலம் நாம் ஒருவரோடு ஒருவர் தினம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அதை நம் இசைஞானியும் மாஸ்டரும் அமைதியாக நமக்கு விருந்து படைத்துவிட்டு நம் முகத்தில் ஏற்படும் பரவசத்தை ரசிப்பதையும் நான் பார்க்கிறேன்.

    எனை ஆளும் எஜமானே!

  16. அன்றாடம் எத்தனையோ விஷயங்கள் மறக்கும் போது இந்த quizக்கு பதில் மறக்காம போட செய்வதே, அந்த பாட்டை கண்டுபிடிப்பதில்,கேட்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி, திருப்திதான்!! மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் மாஸ்டர் 🙂

  17. போட்டியை அழகாக நடாத்திக்கொண்டிருக்கும் கானா ப்ரபாவுக்கும் போட்டியில் வென்றவர்களுக்கும் கலந்துகொள்பவர்களுக்கும் பாராட்டுகள் :))

  18. 250வது புதிருக்கு வாழ்த்துக்கள் மாஸ்டர் :-). இரண்டாவது நூறில், வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    எஜமான் படத்திலிருந்து ஒரு நாளும் உனை மறவாத பாடல்.

  19. வெற்றி பெற்ற அனைவர்க்கும் பாராட்டுகள் 🙂
    ஒரு நாளும் உனை மறவாத….அந்த இடத்தில் நாயகன் நாயகி ஜெயிச்ச உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும் அதற்குத் தோதாக தானும் கொண்டாடி மகிழ்விக்கும் இசை இது..ஆனால் இது ஏற்கனவே வேறு ஒரு படத்திற்காக போட்ட ட்யூனாம் .அதை வேறு ஒரு இயக்குநர் வேண்டாம் எனச் சொன்னதாகவும் அதை தனக்கு போட்டுக்காட்டச் சொல்லி RV உதயகுமார் கேட்டதின் பேரிலேயே ராஜா கொடுத்ததாகவும் உதயகுமார் ஒரு பேட்டியில் சொன்னார்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s