#RajaChorusQuiz 280 & #RajaChorusQuiz 281 சிங்கப்பூரிலும் பேய், ஜப்பானிலும் பேய்

#RajaChorusQuiz 280

#RajaChorusQuiz 281

வார இறுதியை அலங்கரிக்க இரண்டு ஜாலியான பேய்ப் படங்களில் இருந்து பாடல்கள். பதிவின் தலைப்பே ஓரளவு க்ளூவைக் கொடுத்திருக்கும். ஒரு பாடல் பிரபல பாடகர் குரலை மாற்றி அட்டகாசமாகப் பாடியிருக்க இன்னொன்றில் அதே பாடகர் காதல் ஜோடிப் பாடலாக இன்னொரு பெரிய பாடகியோடும், குழுவினரோடும் பாடிக் கலக்குகின்றார்.

 

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 281

பாடல்: வாய்யா வாய்யா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : ஜப்பானில் கல்யாணராமன்

#RajaChorusQuiz 282

பாடல் : இக்கு சைய்யக்கு சைய்யக்கு சைய்யா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர்
படம்: ஊரு விட்டு ஊரு வந்து

Advertisements

#RajaChorusQuiz 279 காதல் கோலம்

#RajaChorusQuiz 279

மார்கழி மாசம் வரப்போகுது இந்த நேரம் ஒரு அழகிய கோலமாய் மெல்லிசை காதல் பாட்டு.
இந்தப் படத்தை இயக்கியவர் ஒரு மலையாள இயக்குநர், நாயகனும் மலையாள சினிமா உலகில் இருந்து வந்தவர். நாயகி சில மாதத்துக்கு முன் ஒரு அரசியல் கட்சியில் இருந்து விலகியது பரபரப்பான செய்தி. அட மறுபடியும் முதல்ல இருந்தா அவ்வ் 🙂

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ஒரு கூட்டில் சின்ன கோகிலம் இரண்டு

படம்: கோலங்கள்

பாடியவர்கள்: மனோ, லேகா, குழுவினர்

#RajaChorusQuiz 278 குயில் கச்சேரி

#RajaChorusQuiz 278

எங்கள் வீட்டில் இருக்கும் பூந்தோட்டப் பராமரிப்பு செஞ்சு கொண்டிருக்கும் போது இந்தப் பாட்டைப் போட்டியில் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு வந்தது. பக்கத்து வீட்டில் காவலுக்கு இருக்கும் நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருக்க என் பாட்டுக்கு ஒலியைப் பிரித்தெடுத்தேன்.

இனி நீங்க தான் கச்சேரி வைக்கணும் மக்கா.
பாடலோடு ஓஓஓஓடி வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 278

பாடல்: அடி கானக்கருங்குயிலே
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், குழுவினர்
படம் : பூந்தோட்டக் காவல்காரன்

#RajaChorusQuiz 277 நிலவுப்பாட்டு

#RajaChorusQuiz 277

வாண்டூஸ் கூட்டம் எலி மாதிரி சாமத்தில் ஓடித் திரிந்து ஆட்டம் போட, பாஞ்சாலி மாதிரி ஒரு பொண்ணு இந்த சுண்டெலிகளோடு ஆட்டம் போட்டுப் பார்க்க, இதையெல்லாம் போலீஸ்காரர் தெனாலி மாதிரி அப்பாவியாகப் பார்க்க ஒரே அடிப்பொலி தான் கண்ணு.

இப்ப நான் ஒரெலி, ரெண்டெலி, மூணெலி எண்ணுறதுக்குள்ள பாட்டோட ஓடி வாங்க
ஐயோ கபாலி ஐயோ கபாலி வாலி எழுதின பாட்டு

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 277

பாடல்: இரவு நிலவு உலகை ரசிக்க
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : அஞ்சலி

#RajaChorusQuiz 276 அப்பவே சொல்லியிருக்கலாமே புள்ள

#RajaChorusQuiz 276

இரவில் சூரியன் அடிக்குமா அதைத் திருப்பிப் போட்ட படம் பேர் வரும்ல. ஒரு இனிய துள்ளிசைப்பாட்டு, சோகத்தையும் புதுமையாக்கித் தந்த இசை.

 

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 276

பாடல்: நீ அப்போது
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா, குழுவினர்
படம் : பகல் நிலவு

#RajaChorusQuiz 275 ராஜாதி ராஜாடா

#RajaChorusQuiz 275

சினிமா உலகில் 275 வது நாள் ரொம்ப விசேஷமானது, அது போலவே இசைஞானி இளையராஜாவின் இனிய, அரிய, சுவையான பாடல்களோடு பயணிக்கும் இந்தப் போட்டியின் 275 வது நாளில் ஒரு அட்டகாஷ் பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினரோடு பாடுகின்றார்.

இந்தப் பாடலைக் கண்டு பிடிக்க பெரிய படிப்பெல்லாம் படிக்க வேண்டியதில்லை லஷ்மி காரை எடு பாட்டைக் கண்டு பிடி 😉

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 275

பாடல்: ராஜாவுக்கு ராஜா நான்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : படிக்காதவா

#RajaChorusQuiz 273 & 274 எஸ்.ஜானகியும் இரண்டு ஆண் பாடகரும்

 

#RajaChorusQuiz 273

 

#RajaChorusQuiz 274

 

 

வார இறுதிப் பாடல்களாகச் சிறப்பிப்பவை பாடகி எஸ்.ஜானகி இரண்டு முன்னணி ஆண் பாடகரோடு பாடிய பாடல்கள் இரண்டு. ஒரு ஆண்பாடகர் இப்போது இல்லை.

இந்தப் பாடல்களின் தனித்துவம் என்னவென்றால் ஒரு பாடல் சாஸ்திரிய சங்கீத தளத்தில் அமைந்திருக்கும். அந்தப் பாடலில் ஆண் பாடகர் தவிர்த்து இன்னொரு முன்னணிப் பெண் பாடகியும் பாடியிருப்பார்.

இந்தப் படப் பாடல்களை இசையமைத்தவர்களில் இசைஞானி இளையராஜாவும் ஒருவர் 😉

இன்னொரு பாடல் அமர்க்களமான மேற்கத்தேய இசையோடு குதூகலிக்கும் பாடல், மழையோ, வெயிலோ, குளிரோ பனியோ மூடாமல் ஆட்டம் போட வைக்கும் பாட்டு.

 

ஓக்கே மக்கள்ஸ் கண்ட கண்ட கதை பேசாமல் பனி போல பதிலைக் கொட்டுங்க,  வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் 12 மணி வரை

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 273

பாடல்: நானொரு பொன்னோவியம் கண்டேன்
பாடியவர்கள் : பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : கண்ணில் தெரியும் கதைகள்

#RajaChorusQuiz 274

பாடல்: பருவகாலங்களின் கனவு
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : மூடுபனி