#RajaChorusQuiz 312 ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

#RajaChorusQuiz 312

இன்று நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் வேளை அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு பாடலாக இந்தப் பாடல் இருக்கும்.

அவ்வளவுக்கு முப்பது வருடங்களைக் கடந்து இன்னமும் சிறப்போடு சீர் செய்த பாட்டு.

பாடலோடு வருக, கொண்டாடி மகிழ்க.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 312

பாடல்: இளமை இதோ இதோ
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,குழுவினர்
படம் : சகலகலா வல்லவன்

Advertisements

#RajaChorusQuiz 311 ஆங்கில ஆசிரியை

#RajaChorusQuiz 311

இன்றைய பாடல் ஒரு ஆங்கில வகுப்புப் போல இருக்கும் காதல் பாட்டு.

ஜெயில் பக்கம் அலைந்தால் படத்தின் தலைப்பு கிட்டும் அப்படியே

பாடலோடு வருக.

பாடல்: A B C நீ வாசி

பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம், குழுவினர்

படம்: ஒரு கைதியின் டைரி

#RajaChorusQuiz 310 காதலிக்க நேரம் உண்டு

#RajaChorusQuiz 310

இன்றைய போட்டிப் புதிரில் அழகான காதல் ஜோடிப்பாடல் ஒன்று.  இந்தப் படம் நடனப்புயல் நடித்து வெளிவந்தது.

பாடலை அறியாதவர்கள் கண்டுபிடித்துக் கேட்கும் போது தம் வசம் இழப்பர் அவ்வளவு அழகான பாட்டு இது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: காதல் நீதானா காதல் நீதானா

பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணனன், சுஜாதா, குழுவினர்

படம்: டைம்

 

#RajaChorusQuiz 308 & 309 கல்யாணத்துக்கு ஒன்று தாலாட்ட ஒன்று

#RajaChorusQuiz 308

#RajaChorusQuiz 309

வார இறுதிப் போட்டியில் இரண்டு வித்தியாசமான பாடல்கள். ஒன்று எஸ்.ஜானகி தனிக்குரலில் கூட்டணி கட்டிப் பாடுவது. இன்னொறு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குழுவினரோடு பாடுவது.

ஒரு படத்தின் நாயகன் மோகன், இன்னொரு படத்தின் நாயகன் பிரபு.

ஒரு படத்தின் தலைப்பு திருமணத்தில் பெண் அணியும் மங்கலப் பொருள் வைத்திருக்கும் பேழை, இன்னொரு படத்தின் தலைப்பு குழந்தைக்குப் பாடும் பாட்டைக் கேட்டா தெரியுமே 😉

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 308

பாடல்: பூங்காற்றே தீண்டாதே
பாடியவர்கள் : எஸ்.ஜானகி,குழுவினர்
படம் : குங்குமச் சிமிழ்

பாடல் : சுட்டிச் சுட்டிப் பொண்ணு
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்
படம்: தாலாட்டுக் கேட்குதம்மா

#RajaChorusQuiz 307 ல்தகா சைஆ

#RajaChorusQuiz 307

வணக்கம் மக்கள்ஸ், இன்று ஒரு துள்ளிசைப்பாடலோடு களம் இறங்குகுன்றேன். இந்தப் பாடல் இன்றைய முன்னணி ஆண் நட்சத்திரங்கள் இருவர் நண்பர்களாக நடித்த படம் 😉

மலையாளத்தில் இருந்து வந்த படத்தின் பெயர் கூட அதே தான்.

பாடலோடு வந்தால் நண்பேண்டா 😉

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ருக்கு ருக்கு ரூப் க்யா

பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், யுவன் சங்கர் ராஜா, ட்ரீம்ஸ் முருகன், செளமியா & குழுவினர்

படம்: ப்ரெண்ட்ஸ்