#RajaChorusQuiz 343 & 344 ஜென்ஸி ஜோடிப்பாட்டு இரண்டு

#RajaChorusQuiz 343

#RajaChorusQuiz 344

பாடகி ஜென்ஸி இசையுலகில் ஆட்சி செய்தது சொற்பக் காலம், ஆனால் கொடுத்த பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ரகம் என்று சொல்லாம்.

அப்படியான இரண்டு பாடல்கள், இவை ஜோடிப்பாடல்களாக இன்றைய போட்டியில் இடம்பெறுகின்றன.

பதில்களோடு திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 343

பாடல்: என்னுயிர் நீதானே
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், ஜென்ஸி & குழுவினர்
படம் : ப்ரியா

#RajaChorusQuiz 344

பாடல்: காதல் ஓவியம் பாடும் காவியம்
பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி & குழுவினர்
படம் : அலைகள் ஓய்வதில்லை

Advertisements

#RajaChorusQuiz 342 ஆடிக் கொண்டாரடி

#RajaChorusQuiz 342

இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூவா என்று புன்முறுவலோடு பாடலைக் கண்டுபிடித்து விடுவீர்கள்.

ஆகவே இந்த சூப்பர் ஹிட் பாடலுக்கெல்லாம் விளக்கம் சொல்லாமல் விட்டுவிடுகின்றேன்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 342

பாடல்: கவிதை கேளுங்கள்
பாடியவர்கள்: வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன் & குழுவினர்
படம் : புன்னகை மன்னன்

#RajaChorusQuiz 341 தரை மேல் நானும்

#RajaChorusQuiz 341

இன்று வரும் பாடல் சமீப ஆண்டுகளில் வெளிவந்து கலக்குக் கலக்கிய ஒரு திரைப்படத்தில் இருந்து.

படத்தின் தலைப்பு கூட ஒரு பாடலை நினைவுபடுத்தும்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 341

பாடல்: வானம் மெல்ல கீழிறங்கி
பாடியவர்கள்: இளையராஜா, பெல்லா ஷிண்டே & குழுவினர்
படம் : நீதானே என் பொன் வசந்தம்

#RajaChorusQuiz 340 சட்டம் என் கையில்

#RajaChorusQuiz 340

இன்று இடம்பெறுவது எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஆஷா போன்ஸ்லே பாடிய ஒரு அழகான ஜோடிப்பாட்டு.

இந்தப் பாடல் முன்னர் ரெக்ஸ் மாஸ்டரின் போட்டியில் இடம்பெற்றிருந்தாலும் கோரஸ் பாடல் என்ற வகையில் தவிர்க்க முடியாது இந்தப் போட்டியிலும் வருகின்றது.

நா.காமராசன் வரிகளில் இடம்பெறுகிறது, படத்தின் நாயகன் வில்லனாக எண்பதுகளில் புகழ்பெற்றவர்.

பாடலோடு வருக.
ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 340

பாடல்: ஒரு தேவதை வந்தது
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போன்ஸ்லே & குழுவினர்
படம் : நான் சொன்னதே சட்டம்

#RajaChorusQuiz 339 வில்லன் கோட்டைக்குள் ஒரு பாட்டு

#RajaChorusQuiz 339

நேரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு சொல்லைத் தன் தலைப்பில் அடக்கிய படம் இது.

வில்லன் கோட்டையில் கண்ணாமூச்சி ஆட்டம் போட்டுப் பாடும் பாட்டு.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 339

பாடல்: பச்சோந்தியே கேளடா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர்
படம் : அந்த ஒரு நிமிடம்

nbsp;

 

#RajaChorusQuiz 338 கண்ணல்ல கண்ணல்ல

#RajaChorusQuiz 338

இன்று இளையராஜாவின் ஆரம்பகாலப் படங்களில் இருந்து ஒரு பாடல். இதுவும் ஒரு பறவை இனத்தைக் குறிக்கும் பெயர்.

சிவக்குமார் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினரோடு பாடிய ஒரு கல்யாணக் குதூகலம் இது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 338

பாடல்: காவேரிக்கரை ஓரத்திலே/ பொன்னுல பொன்னுல
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர்
படம் : சிட்டுக்குருவி

#RajaChorusQuiz 336 & 337 ஹரிஹரனும் ஷ்ரேயாவும் பின்னே சாதனாவும்

#RajaChorusQuiz 336

#RajaChorusQuiz 337

மக்கள்ஸ், இதோ வார இறுதிப் பாடல்கள் இரண்டு ஹரிஹரனைப் பொதுவான குரலாகக் கொண்டு ஒன்றில் ஷ்ரேயா கொசல் இன்னொன்றில் சாதனா சர்க்கமும் பாடிய பாடல்.

இந்த இரண்டு படங்களின் நாயகன் ஒருவரே. இவை 2000 களின் ஆரம்பத்தில் வெளியான படங்கள்.

இங்கே கொடுத்த பாடல்களில் சாதனா சர்க்கம் பாடும் பாடல் படத்தில் வேறொரு பாடல் வரிகளோடு இன்னொரு பாடகரோடு இணைந்த பாடலாக அதே இசை அமைந்திருக்கிறது.

அந்தப் பாடலைக் கொடுத்தால் புள்ளி இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க.

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 336

பாடல்: கஜூராஹோ கனவிலோர் சிற்பம்
பாடியவர்கள்: ஹரிஹரன் & ஷ்ரேயா கோசல் குழுவினர்
படம் : ஒரு நாள் ஒரு கனவு

#RajaChorusQuiz 337

பாடல்: நிலவினிலே ஒளியெடுத்து
பாடியவர்கள்: ஹரிஹரன் & சாதனா சர்க்கம் குழுவினர்
படம் : மனசெல்லாம்