#RajaChorusQuiz 371 & 372 மலையாளம் பறஞ்ச பாட்டுகள்

#RajaChorusQuiz 371

#RajaChorusQuiz 372

மக்கள்ஸ், வார இறுதியில் இரண்டு கலக்கல் மலையாள மொழி பறைஞ்ச பாட்டுகளோடு உங்களைச் சந்திக்கிறேன். ஒரு பாட்டு உலக சூப்பர் டூப்பர் ஹிட் அடிச்சது. இன்னொன்று அவ்வளவு பிரபலமில்லாத பாட்டு.

இரண்டிலுமே கேரளத்தில் கொண்டாடும் ஒரு சிறப்புப் பண்டிகையின் பெயர் பாடலின் முதல் வரிகளில் வருகின்றது.

பிரபலமில்லாத அந்தப் பாட்டு தேவா பாடிய ஒரு பிரபல பாடலின் ஆரம்ப வரிகளைத் தலைப்பாகக் கொண்ட படத்தில் இருக்கிறது.

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

Advertisements

#RajaChorusQuiz 370 கொஞ்சிப் பேசலாம்

#RajaChorusQuiz 370

இன்று கொடுக்கும் பாடல் இடம்பெற்ற படத்தில் இருந்து மூன்றாவதாக நான் பகிரும் பாடல் இது. அவ்வளவுக்கு இந்தப் படத்தின் அட்டகாசமான கோரஸ் குரல்களோடு அமைந்தவை.

குறிப்பாக இந்தப்பாடல் கோரஸ் அடியெடுத்துக் கொடுக்க இளையராஜா, சுஜாதா குரல்களோடு வரும் அற்புத இசைக்கலவை.

பிரசாந்த் நடிப்பில் இன்னொரு காதல் கடுதாசி.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ஏ கொஞ்சிப் பேசு கோபம் என்ன

பாடியவர்கள்: இளையராஜா, சுஜாதா, குழுவினர்

படம்: காதல் கவிதை

#RajaChorusQuiz 369 திருட்டுப் ப்ரியம்

#RajaChorusQuiz 369

இந்தப் பாடலுக்கெல்லாம் விளக்கம் வேண்டுமா யுவர் ஆனர் 😉

தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றிப் பல ரசிகர் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட படமிது.

மனோ, சித்ரா ஜோடிக்கு மறக்க முடியாத பொக்கிஷப் பாட்டு.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ஓ ப்ரியா ப்ரியா

பாடியவர்கள்: மனோ, சித்ரா, குழுவினர்

படம் : இதயத்தைத் திருடாதே

#RajaChorusQuiz 368 சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகள்

#RajaChorusQuiz 368

காசி படத்தைத் தொடர்ந்து அதே இயக்குநர் இயக்கிய இன்னொரு படம். மலையாள நாயகன், நாயகி ஆகியோருடன் நடித்து வெளிவந்தது இந்தப் படம்.

இங்கே பகிரும் பாடல் சொர்ணலதா, பிஜூ நாராயணன், அருண்மொழி, எஸ்.என்.சுரேந்தர் குழுவினரோடு பாடும் அதிகம் கேட்டிராத அழகான பாடல்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல் : (அடி முத்தான முத்தம்மா) வயசு வந்த வாலிபனுக்கு

பாடியவர்கள்: சொர்ணலதா, பிஜூ நாராயணன், அருண்மொழி, எஸ்.என்.சுரேந்தர் குழுவினர்

படம்: என் மன வானில்

 

#RajaChorusQuiz 367 தப்பே இல்லை

#RajaChorusQuiz 367

நடிகர் விஜய்காந்த் இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் கூட்டணியில் வெளிவந்து அவ்வளவு எடுபடாமல் போன படம் இது.
நேற்றைய பாடல் போல இதுவும் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி ஆகியோர் குழுவினருடன் இணைந்து பாடிய இன்னொரு பாடல்.

நடிகர் ரஜினிகாந்த் ராஜா இசையில் நடித்த ஒரு படத்தின் பாடலைத் தன் தலைப்பாக இந்தப் படம் கொண்டிருக்கும்.

பாடலோடு வருக.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: சரியோ சரியோ நான் காதலித்தது

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி, குழுவினர்

படம் : எங்கிட்ட மோதாதே

#RajaChorusQuiz 366 மன்மதன் அம்பு

#RajaChorusQuiz 366

இன்று இடம்பெறும் பாடல் எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த பாடல்.
மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி, குழுவினர் பாடும் இந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தில் மளமளவென்று படங்களில் நடித்துத் தள்ளிய சுதாகரின் இன்னொரு படம்.

மன்மதன் கையில் வைத்திருக்கும் ஒரு சமாச்சாரம் தான் படத்தின் தலைப்பு.
விர்ரென்று பதிலோடு வருக 🙂

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: மலர்களிலே ஆராதனை

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி, குழுவினர்

படம் : கரும்புவில்

 

#RajaChorusQuiz ராஜாவின் கோரஸ் பாடகர் வழங்கும் வெற்றிகரமான ஓராண்டு

kanapraba5

 

#RajaChorusQuiz 364

#RajaChorusQuiz 365

இன்று கோரஸ் பாடல் போட்டி என்று சொல்லப்படும் சேர்ந்திசைக் குரல்களோடு இசைஞானி இளையராஜா அள்ளித்தந்த பாடல்களை வைத்து நடத்திக் கொண்டிருக்கும் போட்டியின் வெற்றிகரமான ஓராண்டில் சந்திக்க்கிறேன்.

ஒவ்வொரு பாடல்களையும் புதுமையாகக் கொடுப்பது மட்டுமன்றி, பின்னணி இசையிலும் பிதாமகராக விளங்கி வரும் இசைஞானி இளையராஜாவின் சாகித்தியத்தின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தவே இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பாடல்களிலும் எவ்வளவு தூரம் வித்தியாசமாகவும் புதுமையாகவும் கோரஸ் குரல்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை ஆச்சரியத்தோடு கேட்டு ரசித்து உங்களோடும் பகிர்ந்து சமகாலத்தில் நீங்களும் அந்த அனுபவங்களைப் போட்டிகளின் வழியாக வெளிப்படுத்தி வருவது மட்டற்ற மகிழ்ச்சி.

இந்தப் போட்டி இவ்வளவு தூரம் வந்ததற்கு முதல் காரணம் போட்டியில் பங்குபெறும் நீங்கள் ஒவ்வொருவரும் தான். நாள் தவறாமல் பங்கெடுப்பதோடு போட்டிப் பாடல்களைத் தேடிப் பிடித்துக் கண்டு சந்தோஷ ஆர்ப்பரிப்பில் இருக்கும் உங்களைக் காணும் போது இந்தப் போட்டிக்காகச் செலவிடும் நேரம் காற்றில் பறந்து ஆத்ம திருப்தியே மேலிடுகின்றது.

அந்த வகையில் மீண்டும் உங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் என் நன்றியைப் பகிர்கிறேன்.

இன்று இடம்பெறும் வார இறுதிப் போட்டிப் பாடல்கள் இரண்டும் தனித்துவமானவை. ஒரு பாடல் கோரஸ் குரல்களை மட்டுமே வைத்து இசை ஜாலம் நடத்தியிருக்கின்றது இவர்களோடு அருண்மொழியும் & விஜி மேனுவேலும் இணைந்திருக்கிறார்கள். இந்தப்பாடலின் ஆரம்பம், இடையிசைகள், முடிவிசை என்று எல்லாமே கோரஸ் குரல்களோடு வித்தியாசமாகப் பயணிக்கும் அந்த அதிசயத்தைத் தனியாகக் கேட்டு இன்புற வேண்டி 1 நிமிடம் 32 விநாடிகள் கொண்ட ஒலிப்பகிர்வாக அந்த இசையையைக் கொடுக்கிறேன். முடிவுறும் இசையை கோரஸ் குரல்களாக மட்டுமன்றி அவர்களைச் சிரிக்க வைத்து அதேயே இசைக் கோப்பாக மாற்றிய மகத்துவ இசையமைப்பு இது.

இன்னொரு பாடல் இசைஞானியோடு, எஸ்.ஜானகி, பி.எஸ்.சசிரேகா மற்றும் கோரஸ் குரல்களும் சேர்ந்து பாடி மகிழும் இனிய பாடல். சிறுவர்களோடு கும்மாளம் போட்டுப் பாடும் ஒரு அழகிய கிராமியக் காத்து இது.

முந்திய பாடலுக்கு மாறுபட்டு இன்னொரு களத்தில் அமைந்த பாட்டு இது.

 

இந்தப் போட்டியை ஆரம்பித்த போது கோரஸ் குரல்களுக்கான மகத்துவத்தைப் பறை சாற்ற ஒரு களம் கிடைத்து விட்டதே என்பதாக உணர்ந்தேன். இந்தப் பாடல்களைக் கண்டுபிடித்து நீங்கள் கேட்கும் போது அந்த உணர்வைப் பெறுவீர்கள்.

இங்கே கொடுக்கப்பட்ட ஒரு படத்தின் தலைப்பு பழைய படமொன்றின் தலைப்பாக அமைந்திருக்கும். இன்னொன்று பிரபல எழுத்தாளரின் நாவல் படமாக அதே பெயரில் வந்த பூ படம்.

இன்றைய சிறப்புப் போட்டியில் சற்று வித்தியாசமாக, இங்கே இடம்பெறும் பாடல்கள் இடம்பெற்ற படங்களைப் பின்வரும் படப் பட்டியலுக்குள் ஒளித்து வைத்திருக்கின்றேன். நீங்கள் செய்ய வேண்டியது இந்தப் பட்டியலில் இருந்து என்ன படம் என்று தேர்ந்து, பாடலைக் கண்டுபிடிப்பது தான். இதோ அந்தப் பட்டியல் ;

ஆவாரம் பூ

சதி லீலாவதி

செவ்வந்தி

கரையெல்லாம் செண்பகப்பூ

பூவே பூச்சூடவா

அபூர்வ சகோதரர்கள்

நாடோடி மன்னன்

மாயா பஜார் 1995

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 364

பாடல்: நான் பொறந்து வளர்ந்தது ராஜ வம்சத்திலே

பாடியவர்கள்: அருண்மொழி, விஜி இமானுவேல், குழுவினர்

படம் : மாயா பஜார் 1995

#RajaChorusQuiz 365

பாடல்: ஏரியிலே எலந்த மரம்

பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி, பி.எஸ்.சசிரேகா, குழுவினர்

படம் : கரையெல்லாம் செண்பகப்பூ

 

தொடர்ந்து கடந்த 201 ஆவது போட்டியில் இருந்து 300 ஆவது போட்டி வரையான 100 போட்டிகளில் இடம்பிடித்துக் கொண்ட வெற்றியாளர்கள்.

 

 

 

வ்கடந்த 300 போட்டிகளிலும் முதலாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட விஜய் (@maestrosworld)  அவர்கள் மொத்தம் முந்நூறு புள்ளிகளைப் பெறுகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது போட்டியில் கலந்து கொள்வது மட்டுமல்ல, போட்டியில் கொடுத்த பெரும்பாலான பாடல்களுக்கு இவர் கொடுத்த விரிவான வர்ணனை வெகு சிறப்பாக அமைந்தது. அதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டும், நன்றிகளும் விஜய்.

ர்முதல் நூறு போட்டிகளில் 99 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்ட ரிஷி (@i_vr)  இரண்டு சுற்றுகளில் 100 புள்ளிகள் எடுத்து மொத்தம் 299 புள்ளிகளோடு இரண்டாவது நிலையில் இருக்கின்றார்.

1கடந்த 200வது நாள் போட்டியில் நூற்றுக்கு நூறு எடுத்து வெற்றி பெற்றிருந்த @muthiah இந்தச் சுற்றிலும் 100/100 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார்.

1கடந்த 201 ஆவது போட்டியில் இருந்து 300 ஆவது போட்டியில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கிறார் @iTamizh இவர் கடந்த சுற்றில் பரிசு பெற்ற அன்பர்.

nilaகடந்த 201 ஆவது போட்டியில் இருந்து 300 ஆவது போட்டியில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கிறார் @nilaakaalam இவர் கடந்த சுற்றில் பரிசு பெற்ற அன்பர்.

தொடந்து 101 – 200 போட்டிகளில் பங்கேற்றுப் பரிசைப் பெறும் அன்பர்கள் விபரம் இதோ

முதல்வர் விருது

tparavai

vbs

ராஜா கோரஸ் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக நூறு போட்டிகளில் சம அளவில் முதல்வராகி இருக்கிறார்கள் தமிழ்ப்பறவை  @tparavai  மற்றும் பாலாஜி @vbss75 .

தலா 34 போட்டிகளில் இவ்வொருவரும் முதல்வர் பதவியை அடைந்திருக்கின்றனர்.

100 போட்டிகளில் வென்ற அன்பர்கள்

vbs

பாலாஜி @vbss75 இந்தச் சுற்றில் 100/100 புள்ளிகள் பெற்று முதல்வர் பரிசோடு இரட்டைப் பரிசு பெறும் வெற்றியாளராக அமைகின்றார்.

asஇந்தச் சுற்றில் அதிரடியாகக் களமிறங்கி ஒவ்வொரு போட்டியிலும் தன் வெற்றியை உறுதிப்படுத்தி 100/100 புள்ளிகள் பெற்று சுஷிமா சேகர் @amas32 வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார்.

 

போட்டியில் பரிசை வென்றோருக்கு சிறப்பான புத்தகங்கள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளைப் பரிசில் வென்றோருக்குத் தனிமடலில் அறியத்தருகின்றேன்.

போட்டியில் தொடர்ந்து பங்கேற்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்  எனது வாழ்த்துகளோடு  நன்றி கலந்த வணக்கங்கள்.