#RajaChorusQuiz 402 இந்திர புத்திரன்

#RajaChorusQuiz 402

வீரப்பன் கதையை வச்சு எடுத்த இன்னொரு படம் இது. இன்று இடம்பெறும் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் பாடுகின்றனர்.

 

பதிலோடு நாளை மதியம் 1 மணிக்கு வாருங்கள்.

 

 

#RajaChorusQuiz 401 ராமன் அப்துல்லா

#RajaChorusQuiz 401

இன்று இடம்பெறும் பாடல் ஒரு புகழ்பூத்த நாயகனின் திரைப்படம். அவரே இயக்கிய இப்படத்தின் இசை முதலில் இன்னொருவர் பின்னர் ராஜாவே பொருத்தம் என்று கை மாறியது.

ஹரிஹரன், ஜாலி முகர்ஜி மற்றும் படத்தின் நாயகன், குழுவினர் தேசிய ஒருமைப்பாட்டுக் கருத்தை வலியுறுத்திப் பாடும் அழகான பாடல் இது.

பதிலோடு நாளை மதியம் 1 மணிக்குள் வாருங்கள்.

 

இன்றிலிருந்து தொடரும் ஐந்தாவது சுற்று

 போட்டி விதிமுறை இதோ

1. ஒவ்வொரு 100 போட்டிகளில்  பங்கு பெற்று அதிகப்படியான புள்ளிகள் பெறும் முதல் மூவருக்கு சிறப்பு புத்தகப் பரிசுகள் காத்திருக்கின்றன.
2. கடந்த நூறு பாடல்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் அவர்கள் அதிகப்படியான புள்ளிகளை இந்த நூறு பாடல்கள் சுற்றில் பெற வாய்ப்புக் கிட்டினாலும் மீண்டும் பரிசை வெல்ல முடியாது.
அதிகப்படியான புள்ளிகள் பெற்ற அடுத்த மூன்று பேருக்குப் பரிசுகள் சென்றடையும்.
3.ஒவ்வொரு போட்டியிலும் முதல்வராக அதிக போட்டிகளில் சரியான பதில்களோடு இடம்பிடித்த ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கின்றது. அவர் முந்திய நூறு பாடல்கள் சுற்றில் வென்றிருந்தாலும் கூட.முதல்வராக வருபவர் “தமிழில்” பாடலின் முதல் சொற்கள் இரண்டைத் தட்டச்சுச் செய்ய வேண்டும்.  பாடல் தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டால் முதல்வர் பதவி இல்லை.
4. ஒரு போட்டியில் திருத்திக் கொடுக்கும் பதிலுக்குப் புள்ளி கிடையாது. முதலில் கொடுத்த பதிலே புள்ளிக்கணக்கில் சேர்க்கப்படும்.

#RajaChorusQuiz 399 & 400 குழு நானூறு

raja#RajaChorusQuiz 399

#RajaChorusQuiz 400

இன்று வெற்றிகரமான நானூறாவது போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்றைய போட்டியில் இசைஞானி இளையராஜாவின் இரு வேறுபாட்ட பாடல்கள் வருகின்றன. ஒன்றில் கோரஸ் குரல்கள் ஒலிக்க இளையராஜாவும் உமா ரமணனும் பாடுகின்றார்கள்.

இன்னொன்றில் இளையராஜாவே கோரஸ் பாடகராகவும் சேர்ந்திசைக் குரல்களோடு ஒலிக்க, மூலப்பாடலை ஜெயச்சந்திரன், பி.சுசீலா ஆகியோர் பாடுகின்றார்கள்.

பாடல் இரண்டுமே பிரபலம் என்றாலும் பொது மக்கள் நன்மை கருதி இதோ க்ளூ 🙂

ஒரு படத்தின் தலைப்பு ரயில் நிலையத்தோடு சம்பந்தப்பட்டது. இன்னொன்று ஒரு இடத்தையும், மிருகம் ஒன்றின் பெயரையும் தாங்கிய படம் ஆகும்.

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை மதியம் 1 மணிக்குள் வாருங்கள்.

#RajaChorusQuiz 399

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நினைச்சு

பாடியவர்கள்: இளையராஜா, உமாரமணன், குழுவினர்

படம்: பகவதிபுரம் ரயில்வே கேட்

#RajaChorusQuiz 400

பாடல்: காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

பாடியவர்கள்: பி.சுசீலா, இளையராஜா, ஜெயச்சந்திரன், குழுவினர்

படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி

 

இந்த வார இறுதியோடு நிறைவை நாடும் நான்காவது சுற்றைத் தொடர்ந்து ஐந்தாவது சுற்று வரும் திங்கள் இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு ஆரம்பமாகும்.

 போட்டி விதிமுறை இதோ

1. ஒவ்வொரு 100 போட்டிகளில்  பங்கு பெற்று அதிகப்படியான புள்ளிகள் பெறும் முதல் மூவருக்கு சிறப்பு புத்தகப் பரிசுகள் காத்திருக்கின்றன.
2. கடந்த நூறு பாடல்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் அவர்கள் அதிகப்படியான புள்ளிகளை இந்த நூறு பாடல்கள் சுற்றில் பெற வாய்ப்புக் கிட்டினாலும் மீண்டும் பரிசை வெல்ல முடியாது.
அதிகப்படியான புள்ளிகள் பெற்ற அடுத்த மூன்று பேருக்குப் பரிசுகள் சென்றடையும்.
3.ஒவ்வொரு போட்டியிலும் முதல்வராக அதிக போட்டிகளில் சரியான பதில்களோடு இடம்பிடித்த ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கின்றது. அவர் முந்திய நூறு பாடல்கள் சுற்றில் வென்றிருந்தாலும் கூட.முதல்வராக வருபவர் “தமிழில்” பாடலின் முதல் சொற்கள் இரண்டைத் தட்டச்சுச் செய்ய வேண்டும்.  பாடல் தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டால் முதல்வர் பதவி இல்லை.
4. ஒரு போட்டியில் திருத்திக் கொடுக்கும் பதிலுக்குப் புள்ளி கிடையாது. முதலில் கொடுத்த பதிலே புள்ளிக்கணக்கில் சேர்க்கப்படும்.

 

 

 

 

#RajaChorusQuiz 398 துள்ளாட்டம் போடு

#RajaChorusQuiz 398

400 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளை அட்டகாசமான ஒரு துள்ளிசைப்பாடல்.

புரியாத மொழியில் எல்லாம் கலந்து கட்டி ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் தமிழ் வரிகளின் ஆரம்பத்தைக் கொடுத்தால் போதும்.

பாடலோடு வருக.

பாடல்: ஏஞ்சோடி மஞ்சக்குருவி

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், எஸ்.பி.சைஜலா, குழுவினர்

படம்: விக்ரம்

 

 

 

 

#RajaChorusQuiz 397 வரம் தந்த சாமி

#RajaChorusQuiz 397

இரண்டு பெண்களின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட படத்தில் இருந்து ஒரு அழகிய காதல் பாடல்.

 

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் பாடுகின்றனர்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 397

பாடல்: ஓஹோ அந்தக் காமன்/ முன்னம் செய்த தவம் பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : வனஜா கிரிஜா