#RajaChorusQuiz 399 & 400 குழு நானூறு

raja#RajaChorusQuiz 399

#RajaChorusQuiz 400

இன்று வெற்றிகரமான நானூறாவது போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்றைய போட்டியில் இசைஞானி இளையராஜாவின் இரு வேறுபாட்ட பாடல்கள் வருகின்றன. ஒன்றில் கோரஸ் குரல்கள் ஒலிக்க இளையராஜாவும் உமா ரமணனும் பாடுகின்றார்கள்.

இன்னொன்றில் இளையராஜாவே கோரஸ் பாடகராகவும் சேர்ந்திசைக் குரல்களோடு ஒலிக்க, மூலப்பாடலை ஜெயச்சந்திரன், பி.சுசீலா ஆகியோர் பாடுகின்றார்கள்.

பாடல் இரண்டுமே பிரபலம் என்றாலும் பொது மக்கள் நன்மை கருதி இதோ க்ளூ 🙂

ஒரு படத்தின் தலைப்பு ரயில் நிலையத்தோடு சம்பந்தப்பட்டது. இன்னொன்று ஒரு இடத்தையும், மிருகம் ஒன்றின் பெயரையும் தாங்கிய படம் ஆகும்.

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை மதியம் 1 மணிக்குள் வாருங்கள்.

#RajaChorusQuiz 399

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நினைச்சு

பாடியவர்கள்: இளையராஜா, உமாரமணன், குழுவினர்

படம்: பகவதிபுரம் ரயில்வே கேட்

#RajaChorusQuiz 400

பாடல்: காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

பாடியவர்கள்: பி.சுசீலா, இளையராஜா, ஜெயச்சந்திரன், குழுவினர்

படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி

 

இந்த வார இறுதியோடு நிறைவை நாடும் நான்காவது சுற்றைத் தொடர்ந்து ஐந்தாவது சுற்று வரும் திங்கள் இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு ஆரம்பமாகும்.

 போட்டி விதிமுறை இதோ

1. ஒவ்வொரு 100 போட்டிகளில்  பங்கு பெற்று அதிகப்படியான புள்ளிகள் பெறும் முதல் மூவருக்கு சிறப்பு புத்தகப் பரிசுகள் காத்திருக்கின்றன.
2. கடந்த நூறு பாடல்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் அவர்கள் அதிகப்படியான புள்ளிகளை இந்த நூறு பாடல்கள் சுற்றில் பெற வாய்ப்புக் கிட்டினாலும் மீண்டும் பரிசை வெல்ல முடியாது.
அதிகப்படியான புள்ளிகள் பெற்ற அடுத்த மூன்று பேருக்குப் பரிசுகள் சென்றடையும்.
3.ஒவ்வொரு போட்டியிலும் முதல்வராக அதிக போட்டிகளில் சரியான பதில்களோடு இடம்பிடித்த ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கின்றது. அவர் முந்திய நூறு பாடல்கள் சுற்றில் வென்றிருந்தாலும் கூட.முதல்வராக வருபவர் “தமிழில்” பாடலின் முதல் சொற்கள் இரண்டைத் தட்டச்சுச் செய்ய வேண்டும்.  பாடல் தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டால் முதல்வர் பதவி இல்லை.
4. ஒரு போட்டியில் திருத்திக் கொடுக்கும் பதிலுக்குப் புள்ளி கிடையாது. முதலில் கொடுத்த பதிலே புள்ளிக்கணக்கில் சேர்க்கப்படும்.

 

 

 

 

Advertisements

68 thoughts on “#RajaChorusQuiz 399 & 400 குழு நானூறு

 1. 400 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பிரபா… ஒரு மணிக்கு டென்சன் ஏத்திவிட்ருவீங்க:)
  மிகவும் மிகவும் தவிர்க்க இயலாத காரணங்களால் மட்டுமே ஒரு மணிக்கு போட்டியை மிஸ் பண்ணிருப்பேன்…

  300-400 சீசன்ல, மின்னல் பாலாஜி அதிக முதல்வராயிட்டார்…

  அடுத்த சீசன்ல பாத்துக்கிறேன்…

  எவ்வளவோ, நிறையப் பாடல்களை அறிமுகம் பண்ணிட்டு வர்றீங்க…

  ராஜா ரசிகர்களை, மாஃபியாவாக்கிய புண்ணியம் உங்களுக்கு;0)

 2. 399. செவ்வரளித் தோட்டத்திலே – பகவதிபுரம் ரயில்வே கேட்

  400. காளிதாசன் கண்ணதாசன் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

 3. 399 – பகவதிபுரம் இரயில்வே கேட் – செவ்வரளி தோட்டத்தில
  400 – சூரக்கோட்டை சிங்கக்குட்டி – காளிதாசன்

  மன்னிச்சிடுங்க மாஸ்டர்.. இடையில் சில தவிர்க்க முடியாத தடங்கல்.. இனி ஏற்படாது என்று நினைக்கிறேன்.

 4. பெரிய கமெண்ட் அடிச்சேன். நெட் டிஸ்கனெக்ட் ஆயிடுச்சு… மறுபடியும் பாதி அடிக்க ஆரம்பிச்சேன். வெண்ணிலா, கீபோர்டில் கை வச்சு, அதுவும் தொலைஞ்சிடுச்சு. இப்ப மூணாவது முறையா…

  399. இன்றைய பாடல் , செவ்வரளித் தோட்டத்திலே – பகவதிபுரம் ரயில்வேகேட் படத்திலிருந்து..

  இளையராஜா- உமாரமணன்…

  உமா பாடிய பாடல்கள் குறைவு, தரமோ நிறைவு. பாடிய அனைத்துப்பாடல்களும் கிட்டத்தட்ட சூப்பர்ஹிட் என்னும் வகையில் , உமாரமணன் குட்டி ஜென்சி….

  இன்றைய பாடலில், ராஜா- உமா காம்போ சூப்பர். ஒரு கிராமத்து எளிய, இளைஞனின் உள்ளார்ந்த காதலைத் தன் குரலில் வெளிப்படுத்தியிருப்பார் ராஜா…(ராஜாவின் குரலே பிடிக்காது என்று சிலர் சொல்வர்.அவர்களை கோவை சாமிகிரிச்சித்தர் இரட்சிக்கட்டும்)…

  400. காளிதாசன் கண்ணதாசன் பாடல் சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்திலிருந்து…

  முதலில் இப்பாடல் கேட்டுப்பழகிப் பின்னால் இது சில்க் நடித்த பாடல் என நம்பக் கடினமாகிவிட்டது:)

  பிரபு- சில்க் காம்போ விற்கு ஏற்கெனவே ‘பூவே இளைய பூவே’ கொடுத்த ராஜா, அதற்குச் சற்றும் குறை வைக்காமல் இப்பாடலைக் கொடுத்துள்ளார்…. கோரஸைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை;)

  ராஜா ரசிகர்கள் மட்டுமல்லாமல் எல்லா ரசிகர்களையும் மாஃபியா ஆக்கிய பெருமை உம்மையே சேரும்….;)

  வாழ்க கானா பிரபா…

  ஒரே விசயத்தில் மட்டும் நான் அரர சொல்வதைப் பின்பற்ற விரும்புகிறேன்…அது கீழே

  “ எல்லாப்புகழும் ராஜாவுக்கே…!!!”

 5. 400 என்பது வெறும் எண்ணல்ல என்பது இந்த பதிவுகள் அனைத்தையும் ஒருசேர காணும்போது தெரியும். வாழ்த்துகள் பல…

 6. 399 செவ்வரளி தோட்டத்திலே /பகவதிபுரம் ரயில்வே கேட்
  400 காளிதாசன் கண்ணதாசன்/ சூரக்கோட்டை சிங்கக்குட்டி

 7. மேகம் கருக்கயில புள்ள தேகம்…

  காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ…

 8. மாஸ்ஸ்ஸ்டர் 400 வாழ்த்துக்கள் உங்களுக்கும் எனக்கும் முதல் முறையா 400 போட்டியில் கலந்து இருக்கேன் ரொம்ப சந்தோஷம் ;))

 9. செவ்வரளி தோட்டத்தில உன்ன – பகவதிபுரம் ரயில்வே கேட்
  காளிதாசன்… கண்ணதாசன்….கவிதை நீ – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

  Best songs on a special day….

  @Qatarseenu

 10. 400க்கு வாழ்த்துக்கள் மாஸ்டர்…..
  உங்களின் தொடர் உழைப்புக்கும், இப்பணியில் உங்கள் அர்ப்பணிப்புக்கும் வந்தனங்கள்.

 11. ராஜா ரசிகர்களை, மாஃபியாவாக்கிய புண்ணியம் உங்களுக்கு;0)

  வாழ்த்துகள்:)
  .

 12. 400 வாழ்த்துகள்! நிறைய நேரம் எடுக்கும் இப்புதிர்களை குடும்ப அலுவலகப் பணிகளுக்கு இடையே தயாரிக்க பேரார்வம் ஒன்றே முக்கியம். மேலும் தொடர வாழ்த்துகள்!

  399-
  400- காளிதாசன் கண்ணதாசன்

 13. செவ்வரளி தோட்டத்துல – பகவதிபுரம் ரயில்வே கேட்.
  காளிதாசன் கண்ணதாசன் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி.

 14. இராஜரசிகர்களான மாஃபியாக்கள் ஞானியாரின் பழைய பாடல்களை மட்டும் ரசிக்கும் ரசிகர்களை செல்லமாக “மொன்னைகள்”, “ஞானசூனியங்கள்” என்று வசை பாடுகின்றனர். ஆகையால் அடுத்த நூறு பாடல்களை 2000ஸ்ன் ஹிட்சுகளாக கொடுத்து எங்களை முன்னேற்ற வேண்டுமென்று விண்ணப்பிக்கிறேன்… #ஹிஹி

  • உம்ம குசும்பிருக்கே கூமுட்ஸ் … ஏப்ரலில் ட்விட்டருக்கு திரும்ப வாங்க, கவனிக்கிறோம் 🙂 🙂 🙂

   • ஹிஹி… 😂 எல்லாப் புகழும் இறைவனுக்கே…!!

    ஆனாலும் சில சமயம் காண்டாவுதுஜி…

 15. 399 பாடல் செவ்வரளி தோட்டத்திலே உன்ன நினைச்சேன்
  படம் பகவதிபுரம் ரெயில்வே கேட்
  400 பாடல் காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
  படம் சூரக்கோட்டை சிங்கக்குட்டி

  இதில் செவ்வரளி தோட்டத்திலே உன்ன நினைச்சேன் பாட்டை ஒருமுறை உங்களிடம் சிறப்பு பதிவாக போட சொல்லி கேட்டிருந்தேன்.

  என்னா ஒரு பாடல். கேட்க கேட்க இன்பம்தான்
  என்னென்னவோ சொல்ல நினைச்சேன் சொல்லாம தான் விட்டேனே.
  ராஜா ராஜா தான். ஒருத்தரும் அசைக்க முடியாது

 16. செவ்வரளிதோட்டத்திலே=பகவதிபுரம்ரயில்வேகேட்

 17. 400 க்கு வாழ்த்துக்கள்- காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ-சூரக்கோட்டை சிங்கக்குட்டி @shafi555

 18. 400 -வாழ்த்துக்கள் மாஸ்டர்! சக பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அட்டகாசமான தேர்வுகள்.மன்னிக்கவும் மாஸ்டர் சில சொந்த காரணங்களினால் போட்டிக்கு வர முடியிறதில்ல.500- நாட்களோட முடிஞ்சிராம மேலும் தொடர வாழ்த்துக்கள். நான் 200 வது நாளுக்கு மேல தான் வர்றேன் இதிலேயே பல அறியாத அற்புத பாடல்களை அறிமுகம் செய்து வச்சிட்டீங்க மாஸ்டர். நன்றி தொடரட்டும் உங்கள் சேவை.அதிலும் இந்த 400 வது நாள் போட்டிக்கான பாடல் ஆஹா! ஆஹா! ஆஹா! அதிகம் விரும்பும் பாடல்.வார இறுதிக்கு அருமையான பாடல்கள் .

 19. .399-செவ்வரளி தோட்டத்திலே/பகவதிபுரம் ரயில்வே கேட் 400 – காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ/ சூரக்கோட்டை சிங்கக்குட்டி

 20. 400 நாட்கள் தொடர்ந்து சிறப்பாக நடத்திவருவதற்கு வாழ்த்துக்கள்!

  399/500 – செவ்வரள்ளி தோட்டத்துலே உன்ன நெனச்சு தேடிக்கிட்டு பாடுதைய்யா இந்த மனசு..
  உமா ரமணன் & இளையராஜா
  பகவதிபுரம் ரயில்வேகேட்

  400-500 – காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்…
  பி. ஜெயச்சந்திரன் & பி. சுசீலா
  சூரக்கோட்டை சிங்ககுட்டி

 21. ராஜா கோரஸ் குவிஸ் போட்டியின் வெற்றிகரமான 400 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் கானா பிரபா 🙂 🙂

 22. 399/500. பாடல் “செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நினைச்சு”. படம் பகவதிபுரம் ரயில்வே கேட் (1983).

  400/500. பாடல் “காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ”. படம் சூரக் கோட்டை சிங்கக்குட்டி (1983).

 23. 399 – செவ்வரளி தோட்டத்துல உன்ன நெனச்சி – பகவதிபுரம் ரெயில்வே கேட்
  400 – காளிதாசன்…. கண்ணதாசன் கவிதை நீ – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

 24. 399.செவ்வரளி தோட்டத்துல உன்ன நெனைச்சு – பகவதிபுரம் ரயில்வே கேட்
  400. காளிதாசன், கண்ணதாசன் கவிதை நீ – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

 25. 400வது புதிருக்கு வாழ்த்துக்கள் மாஸ்டர் 🙂 .

  399: பகவதிபுரம் ரயில்வே கேட் படத்திலிருந்து செவ்வரளி தோட்டத்தில பாடல்.

  400: சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்திலிருந்து காளிதாசன் கண்ணதாசன் பாடல்.

 26. 399 – செவ்வரள்ளி தோட்டதுல உன்ன நெனச்சேன்.. – உமா ரமணன் & இளையராஜா – பகவதிபுரம் ரயில்வேகேட்
  400 – காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ… – ஜெயச்சந்திரன் & சுசீலா – சூரக்கோட்டை சிங்ககுட்டி

 27. உளங்கனிந்த 400ஆம் நாள் நல்வாழ்த்துகள் மாஸ்டர்!! 1000 படங்களுக்கும் மேல் சமைத்த இசை சுரபியை நம்பி நீங்களும் 1000 நாட்கள் வரை இப்பயணத்தை வெற்றிகரமாக நடத்தலாம் ஆனாலும் 400 நாட்களுக்கே எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என உணர முடிகிறது… வாழ்க உங்கள் பணி!!! இன்னும் 100 நாட்களில் முடிந்துவிடுமே என சிறு கவலை எட்டி பார்க்கிறது…இருந்தாலும் பயணம் நாளுக்கு நாள் சிறப்பாக சென்று அக்கவலையை மறக்க செய்கிறது! நன்றி மாஸ்டர்!!

 28. #399/500: “செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு” உமா ரமணன், ராசா & கோரஸ் குரல்களில் “பகவதிபுரம் ரயில்வே கேட்” படபாடல்.

  #400/500:”காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ “ ஜெயேட்டன், சுசீலாம்மா, ராசா & கோரஸ் குரல்களில் “சூரக்கோட்டை சிங்கக்குட்டி” படப்பாடல்.

 29. முதல் பாடல்: செவ்வரளித் தோட்டத்துல
  படம்: பகவதிபுரம் ரயில்வே கேட்
  இரண்டாவது பாடல்: காளிதாசன் கண்ணதாசன்
  படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி

 30. 400க்கு வாழ்த்துகள்! 🙂 அடுத்து இன்னும் 100தான் இருக்கா??? :O தொடரலாமே..

 31. 1. பகவதிபுரம் ரயில்வே கேட்- செவ்வரளி தோட்டத்திலே
  2. சூரக்கோட்டை சிங்கக்குட்டி – காளிதாசன் கண்ணதாசன்

 32. 399 – செவ்வரளி தோட்டத்துல #பகவதிபுரம்ரெயில்வேகேட்
  400 – காளிதாசன் கண்ணதாசன் #சூரக்கோட்டை சிங்கக்குட்டி

 33. 399-செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சேன்
  400-காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

 34. 399;செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சேன்/பகவதிபுரம் ரயில்வே கேட்
  400; காளிதாசன் ..கண்ணதாசன் ..கவிதை நீ நெருங்கி வா/சூரக் கோட்டை சிங்கக் குட்டி

  வாழ்த்துகள் ; 400

 35. 399 செவ்வரளித் தோட்டத்திலே – பகவதிபுரம் ரயில்வே கேட்
  400 காளிதாசன் கண்ணதாசன் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

  400 – வாழ்த்துக்கள் & நன்றிகள் மாஸ்டர் 🙂

 36. 399. செவ்வரளி தோட்டத்திலே உன்னை நெனச்சு – பகவதிபுரம் ரயில்வே கேட்
  400. காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

  இதயங்கனிந்த நானூறு நாள் வாழ்த்துக்கள்!! என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் மாபெரும் உழைப்பு கண் முன்னால் தெரிகிறது. இசைஞானி தன் இசையில் பாடும் குழுவினருக்கு கொடுத்த அங்கீகாரமும், இசையில் அவர்கள் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த போட்டியின் மூலம் வெகு நீங்கள் சிறப்பாக வெளி கொணர்ந்த விதம் அவர்களின் மேல் பலமடங்கு மரியாதையும், இன்னும் அதிகமாக இசைஞானியின் இசையின் பெருமையை உணர்ந்தேன். அதற்கு உங்களுக்கு மிக்க நன்றி! இந்த 40 ஆண்டுகளில் அவர் இசையில் எவ்வளவு வித விதமான பாடல் சேர்ந்திசை குழுவினர்கள் வந்து போயிருப்பார்கள் என்று எண்ணிப்பார்த்தால் மலைக்க வைக்கிறது. முகம் தெரியாத அம்மாமனிதர்கள் அவர்களின் சேர்ந்திசை குரல்களால் நம் வாழ்வை வண்ணமயமாக்கியதற்கு அவர்களுக்கு என் பணிவான பாராட்டுக்களும், எண்ணற்ற நன்றிகளும்.

  400 நாட்கள் படு வேகமாக போய்விட்டது. அருமையான பாடல் தேர்வுகள். இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது என்று என்னும் பொழுது கொஞ்சம் வருத்தமாக உள்ளது. மீதமுள்ள 100 நாட்களையும் வெகு சிறப்பாக நடத்த மனமார்ந்த வாழ்த்துக்கள். நானூறாவது நாளை ஒட்டி நான் ஏற்கனவே எழுதிய ஒரு பாடலின் பதிவை மறு பதிவு செய்கிறேன்.

  Definitely I want to know the name of the singer who sings the opening phrase and also the second interlude phrase. Authentic voice of our land. Maestro knows how to start and how not to start a song. Maestro starts off beautifully with thaanaanE…thaanaannaa…thaanaannaa. Ideally for this kind of a start, our hearts automatically goes to the paddy fields where farmers already start their work on a bright sunny day, singing their heart out to drive away the morning lazy breath of air from every home in their village. So in a way this is ‘Suprabatham’ to many homes, but the director got it awfully wrong in his imagination on how to put forth this beauty of a start into visuals. He did consistently bad in every shot, right from the location mistakes to costume designing and choreography. In these cases, it’s better to have our own imagination about the song.

  As I always say a North Indian instrument like santoor got its rebirth and ‘paapa vimOchanam’ from the hands of Maestro. The instrument has travelled long enough longing desperately to be blessed by Maestro’s hands. In the prelude hear how flute and santoor are interlaced so tightly that it feels like a one instrument (call and response). You don’t get to hear in such a fashion at all from others. Imagine only santoor or flute is playing and not both. It would have ruined the flow, that’s the main mistake many music directors do as they don’t visualize music properly. Actually flute takes santoor where it is designated to go and vice versa. This can be viewed as a farmer ploughing (plow) the field with two bullocks. Bullock does not know where to travel and farmer cannot plough the field on his own. While farmer knows where to go, the bullocks has the power to plough, but man does not, the percussion describing the actual plow and how they both work together in tandem is just one part of his great imagination in the instruments usage by Maestro. While we get carried away with flute and santoor, violin sneaks through for couple of second at the end of prelude to turn the soil upside down for a better mix.

  Uma Ramanan starts sevvaraLi thOttathilE unnai nenachchu with her voice sounding so perfect to the setting and she brings the mood and huskiness required for the song in a very effective manner. Especially when she sings ‘hakkam (instead of akkam) pakkam yaarumillE aaLunga aravam illE, suththum muththum paarkkayile thudippum adanguthillE’ it sounds so innocent. Maestro uses just the percussion when she sings, no other instruments (except one another minute sound) to get the best out of her and also to get the best out of lyrics. We are in for another lovely love duet in rural setting and it’s a treat of ears.

  First interlude starts with violin-violin counterpoints. One of Maestro’s best kept secrets. Santoor and flute follow them in their journey. Unlike the prelude, where flute fills in-between for santoor, here violins and santoor (with their short passages) supports the flute as if asking for a place. This is like the nature asking for a space to the lovers where they can express their thoughts. By nature I meant the trees, flowers, landscapes give themselves to lovers to share and express their thoughts. When they get space to discuss to decide the venue of the lovers, then cello and violins (nature) are in deep and serious conversation to decide which place would better suit for the lovers. While the first two set of violins played in counterpoint mode (not listening to each other ;)), here cellos and violins play in conversation mode coming to an agreement. How many thousand times we would have listened to his interludes, not one will be even similar.

  Raja takes off beautifully in the charaNam. Loved the way Raja sings ‘annamE’. Only percussion here again backing the vocals. Raja and Uma Ramanan complement each other with no domination. Simple yet wonderful tune! Raja’s repeat pallavi is the one I listen again and again. Very beautiful done!

  We have come to the best part again, the second interlude. The song’s core beauty is all captured here. This is strictly Maestro’s region, no trespassers allowed, even if allowed heavy injuries warning! Starts with haunting ‘ehhaahhhaahh’ humming. This is called singing for soul. If you are very strict about sruthi and all those technical flaws, please stay away. This part is just about the feel feel, just the feel. This part of the song takes you on a boat ride with just listening. Maestro is intentional about the singer here as per the movie situation, as this song is not sung by some trained musician, the singer is singing for the merry of the travelers (lovers) and also for himself, not worrying about anything else. Correct voice which captures the correct essence of the song.
  ailEsaa ailEsaa hoi haa hoi haa
  ailEsaa ailEsa hoi haa hoi haa
  aaRum ala oyaadhamma
  aasa athu thaeyaadhamma
  vaada pattu ninnaalamma
  vaasam patta poovaattam
  manasula kondaattam
  malarura sendaattam
  aaRum alaOyaadhamma
  aasa adhu thEyaadhamma
  Flute after this, is the one you will die to listen to all your life. Please spare the shock you would get when you watch the video with Karthik and Ralalakshmi as usual underwhelming and director visualizing the serene humming with man singing with saarayam bottle in his hands. Way to go! Also in charanam when Raja sings ‘kottugira aruviyilE kuLkkira kurvigaLE director preferring artificial setting of water flowing out of dam rather than the waterfall. Totally out of place! Again for the second interlude divine piece, very shabbily done. Atrocious. Could not forgive them.

  In this folk song, we get to hear all classical genres too right from WCM and HCM, listeners can still be agnostic to these technicalities as Maestro brilliantly tones everything under native folk and gives only the soul to the listeners. This is again one of Maestro’s best folk song which makes us visualize our dreams even when we are far far away from our land. Starting with farmers ploughing the land to the boat ride on a calm lake to lovers running behind the shady trees or swinging on the branches of trees, stealing the fruits from neighbors garden to playing in the water, they forget themselves like we do when we listen to it. A very calm folk song with innocence throughout which brings innocence within ourselves!

  These are one of the prime examples on how many directors didn’t even understand what kind of music they were getting from Maestro (even in his prime days) with only motive being the film should run with Maestro’s name in music. This is also one of the main examples on how generous is our Maestro when it comes to art. There is an old saying ‘paaththiram aRinthu pichchaiyidu’ when Maestro even ruled out all those and gifted fully what he had in store without worrying if they deserve to get this kind of music nor he worried that need to save something for his next song (like most others cleverly do nowadays). Mind you, the next songs are kaalai nErak kaatrE vaazhthi chellu and thendral kaatrum anbu paattum mangai vaazhvil yEthu. We music lovers always wait at the Bhagavathipuram Railway Gate waiting get a glimpse of Maestro’s next musical train (soundtrack).

 37. Congrats for the 400! So glad for such a memorable journey and a bit sad that we have come to the penultimate stop of our destination. But it’s an unforgettable journey with Raja!

  399. sevvaraLi thOttathilE unna nenachEn – Bhagavathipuram Railway Gate

  400. kALidhAsan kaNNadhAsan kavidhai nee – soorakkOttai singakkutti

 38. #399 செவ்வரளி தோட்டத்துல உன்னை
  பகவதிபுரம் ரெயில்வே கேட் படத்த காலேஜ்ல டம்சி வெளாடரப்ப தான் தெரியும். அதுல இப்டி ஒரு பாட்டு இருக்குன்னு இன்னைக்கு தெரிஞ்சுக்கிட்டேன் மாஸ்டர். நன்னிஸ்.

 39. இது நானூறு திவ்ய பிரபந்தம் மாஸ்டர்.. வாழ்த்துகள் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s