#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு

rajaspl#RajaChorusQuiz 500

#RajaChorusQuiz 500 போனஸ் பாடல்

இன்று இடம்பெறும் பாடல்கள் இரண்டையும் சரியாகச் சொல்பவரே முதல்வர்.

சிறப்புச் சலுகையாக

1. பாடலின் முதல் சொல் கொடுத்தால் போதும்

2. தமிழோ ஆங்கிலமோ உங்கள் விருப்பத் தேர்வில் கொடுக்கலாம்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 500
பாடல்: அம்மன் கோயில் கிழக்காலே
பாடியவர்கள் : இளையராஜா, குழுவினர்

படம் : சகல கலா வல்லவன்  http://www.youtube.com/watch?v=aQHJhX2MLPQ&sns=tw 

#RajaChorusQuiz 500 போனஸ் பாடல்
பாடல்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர்

படம் : தளபதி

 http://www.youtube.com/watch?v=aPp_i4qzoqI&sns=tw 

#RajaChorusQuiz
இனிதே நிறைந்த ஐநூறு
இன்றோடு இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டி நிகழ்ச்சி தனது 500 வது போட்டியோடு இனிதே நிறைவை நாடுகின்றது.
இசைஞானி இளையராஜாவின் அள்ள அள்ளக் குறையாத இசைக் கடலில் எத்தனையோ முத்துகளைத் தேடியெடுக்கும் நல் வாய்ப்பு இந்தப் போட்டி வழியாக அமைந்தது.
இளையராஜா படத்தின் ஆரம்பத்தில் பாடினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் கொடுத்த பாட்டு மசாலாப் படத்திலும் கமல்ஹாசன் வல்லவராகக் காட்டிய வெள்ளிவிழாச் சித்திரத்தில் இருந்து முதல் பாட்டு.
சோகம், சந்தோஷம், வீரம், காதல் என்று எல்லா உணர்வுகளையும் திரட்டித்தரும் அடுத்த பாட்டு இந்த 500 வது நாளுக்குத் தான் வர வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவு கட்டியது. ரஜினிகாந்த் படப் பாடலோடு ஆரம்பித்த இந்தப் போட்டி அவரின் படப் பாடலோடு நிறைவுறுகிறது.
இந்தப் போட்டிக்கு முன்னோடியாக அமைந்தது 2007 ஆம் ஆண்டில் எனது றேடியோஸ்பதி தளத்தின் வாயிலாகக் கொண்டு நடத்திய றேடியோஸ்புதிர் http://www.radiospathy.com/2007/10/blog-post.html
அந்தப் போட்டி அறுபது போட்டிகளைக் கடந்து, இளையராஜா மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களது போட்டிகளோடும் தொடர்ந்த நிலையில் இந்தப் போட்டியைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடத்துவதற்கான உந்துதலாக நண்பர் ரெக்ஸ் அருள் நடத்திய போட்டி அமைந்தது.
இசைஞானியின் பாடல்களை வைத்துப் புதுமையானதொரு போட்டி வைக்க வேண்டும் என்று நினைத்த போது அவரின் பாடல்களில் தனித்துவமாக அமைந்த கோரஸ் குரல் ஓசையை வைத்துப் பண்ணலாமே என மனதில் திடீரென்று எண்ணம் உதித்தது.
“இரு விழியின் வழியே நீயா வந்து போனது” (சிவா) பாடலோடு பெப்ரவரி 25 இந்தப் போட்டி ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் இருந்தே இந்தப் போட்டியில் தமிழில் இடம்பெறும் பாடல்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது தேர்வு இன்னும் மட்டுப்படுத்தப்பட்டது.
நிதமும் சராசரியாக 50 பேர் அல்லது அதற்கும் மேலாகப் போட்டியில் பங்கெடுத்த சுற்றுகளும் இருந்தது இந்தப் போட்டியின் வெற்றி எனலாம்.
ஒவ்வொரு படத்திலும் கோரஸ் பாடல்கள் அமைவது அபூர்வம், சில சமயம் ஒரே படத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட கோரஸ் பாடல்களும் இருந்ததுண்டு. ஆரம்பத்தில் எனது மனதில் சட்டென்று தோன்றிய பாடல்களைக் கொடுத்து வந்தேன். பின்னர் கையிருப்பு வற்றிய போது தேடல் மிகவும் சவாலாக அமைந்தது.

குறிப்பாக பாடகர்/கவிஞர் சிறப்பு வாரம் அமையும் போது ஒவ்வொரு நாளும் குறித்த ஆளுமையின் வெவ்வேறு தன்மை பொருந்திய பாடலைத் தர வேண்டும் என்று தேடிய போது பெரும் சவாலாக அமைந்தது.

குறிப்பாக கவிஞர் வைரமுத்து வாரத்தில் ஒரேயொரு பாடலைத் தேர்ந்தெடுக்க 6 மணி நே வரை பிடித்தது.

ஒவ்வொரு வாரமும் சராசரியாக இரண்டு மணி நேர உழைப்பு இந்தப் போட்டிக்குத் தேவைப்படுகிறது.

வார இறுதியில் ஒரே தொனியில் அமையும் பாடல்களுக்கும் சிறப்புக் கவனம் தேவைப்பட்டது.
இலக்கியா பிறக்க முன்பும், பிறந்த அந்த நாளில் வைத்தியசாலையில் வைத்தே இந்தப் போட்டியை வெளியிட்ட நாட்களும் மறக்க முடியாது. வார இறுதியில் சில சமயம் இலக்கியாவை மடியில் வைத்துக் கொண்டு தான் பாடலைத் தேர்ந்தெடுப்பேன்.
இந்தப் போட்டிகளில் பங்கெடுத்த உங்களைக் கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு நூறு போட்டிகளிலும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்ததோடு முதலில் தமிழில் பதிலளிக்கும் போட்டியாளருக்கு முதல்வர் என்ற சிறப்புப் பிரிவிலும் கெளரவம் வழங்கப்பட்டது.

கடந்த 400 வது போட்டியின் சுற்று மற்றும் இந்த 500 வது போட்டியின் சுற்று ஆகியவற்றுக்கான வெற்றியாளர் விபரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.
இத்தனை நாட்களும் தொடர்ந்து இந்தப் போட்டியில் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அடுத்த போட்டி எப்போது, எப்படி அமையும்

என்ற தீர்க்கமான முடிவை எடுத்த பின்னர் இன்னொரு வெற்றிகரமான பயணத்தில் சந்திப்போம்.

அதுவரை நன்றி வணக்கம் 🙏

Advertisements

#RajaChorusQuiz 499 ஐநூறை நோக்கி

#RajaChorusQuiz 499

#RajaChorusQuiz 499 போனஸ் பாடல்

இன்று இடம்பெறுகின்ற ரஜினி & கமல் பாடல்கள் காதல் ஜோடிப் பாடல்களாக அமைகின்றன.

 

இன்றும் நாளையும் தலா இரண்டு போட்டிப் பாடல்கள் வரவிருக்கின்றன, இரண்டையும் சரியாகச் சொல்பவரே முதல்வர்.

சிறப்புச் சலுகையாக

1. பாடலின் முதல் சொல் கொடுத்தால் போதும்

2. தமிழோ ஆங்கிலமோ உங்கள் விருப்பத் தேர்வில் கொடுக்கலாம்.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 499

பாடல்: ஆலப் போல் வேலப் போல்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்
படம் : எஜமான்

#RajaChorusQuiz 499 போனஸ் பாடல்

பாடல்: அந்திமழை பொழிகிறது
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : ராஜ பார்வை

#RajaChorusQuiz 498 கமல் & ரஜினி

#RajaChorusQuiz 498

#RajaChorusQuiz 498 போனஸ் பாடல்

வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் போட்டி இடம்பெறாது ஆனால் இந்த வாரம் 500 ஐ நோக்கிய இறுதி வாரம் என்பதால் ஒரு விசேட போட்டியாக அமைகிறது.

நேற்றைய போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள் அதற்கும் விடை அனுப்பவும்

https://radiospathy.wordpress.com/2015/07/04/497/

இந்த இரண்டு போட்டி முடிவுகளும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு வெளியாகும்.

இன்றிலிருந்து அடுத்த மூன்று தினங்களுக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் இருந்து பாடல்கள் வரவிருக்கின்றன.

இன்றைய சிறப்புப் பாடல்கள் ரஜினி படத்தில் இருந்து மலேசியா வாசுதேவன், கமல் படத்தில் இருந்து ஜென்சி ஆகியோர் குழுவினரோடு பாடும் பாடல்களாக அமைகின்றன.

இன்றிலிருந்து அடுத்த இரண்டு தினங்களுக்கும் தலா இரண்டு போட்டிப் பாடல்கள் வரவிருக்கின்றன, இரண்டையும் சரியாகச் சொல்பவரே முதல்வர்.

சிறப்புச் சலுகையாக

1. பாடலின் முதல் சொல் கொடுத்தால் போதும்

2. தமிழோ ஆங்கிலமோ உங்கள் விருப்பத் தேர்வில் கொடுக்கலாம்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 498

பாடல்: ஒரு ஊரில் ஒரு மகாராணி
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், குழுவினர்
படம் : கர்ஜனை

#RajaChorusQuiz 498 போனஸ் பாடல்

பாடல்: தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
பாடியவர்கள் : ஜென்ஸி, குழுவினர்
படம் : உல்லாசப் பறவைகள்

 

 

#RajaChorusQuiz 497 முடிவில் தொடரும் கோரஸ்

#RajaChorusQuiz 497

#RajaChorusQuiz போனஸ் பாடல்

இன்று இடம்பெறும் பாடல் பகுதிகளின் சிறப்பு என்னவென்றால் இரண்டுமே பாடலின் இறுதியில் வருபவை, பாடல் வரிகளைச் சந்தம் உண்டாக்கிப் பாடுகிறார்கள் கோரஸ் குரல்கள்,

இரண்டிலும் இசைஞானி இளையராஜா பாடுகிறார். ஒரு பாடலில் அவர் தனித்தும் இன்னொன்றில் மலேசியா வாசுதேவனோடு கூட்டுச் சேர்ந்தும் கூட்டுக் குரல்களோடு பாடுகிறார்.

ஒன்று சினிமாவின் சிறப்பைச் சொல்லிப் பாடுவது இன்னொன்று பரமசிவனே என்று தன் பாட்டில் பாடுவது 😉

பெண் பாவம் மட்டும் பொல்லாது அல்ல மக்களே நீங்க நல்லா நல்லா இருக்கணும் வளரணும் வாழணும் .

 

மக்கள்ஸ் நாளையும் போட்டி இருக்கு மறந்துடாதீங்க இந்த இரண்டு நாள் போட்டிகளின் பதில்களையும் நீங்கள்

திங்கட் கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாகக் கொடுத்து விடுங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 497

பாடல்: ஏ வந்தனம் வந்தனம்
பாடியவர்கள் : இளையராஜா, குழுவினர்
படம் : ஆண் பாவம்

#RajaChorusQuiz 497 போனஸ் பாடல்

பாடல்: ஈசுவரனே ஈசுவரனே
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், இளையராஜா, குழுவினர்
படம் : வாழ்க வளர்க

 

 

#RajaChorusQuiz 496 மதுரை சாமி

#RajaChorusQuiz 496

அருண்மொழி, சித்ரா, சுனந்தா குழுவினர் பாடும் பாடல் இது.

கொங்கு நாட்டு நாயகனோடு மனிதன் நாயகி ஜோடி போட்ட படம்.

பாடலோடு வருக

முக்கிய அறிவிப்பு

#RajaChorusQuiz போட்டியின் இறுதி வாரம் இந்த வாரம்

சனி & ஞாயிறு இரண்டு நாள் போட்டி தலா இரண்டு பாடல்கள் இரண்டிலும் தனித்தனி முதல்வர்

பாடல்: தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு

பாடியவர்கள்: அருண்மொழி, சித்ரா, சுனந்தா, குழுவினர்

படம்: மதுரை வீரன் எங்க சாமி

 

#RajaChorusQuiz 495 பொன்மானைத் தேடி

#RajaChorusQuiz 495

பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதி இயக்கிய படத்தில் இருந்து ஒரு பாடல்.

படத்தின் நாயகி ராதிகா.

மலேசியா வாசுதேவன், சித்ரா குழுவினர் பாடுகின்றனர்.

பாடலோடு வருக.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 495

பாடல்: பொன்மானைப் போலாடும்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், சித்ரா, குழுவினர்
படம் : மணமகளே வா

#RajaChorusQuiz 494 பனிக்காலப் பூவே

#RajaChorusQuiz 494

மலேசியா வாசுதேவன், மனோ, குழுவினர் பாடும் ஒரு வித்தியாசமான பாடல் இது.

இந்தப் படத்தின் இயக்குநரும் ஒரு பாடகர் தான்.

பாடலோடு வருக.

 ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்
#RajaChorusQuiz 494
பாடல்: குளு குளு மலரே

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், மனோ, குழுவினர்

படம் : நீ சிரித்தால் தீபாவளி