#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு

rajaspl#RajaChorusQuiz 500

#RajaChorusQuiz 500 போனஸ் பாடல்

இன்று இடம்பெறும் பாடல்கள் இரண்டையும் சரியாகச் சொல்பவரே முதல்வர்.

சிறப்புச் சலுகையாக

1. பாடலின் முதல் சொல் கொடுத்தால் போதும்

2. தமிழோ ஆங்கிலமோ உங்கள் விருப்பத் தேர்வில் கொடுக்கலாம்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 500
பாடல்: அம்மன் கோயில் கிழக்காலே
பாடியவர்கள் : இளையராஜா, குழுவினர்

படம் : சகல கலா வல்லவன்  http://www.youtube.com/watch?v=aQHJhX2MLPQ&sns=tw 

#RajaChorusQuiz 500 போனஸ் பாடல்
பாடல்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர்

படம் : தளபதி

 http://www.youtube.com/watch?v=aPp_i4qzoqI&sns=tw 

#RajaChorusQuiz
இனிதே நிறைந்த ஐநூறு
இன்றோடு இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டி நிகழ்ச்சி தனது 500 வது போட்டியோடு இனிதே நிறைவை நாடுகின்றது.
இசைஞானி இளையராஜாவின் அள்ள அள்ளக் குறையாத இசைக் கடலில் எத்தனையோ முத்துகளைத் தேடியெடுக்கும் நல் வாய்ப்பு இந்தப் போட்டி வழியாக அமைந்தது.
இளையராஜா படத்தின் ஆரம்பத்தில் பாடினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் கொடுத்த பாட்டு மசாலாப் படத்திலும் கமல்ஹாசன் வல்லவராகக் காட்டிய வெள்ளிவிழாச் சித்திரத்தில் இருந்து முதல் பாட்டு.
சோகம், சந்தோஷம், வீரம், காதல் என்று எல்லா உணர்வுகளையும் திரட்டித்தரும் அடுத்த பாட்டு இந்த 500 வது நாளுக்குத் தான் வர வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவு கட்டியது. ரஜினிகாந்த் படப் பாடலோடு ஆரம்பித்த இந்தப் போட்டி அவரின் படப் பாடலோடு நிறைவுறுகிறது.
இந்தப் போட்டிக்கு முன்னோடியாக அமைந்தது 2007 ஆம் ஆண்டில் எனது றேடியோஸ்பதி தளத்தின் வாயிலாகக் கொண்டு நடத்திய றேடியோஸ்புதிர் http://www.radiospathy.com/2007/10/blog-post.html
அந்தப் போட்டி அறுபது போட்டிகளைக் கடந்து, இளையராஜா மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களது போட்டிகளோடும் தொடர்ந்த நிலையில் இந்தப் போட்டியைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடத்துவதற்கான உந்துதலாக நண்பர் ரெக்ஸ் அருள் நடத்திய போட்டி அமைந்தது.
இசைஞானியின் பாடல்களை வைத்துப் புதுமையானதொரு போட்டி வைக்க வேண்டும் என்று நினைத்த போது அவரின் பாடல்களில் தனித்துவமாக அமைந்த கோரஸ் குரல் ஓசையை வைத்துப் பண்ணலாமே என மனதில் திடீரென்று எண்ணம் உதித்தது.
“இரு விழியின் வழியே நீயா வந்து போனது” (சிவா) பாடலோடு பெப்ரவரி 25 இந்தப் போட்டி ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் இருந்தே இந்தப் போட்டியில் தமிழில் இடம்பெறும் பாடல்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது தேர்வு இன்னும் மட்டுப்படுத்தப்பட்டது.
நிதமும் சராசரியாக 50 பேர் அல்லது அதற்கும் மேலாகப் போட்டியில் பங்கெடுத்த சுற்றுகளும் இருந்தது இந்தப் போட்டியின் வெற்றி எனலாம்.
ஒவ்வொரு படத்திலும் கோரஸ் பாடல்கள் அமைவது அபூர்வம், சில சமயம் ஒரே படத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட கோரஸ் பாடல்களும் இருந்ததுண்டு. ஆரம்பத்தில் எனது மனதில் சட்டென்று தோன்றிய பாடல்களைக் கொடுத்து வந்தேன். பின்னர் கையிருப்பு வற்றிய போது தேடல் மிகவும் சவாலாக அமைந்தது.

குறிப்பாக பாடகர்/கவிஞர் சிறப்பு வாரம் அமையும் போது ஒவ்வொரு நாளும் குறித்த ஆளுமையின் வெவ்வேறு தன்மை பொருந்திய பாடலைத் தர வேண்டும் என்று தேடிய போது பெரும் சவாலாக அமைந்தது.

குறிப்பாக கவிஞர் வைரமுத்து வாரத்தில் ஒரேயொரு பாடலைத் தேர்ந்தெடுக்க 6 மணி நே வரை பிடித்தது.

ஒவ்வொரு வாரமும் சராசரியாக இரண்டு மணி நேர உழைப்பு இந்தப் போட்டிக்குத் தேவைப்படுகிறது.

வார இறுதியில் ஒரே தொனியில் அமையும் பாடல்களுக்கும் சிறப்புக் கவனம் தேவைப்பட்டது.
இலக்கியா பிறக்க முன்பும், பிறந்த அந்த நாளில் வைத்தியசாலையில் வைத்தே இந்தப் போட்டியை வெளியிட்ட நாட்களும் மறக்க முடியாது. வார இறுதியில் சில சமயம் இலக்கியாவை மடியில் வைத்துக் கொண்டு தான் பாடலைத் தேர்ந்தெடுப்பேன்.
இந்தப் போட்டிகளில் பங்கெடுத்த உங்களைக் கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு நூறு போட்டிகளிலும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்ததோடு முதலில் தமிழில் பதிலளிக்கும் போட்டியாளருக்கு முதல்வர் என்ற சிறப்புப் பிரிவிலும் கெளரவம் வழங்கப்பட்டது.

கடந்த 400 வது போட்டியின் சுற்று மற்றும் இந்த 500 வது போட்டியின் சுற்று ஆகியவற்றுக்கான வெற்றியாளர் விபரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.
இத்தனை நாட்களும் தொடர்ந்து இந்தப் போட்டியில் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அடுத்த போட்டி எப்போது, எப்படி அமையும்

என்ற தீர்க்கமான முடிவை எடுத்த பின்னர் இன்னொரு வெற்றிகரமான பயணத்தில் சந்திப்போம்.

அதுவரை நன்றி வணக்கம் 🙏

Advertisements

57 thoughts on “#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு

 1. ராஜா பாடல்கள் மூலம் மீண்டும் உங்களை சந்திப்போம்என்று காத்திருக்கும் ரசிகர் கூட்டம் 👍🙏👏

 2. Many Congratulations for successfully completing the tedious journeyU have done an incredible feat Praba! Hats off to u and a Take a Bow! . I know how difficult it is to do this job each and every day. Cos I many times I could not answer on weekends due to some other work. But despite of ur wife’s delivery in between this journey u have not left this even a single day. Ilakkiya is a much blessed child.

  Happy to be a part of such a wonderful journey. Got to know many rare gems of Raja.

  BTW, perfect songs (esp the bonus) for the ending of the Quiz :-))

 3. அம்மன் கோவில் கிழக்காலே…
  சுந்தரி கண்ணால்..

 4. 500 வாழ்த்துகளும் நன்றிகளும்
  நேற்று இன்று நாளை படம் பார்த்துக்கொன்டே படத்திற்கு 100 % பொருத்தமான ஒரு குவிஸ்ஸில் கலந்து கொன்டு சொல்வதற்கு நிறைய இருந்தாலும் படம் பார்த்து கொன்டிருப்பதால் நன்றிகள் ;)))

 5. மனமார்ந்த வாழ்த்துகள்.. இத்தோடு உங்கள் பணி நின்றுவிடாமல் இன்னும் தொடரவேண்டும்..

 6. அம்மன் கோயில் கிழக்கால… – இளையராஜா – சகலகலாவல்லவன்
  சுந்தரி கண்ணால் ஒரு சேதி… – பாலசுப்ரமணியம் & ஜானகி – தளபதி

 7. அம்மன் கோவில் கெழக்காலே
  சுநதரி கண்ணால் ஒரு சேதி

 8. 500 நாட்கள் போனதே தெரியவில்லை…!!
  என்ன ஒரு அர்ப்பணிப்பு. என் மனமார்ந்த பாராட்டுகள்.

 9. அம்மன் கோயில் கிழக்காலே – சகலகலா வல்லவன்.
  சுந்தரி நீ கண்ணால் – தளபதி.

 10. 500/500 – அம்மன் கோயில் கிழக்காலே
  அன்ன வயல் மேற்காலே
  நம்ம ஊரு நடுவாலே நிக்குதடி ..அடியே ….
  நாட்டு சனம் நம்மைக் கண்டு சொக்குதடி…..
  இளையராஜா
  சகலகலாவல்லவன்

  500 போனஸ் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி
  சொல்லடி இந்நாள் நல்ல சேதி
  என்னையே தந்தேன் உனக்காக
  ஜென்மமே கொண்டேன் அதற்காக
  நானுனை நீங்க மாட்டேன்
  நீங்கினால் தூங்க மாட்டேன்
  சேர்ந்ததே நம் ஜீவனே….
  எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
  தளபதி

 11. 500 நாட்கள் மிகச் சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள்! நாளையிலிருந்து கோரஸ் புதிர் இருக்காதே என்ற வருத்தம்.
  கூடிய விரைவில் வேறு புதிய வடிவத்தில் போட்டியை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறேன்.
  நன்றி!

 12. நன்றி பிரபா. இப்புதிர் போட்டியின் மூலம் இசை ஞானியின் பல அருமையான பாடல்களை தேடி கேட்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.

 13. 1. அம்மன் கோவில் கிழக்காலே 🙂
  2. சுந்தரி கண்ணால் ஒரு சேதி 🙂

  amas32

 14. வாழ்த்துகள் பிரபா! #500 தொடர்ந்து நின்று ஆடி ஐநூறு ரன்களை தொட்டமைக்கு 🙂

  amas32

 15. வாழ்த்துகள் மாஸ்டர். இதில் பதிலளிப்பதே ஒரு சுகானுபவம். கடின உழைப்பு உங்களிடமிருந்து…

 16. அம்மன் கோயில் கிழக்காலே – சகலகலா வல்லவன்

  சுந்தரி கண்ணால் ஒரு சேதி – தளபதி

 17. பிரபாவாக ஆரம்பித்த பயணத்தை இலக்கியா அப்பாவாக முடிச்சிருக்கீங்க… வாழ்த்துகள்! நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்… ஆங்…

 18. 499. Amman Kovil
  500. Sundarai

  Thanks @kanapraba for your dedication and commitment to continue this non stop for 500 days. Kudos to you.

 19. சகலகலாவல்லவன் – அம்மன் கோவில் கிழக்காலே

  தளபதி – சுந்தரி

  வாழ்த்துக்கள் கானா . நிறைய கேட்டிறாத நல்ல பாடல்கள் அறிமுகம் கிடைத்தது

 20. 500 நாட்கள்…… அதுவும் சேர்ந்திசைக் குரல்களிலேயே போட்டி….வாழ்த்துக்கள் கானா….

  முதல்நாள் வந்தேன். அப்புறம் எப்பவோ ‘ஆனந்தம் ஆனந்தம்’ பாடல் வந்தபோது அழைத்தீர்கள்… ‘சிறைப்பறவை’ படம். பெயரில் ‘பறவை’ என இருப்பதால். அதன் பின்னே, வழக்கமாக வர ஆரம்பித்தேன்…

  100 நாட்களுக்குப் பின் ஒவ்வொருநாளும் சரியாக போட்டிநேரத்திற்கே வர ஆரம்பித்தேன்.பாட்டு கண்டுபிடிப்பதிலிருந்து , அன்றைய நாள் முழுவதும், அப்பாடலின் ஹம்மிங்க்கிலேயே ஓடும்…

  இப்போட்டி, எனக்கொரு நாட்குறிப்பு போல…. சில முக்கியநாட்களில்என்னென்ன பாடல்கள் கொடுத்தீர்கள் என எனக்கு இன்னும் மனப்பாடம்.
  அப்பாடல்களைக் கேட்டாலே, அன்றைய நாளில், அப்போது நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என ஞாபகத்துக்கு வந்துவிடும்.

  பலப்பல பாடல்கள் புதிதாக அறிமுகப்படுத்தினீர்கள்… பல முறை இன்ன பாடல்தான் கொடுப்பீர்கள் என எதிர்பார்ப்பேன்….ஆனால் அப்படி ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் கொடுக்கவே மாட்டீர்கள்:)
  ஒரு சதவீதம் கெஸ் பண்ணிய பாடல்கள் வந்துள்ளன… ‘அடி ராக்கம்மா கையத்தட்டு’ – முன்னமே பதில்எழுதி வைத்து, கமெண்ட்டில் பேஸ்ட் செய்தேன்:)

  சக்தி வாரத்தில் – கடைசிநாளில் ‘தாயே மூகாம்பிகே’

  ஸ்வர்ணலதா வாரத்தில் வீக்கெண்ட் ‘உன்னை விட’, கண்ணே இன்று’ -இரண்டையும் கெஸ் பண்ணியிருந்தேன்.அதே நாள் சன் ஆக்சனிலும் ‘ஆணழகன்’ படம். சில ட்விட்டர் நண்பர்களிடமும் சொல்லியிருந்தேன்:)

  இன்றைக்கு வந்த முதல் பாடல் கூட முன்பே யூகித்ததுதான்:)

  ஒரு நாள் வண்டியில் அலுவலகம் வந்து கொண்டிருந்தேன். வருவதற்குள் 12 மணி ஆகிவிட்டது.அப்போது மொபைலிலேயே பதிலிட்டது இன்னும் நினைவில்…(கற்புடைய ஆம்பளைங்க)

  தேவன் தந்த வீணை பாடல் தவறாகப் பதிலளித்தது ஒரு நாள் ஆட்டோவில் வருகையில்…

  திருவோணத் திருனாளும், சுந்தரி நீயும் பாடல் தவறாக வீக்கெண்டில் தந்தது சென்னை ஆட்டோ பயணத்தில்….

  ஒரு சனிக்கிழமை எங்கள் சொந்த ஊரிலிருந்து தேனி செல்கையில் ஆட்டோவில் பதிலளித்த பாடல்கள் (ஒரு ஆலம்பூவு, சிட்டுப்பறக்குது)

  ஒரு மூன்றாம்தேதி (செப்டம்பர் 3 என ஞாபகம்) இலக்கியா பிறந்த நாள்…அன்று மூன்றாவது வந்து பரிசு வாங்கினார் பாலாஜி…

  இப்படிப் பலப்பல நாட்களை நினைவூட்டும் க்விஸ்…

  சிலநாட்கள் வீட்டில், ஆஃபீஸில் இல்லாத சமயம், வெளியில் வேலையில் இருக்கும்போது மொபைலில் பதிலிடுவேன். அந்தப்பாடல் மூலம் அந்த நாள் நினைவிலிருக்கும். எப்போதாவது வீட்டில் , ‘என்னைக்கு பாப்பாவுக்கு ஆஸ்பிட்டல் போனோம், கேஸ் புக் மாத்த எப்ப போனோம், எப்ப சென்னைக்குப் போனோம்’ன்னா, அன்றைய நாளில் க்விஸ் பாடலை நினைவில் வைத்துப் பதில் சொல்வேன்…:)

  சமீபமாக, வெண்ணிலாவுக்கு மொட்டையடித்த அன்று வந்த பாடல் ‘ சண்டியரே சண்டியரே’…

  முன்பு அலுவலகத்திலிருந்து தூரத்தில் குடியிருந்தேன். வரும் வழியெங்கும் பாடல் கேட்டுக்கொண்டே பைக் பயணம்(போகவர இரண்டரை மணி நேரமாகும்). கொஞ்சூண்டு கோரஸ் வந்தாலும், நினைவிலிறுத்திக் கொள்வேன்.

  இக்கோரஸ் குவிஸ்ஸால் பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். பல மாபியாக்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது:)

  இப்போதைக்கு முடிவடைந்தது என்றாலும், அடுத்த சீசன் இன்னும் புதுமையாக வருமென எதிர்பார்க்கிறேன்.

  இந்த ஒரு மணிப் பரபரப்பு இல்லாமல் , நிதானமாக இசையை ரசித்து, மெதுவாக உணர்வுகளோடு, பதிலிட எண்ணம்….!!!!

  உங்களுக்கும், ராஜாவிற்கும் கோடானகோடி நன்றிகள்….

  லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… நம்ம கூமுட்டையின் நட்பு….:)

 21. மனமார்ந்த வாழ்த்துகள்…;)))

  மேலும் பல வெற்றி தொடர்கள் நடத்த மனமார்ந்த வாழ்த்துகள் ;)…நன்றியும் 😉

 22. இனிய பயணத்தை அர்ப்பணிப்புடன் அயராத உழைப்புடன் வெற்றிகரமாக நடத்தி முடித்து அருமையான பல முத்துக்களை எங்களுக்கு அறிமுகம் செய்த மாஸ்டர் பிரபாவுக்கு இதயங்கனிந்த நன்றி & சிரம் தாழ் வணக்கம்! மீண்டும் ஒரு அழகான பயணத்தில் சந்திக்கும வரை பிரியா விடை…

 23. வாழ்த்துக்கள் பிரபா….

  முதல் பாடல் : அம்மன் கோவில் கிழாக்காலே…. (சகலகலா வல்லவன்)

  2 வது பாடல் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…. (தளபதி)

 24. #500: “அம்மன் கோயில் கிழக்காலே..” ராசா & கோரஸ் குயில்களின் குரல்களில் “சகலகலா வல்லவன்” படப்பாடல்.

  போனஸ் பாடல்:” சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி..” SPB, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் ” தளபதி” படப்பாடல்.

 25. வாழ்த்துகள் .இந்த 500 ல் நானும் ஒருமுறை முதல்வராகவும் இரு முறை எதிர்கட்சி/துணை முதல்வராகவும் இருந்தேன் என்பதின் எனக்கும் பெருமை.. மீண்டும் ஒரு முறை நீங்கள் இம்மாதிரி போட்டி நடத்தினால் முதலில் இருந்தே முதல்வராக முயற்சி செய்கிறேன்

 26. இந்த 500 நாட்கள் போனதே தெரியவில்லை. தினமும் நேரம் தவறாமல் பதிவு, பண்டிகைகளுக்கும் சிறப்பு நாட்களுக்கும் பொருத்தமான chorus பாடல்கள், மறைமுகமானாலும் அனைவரும் விடை கண்டுபிடிக்கும்படியான clues, ஒவ்வொரு போட்டிக்கும் பொருத்தமான புதிய தலைப்பு, சரியான விடை தந்தவர்களுக்குப் புள்ளிகள், பரிசுகள் என அதிகம் மெனக்கட்டிருக்கிறீர்கள். உங்கள் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், குடும்பத்தின் ஒத்துழைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம். அதிகம் கேட்டிராத அரிய பாடல்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு தந்தீர்கள். இந்த RajaChorusQuiz பயணம் இனிதாய் அமைந்தது. மற்றொரு போட்டி தொடங்கினால் ஓடி வந்து ரயிலில் ஏறிக் கொள்வோம். நன்றி _/\_

 27. முதல் பாடல்: அம்மன் கோயில் கிழக்காலே
  படம்: சகலகலா வல்லவன்
  இரண்டாவது பாடல்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
  படம்: தளபதி

  ரஜினி-ஷோபனா பாடலில் தொடங்கி, அப்படியே முடித்திருக்கிறீர்கள். 🙂

 28. 500க்கு திரும்பவும் வாழ்த்துக்கள் பிரபா…இந்த வாழ்த்து பதிவை படித்த பின்னர் சொல்வது. 500ஆவது பாடல் சீசன்3 ல் முதல் பாடலாக வந்திருக்க வேண்டியது 🙂 ராஜாவின் இசையோடு முடிந்து போன கோரஸை முதன்மையாக வைத்து 500 புதிர்கள், கொஞ்சம் கஷ்டமான வேலைதான் ஆனாலும் விடாது 500ஐ சீக்கீரம் கடந்து வந்துட்டீங்க. சிறிது இளைப்பாறிய பிறகு வேறு ஒரு தளத்தில் சந்திக்கலாம். எழுத ஆரம்பிச்ச கையும், ஆட ஆரம்பிச்ச காலும் சும்மா இருக்காது என்ற பன்ச் உடன் முடித்துகொள்கிறேன்

 29. 500. அம்மன் கோயில் கெழக்காலே அன்னவயல் மேற்காலே – சகலகலா வல்லவன் – இளையராஜா, குழுவினர்
  போனஸ் பாடல்
  சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி – தளபதி – எஸ்.பி.பி., எஸ். ஜானகி, குழுவினர்

  500ஆம் நாள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! எபிக் ஃபினிஷ் வித் அமேசிங் கம்போசிஷன்ஸ்!!

  Really an emotional moment for me. Even though it brings curtains to this “EPIC” 500 days quiz, it will be remembered for a long long time to come. Almost 1 1/2 years non-stop. Unbelievable!! As many said, you have accomplished this improbable feat amidst personal milestones, sacrifices and other problems of selecting appropriate songs, which you mentioned. I can’t thank you enough for your undeterred passion for Maestro and his music and the way you presented the quiz. I would take this opportunity to thank your wife and family by encouraging you, standing by you, by sacrificing their personal time with you. It is not without their understanding, this would have happened. I am really very happy to be part of the quiz, Maestro and among all our friends for continuous 500 days. Hearty Congratulations!!!!

  You again read my mind by bringing up one of the songs which I wrote sometime ago. Here it is with some changes.

  Any film released on a DeepavaLi day is always special (especially those days). Watching the film in the midst of all the fire-crackers around and also along with the noise of the crowd is something special. The most important thing is watching it the first show. There is nothing like that. The film too should also be deserved to be celebrated on a DeepavaLi day. A dull film on a DeepavaLi day is not a welcome. It should be a grand one. Whether it has substance or not does not matter as long as it entertains the crowd on that special day is what matters the most. We would hardly hear any dialogues on the first shows. Still that did not cause any displeasure. Moving with the crowd is the whole point about experience. I remember those days standing in the long queues hours together in that hot sun, a week or two before the release to grab the tickets. No online tickets those times. The satisfaction after we get the tickets is itself like watching the film. Remembering the maNNan film scene on how Rajini and Annan get the tickets. You can never match that experience. Big cut-outs, grand decorations, ferocious crowd, fire-crackers, lighting camphors, more than the Deepavali festival, the theaters wore a grand festive look. I don’t remember if I had gone to temple on that auspicious day, but I do remember that I have watched many films the first show especially on a DeepavaLi day which also include Thalapathi. Sometimes they release a day before or on a Friday. Also apart from the movies, wearing new dresses with pride, enjoying lunch and sweets at every friend’s house all collage into a unique experience. Those days we never get full whatever we eat so much appetite. To add more spice, good TV programs all day. We would be returning back to our homes only during the night. This trend in south is for just one day affair, but imagine a 5-day Diwali (including Lakshmi Puja and Bhaubeej/Bhayya Duj) celebration in north and how would that be. This is the only Indian festival which is celebrated across religions and across countries. A festival of lights which happen almost close to new moon day, which lit up the dark sky only to show that today that the heaven is on earth. That craze is surely gone now for me, staying away from home.  The expectation from this film was already sky-high even before its release. Many magazines already posted about the brief story-line with Rajini and Mamootty’s stills. Those days there were no audio release functions like today, so we were guessing all the time how the songs would be and also excited to watch the film. With that excitement, we watched it on the first day. Definitely it was great film for the first time. As and when we got to see multiple times, the tediousness in the film surely woke us up, except for some great acting performances. Without further delving, let us switch to one of the best song which mesmerized millions. This song was a rage that time and still rules our hearts every time we listen. Every radio program was airing these songs. Doordharshan was playing these songs every week or so.  She sees a violent event on road when she is traveling by bus. Her lover is cutting another man’s hand. Stone-hearted scene. She is shocked. She is alone and waiting for him. He comes there and says he is like that and he cannot change. He assumes that she will not like him because of her conservative brought-up, yet she is madly in love with him. The stone-heart melts. The fear in her whether he will be with her always in her life. The fear in him whether she will marry him or get separated. Fear is the biggest cause of all problems. She dreams that sometimes he is with her, sometimes he is away from her. Which one is true? Mani has handled the song cleverly except he forces some unwanted war scenes just to make it grand (another case of style vs substance). Maestro will never say No as he has enormous scope for these WCM orchestration skills. Mani leaves the audience to guess whether this is a dream song for Shobana, Rajini or both, as he cuts the scene just before, with Shobana lying in Rajini’s lap. That’s where the song starts. I am going to take a diversion this time.  Mani decides to go to Italy using a space shuttle which switches him back to 17th century. That’s the birth place of many legends and genius composers on the banks of Venice, just like our divine kavEri river side. He believes he can get a good score only from Renaissance period composers like Claudio Monteverdi. He knocks the door of Monteverdi and introduces himself. Claudio welcomes him with a warm smile. Mani asks him if he can score a song for his latest film Thalapathi explaining the above situation which he obliges. Mani also conveys that this is a dream song and explains him the situation. She is constantly thinking of him and he is far away. She is fearful if he will marry her or she will be left alone. She is caught in a tension and confusion. She sends her love to him and he responds. Claudio stops him there. After carefully conceiving this situation he invents a new technique called Tremolo just for this situation. Claudio did not know at that time, the concept he invented will be the base for scientists like Marconi in 19th/20th century to invent another wonderful concept in transmitting voice and music signals over radio waves through amplitude modulation (AM). Claudio plays this portion with his orchestra.  Tremolo technique is normally used with varying signal strength, that’s why we hear that trembling effect, as the frequency is constant. She is constantly thinking of him (like frequency constant), but he is far away, so the signal strength (signal is constant, only its strength varies) varies. The information on that signal is vital. If you can hear that sober flute (implying her sober heart) on top of that tremolo, which is the information, she wants to send him through that tremolo. Once the signal reaches him on the same carrier (tremolo), he sends back another signal (I think some wind instrument, not sure, if that is a sax) on the same carrier which reaches her, before he reaches her. Once she sees him, the mood completely changes as both rush towards each other. The sound matches the galloping horse when he grabs and takes her into his horse. After this, we would assume the tremolo would end, as they both now united, still tremolo continues but you can hear the tremolo in different ranges when the bell sounds come in. The bell sound is an indication of auspicious occasion that is their marriage. So, when the bell rings they exchange the garlands. Even when they met and they know they are going to unite (again only in dreams), they are still nervous till they are married. So the tremolo sound continues, but taking different ranges, one for her and another for him. Once they exchange the garlands, the nervousness comes down, so tremolo stops there. When he plays with his orchestra, Mani was stunned by that sound. That clearly explained what he was thinking in his mind about the situation and he was surprised to hear that Claudio brought out exactly what he was thinking. That’s the trembling effect the heroine experiences since his lover is far away.  Meanwhile Claudio gets a call from church that he is already late and has to perform madrigals, so he feels sorry and leaves in a hurry. Mani now caught in dilemma, switches back his machine to 18th century to get a glimpse of this music scenario, but he somehow lands on the banks of river Kaveri, which he never expected. Saint Thyagaraja was singing

  

’sundari nee divya roopamanu chooda thanakku dorikenamma, 
  manda gamana neethu kadaksha balamo, mundhati poojaa balamo tripura’  on the streets in the name of the Goddess Gowri describing her beauty in ever glorious Kalyani raagam. ‘Oh Beauty of the three worlds. I am lucky to have seen your pretty form. Oh Goddess, with a pretty walk, this luck of mine is due to your side long glance, or it may be due to the worships I did earlier.’ That struck our Mani sir like never before and he decides there that his song should be like this and in this raagam, totally forgetting about what Claudio offered earlier. He even got how the lyrics should sound. Sundari kaNNaal oru sEdhi (similar to ‘this luck of mine is due to your side long glance’ from Thyagaraja).  He could not visualize further, but he could not wait either for that piece to be composed. He assumes that St. Thyagaraja is singing for his situation. With his blessings, he leaves from there. Suddenly remembers Claudio again to go back to Italy, but switches his machine to early 20th century to see how Western classical music has developed only to see the World is torn into pieces because of World wars. He sees the pain suffered back in the family when he fights for his country. This cue struck him and he directly reaches to Giacomo Puccini (a great successor to Verdi, who is known for his famous operas) to compose an opera/oratario piece for the interludes explaining the war situation and how it separates the family.  Starting with the marching drums with high horns creates the tension in the war ground, while the choir which follows it, depicts the family behind, longing for his men. There is both male and female choir. For a split second it appears like a vocal counterpoint, but it is THE BEST and wonderful harmony, clearly showing the hearts of men (male choir) at war and the hearts of women (female choir) back at home, beating a similar pattern, even when they are performing their respective duties one at war and another back at home. After the war is over that day, the loneliness creeps in, when the dusk sets in. That’s where the violin ensemble soothes both their hearts. Mani could not believe what he was hearing. He touched Puccini’s feet. With that music ringing his ears and with heavy heart, he flies away seeing the atrocities during the World war, back to 14th century, to have solace and love, nothing else.  Amir Khusrau a great poet and scholar of India during medieval times, welcomes him with this beautiful poem.  Do not overlook my misery by blandishing your eyes, and weaving tales; My patience has over-brimmed, 

  O sweetheart, why do you not take me to your bosom,
  Long like curls in the night of separation, short like life on the day of our union; 

  My dear, how will I pass the dark dungeon night without your face before.  After a good night sleep with these mind-soothing poems and also assuming composer Tansen (of 16th century) singing these songs, he gets up from the bed to see that he was in a big dream the whole night. Back to the future – Part IV. He was surprised to see that he was still at his home and could not believe what he dreamt last night. After freshening up, he immediately rushed to Prasad studio to convey all that he dreamed last night, to Maestro before he forgets. Maestro, just seeing his face and impatience, he got all the telepathy and Morse codes from all those above great men Mani met last night in his dream. He immediately called on Vaali sir, SPB sir, Janaki amma and the whole orchestra. While Mani was impatiently waiting to tell the situation for that song and how he liked to see that song, Maestro started with the same Tremolo and flute which he heard in his dreams. He thought that was a coincidence, when Vaali sir started his song with ‘Sundari’ he got reminded of St. Thyagaraja’s Sundari Nee kriti in Kalyani raagam. He was astonished to see Maestro coming with same raagam with similar lyrics glorying the lover, just like St. Thyagaraja was glorying Goddess Gowri. Still he was not convinced. That’s when Maestro started his war theme in opera style, same what he heard from Puccini, and he got stranded. But he was quite sure that Amir Khusrau poetry cannot be replaced here, when SPB was singing  ‘maadhangaLum vaaram aagum naanum neeyum koodinaal

  vaarangaLum maadham aagum paadhai maari Odinaal

’

  He immediately recalled ‘Long like curis in the night of separation, short like life on the day of our union’ from Amir Khusau’s poem. He goes and hugs Vaali sir and SPB. Lyric is again outstanding. Both SPB and SJ’s voice and singing brimming with soul.  Maestro has still not finished his composition. He still has to do second interlude. While he starts on the same road as he did the first interlude, with the marching drums and trumpets, he takes a different turn when he starts the violin along with trumpet. As and when a head of a soldier is cut or as and when he is wounded, the violin cries which directly transmits that sad signal to their family. The culminating flute with underlying violin tells story of the bereaved family. Mani feels it was way better than what he heard from Puccini last night as this piece directly relates to pain, not just in lovers heart, but the pain for the love itself. He now feels that his dream has come true, rushed to Maestro, hugs and kisses him. Maestro gives him a gentle smile and leaves as if he did nothing.   It is extra-ordinary to think this way as we can see the clouds of ambiguity clears out as we go from century to century when we hear diametrically opposite genres. Where is Renaissance, where is Kalyani, where is opera, and where is the poetry. Where is Monteverdi, where is St. Thyagaraja, where is Amir Khusrau and where is Puccini. If you hear the melody separately and interludes separately, you will never identify these pieces are for the same song. In that way, it is a very rare composition; that it has no connection between pallavi/charaNam and its interlude. Interlude is a separate western classical piece with no connection whatsoever to the melodic structure. Same way, the melody has no connection to its interlude, yet with the last bar, how he connects both these diametrically opposite pieces seamlessly together is a testimony to this genius. The main highlight of the song is not these separate pieces, but how he brings all those legends of yesteryears in front of us together without we needing to go back to their times. Maestro eases our job of listening and also eases the job of directors by bringing these hidden elements of treasure on his own, having studied and appreciated all forms of music thoroughly and seen all faces of music daily. It is a priceless composition by one and only complete musician of our times. The musical feats he achieved will never be repeated in music history.

 30. அம்மன் கோயில் கிழக்காலே
  சுந்தரி கண்ணால்

  வாழ்த்துக்களும் நன்றிகளும் மாஸ்டர்!! 500 பாட்டு மட்டுமல்ல, இதன் மூலம் இன்னும் பல 500 பாடல்களை கேட்க முடிந்தது. நன்றி!! நன்றி!!

 31. சகலகலா வல்லவன் படத்திலிருந்து அம்மன் கோயில் கிழக்காலே பாடல்.

  போனஸ் பாடல்: தளபதி படத்திலிருந்து சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல்.

 32. கோரஸ் க்விஸ்ஸை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்களும், சில பல முத்துக்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும்.

  நன்றாக ஓய்வெடுத்து புது உற்சாகத்தோடு அடுத்த போட்டிக்கான அறிவிப்பை வெளியிடும் நாளை ஆவலோடு எதிர்பார்க்குறேன். ராஜா க்விஸ் சீசன் 3 முடியுறதுக்குள்ள ஆரம்பிச்சிங்கனா நல்லாருக்கும் 😉

 33. 500 நாட்கள் பல்வேறு இடர்பாடுகளையும் கடந்து தொடர்ச்சியாக ஒரு காரியத்தைச் செய்வதென்பது சாதாரணமல்ல. மிகுந்த அர்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம். பலரை கலந்து கொண்டு மகிழச் செய்தமைக்கும், பெரும் நேரத்தைச் செலவு செய்து இத்தொடரை இனிதே வெற்றிகரமாக நிறைவுறச் செய்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்.

 34. வாழ்த்துகள் 🙂
  5௦௦ நாட்கள் ..500 க்கும் அதிகமான பாடல்கள் என்று நாள் தவறாமல் வழங்கியதற்கு நன்றிகள் பல 🙂
  தங்களின் அர்ப்பணிப்பு , நேரந்தவறாமை , ஈடுபாடு குறித்து அனைவரும் சொல்லி இருந்தாலும் அதைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை .
  ஒரு ஆச்சரியம், மரியாதை கலந்த உணர்வே மேலிடுகிறது.
  ராஜாவிடமிருந்து பாடல் வழி நீங்கள் பெற்ற நன்மையை, சந்தோஷத்தை , பகிர்ந்து அளித்தமைக்கு கோடி முறை நன்றி கூறிக் கொள்கிறேன் 🙂

 35. 500. அம்மன் கோயில் கிழக்காலே – சகலகலா வல்லவன்
  போனஸ் பாடல் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி – தளபதி
  பட்டாசு 🙂 இந்த பாடல்களை விட வேறு உண்டோ போட்டியை நிறைவு செய்ய ?! 🙂

 36. கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக தீவிரமாக #RajaChorusQuiz போட்டியில் கலந்து கொண்டிருந்தேன். பலவேளைகளில் பாட்டு நன்றாகத் தெரிந்த பாடலாக இருந்திருக்கும். ஆனால், தாமதமாக வந்து கவனித்ததால் முதல்வர் வாய்ப்பை இழந்திருப்பேன். நேரத்தோடு வந்தமர்ந்த நாட்களில் பாடல் தெரியாததாய் வந்தமையும். இவ்வாறே பல தோல்விகள். இருந்தாலும், தொடர்ந்து முயற்சித்தேன். ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவர் ஆனேன். மீண்டும் பல நாட்கள் தோல்வியடைந்து ஒரு நாள் துணை முதல்வர் ஆனேன். ஒரு நாள் பாடல் கேட்காமலேயே (பாடல் கேட்கமுடியாத ஏதோ ஒரு சிக்கலால்) க்ளூவை வைத்தே பாடலை எழுதித் தட்டிவிட்டேன். அன்று முதல்வர் பதவியையும் அடைந்துவிட்டேன். வெற்றி பெறாத நாட்களில், பழைய பாடலாய் இருக்கும் பட்சத்தில் என் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டேன்.

  இந்தப்போட்டியில் கலந்து கொள்வது மனதில் இருந்த குழந்தையை மீண்டும் வெளியில் கொண்டுவந்தது. சிறு படபடப்புடனும் குழந்தை போன்ற உற்சாகத்துடனும் பல நாட்கள் விளையாடிய பின் சிறிய குற்ற உணர்வு வந்தது. வேலை விட்டு வேலை மாறும் தருணங்கள்தான் அவை என்றாலும், அடுத்த வேலைக்கு மாறும்போதும் இந்தப் பழக்கம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்து போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டேன். வாரநாட்களில் ட்விட்டர் வருவதையும் நிறுத்திவிட்டேன்.

  மிக அருமையான போட்டி. பல ராஜா பாடல்களைப் பலருக்கும் அறிமுகப்படுத்திய கானாபிரபாவின் உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் பாராட்டுக்கள். மேலும், இது போன்ற பல போட்டிகளை நடத்தி அனைவரையும் மகிழ்வியுங்கள். (மாலை நேரத்தில் வந்தால் குற்ற உணர்வின்றி விளையாட முடியும். ஹிஹி….வேண்டுகோள்)

 37. வரலாருக்குக்காக இங்கயும் காபி பேஸ்டு.

  எல்லாரும் அவங்கவங்க பீலிங்க்ஸக் கொட்டிட்டாங்க. பறவை இன்னும் வாய் பொத்தி அழுதுட்டுருக்காரு…. நான் ஏதும் சொல்லாம இருந்தா @kanapraba மாஸ்டர் ட்வீட்டுல cc போட மாட்டாராம், பறவை என்னைய அடுத்த சீசன்ல ban பண்ணச் சொல்றாரு.அதுனால நானும் ஒரு ட்விட்லாங்கர் போட்டுடறேன்.

  கானா மாஸ்டர் #tfmquiz ன்னு ஒண்ணு நடத்தினார். ஜாலியா போய்ட்டுருந்துச்சு. ஆனா ஏதோ கடுப்பாகி டப்புன்னு நிறுத்திப்புட்டார். மறுபடி எதுனா ஆரம்பிப்பாரான்னு பார்த்துட்டு இருந்தேன்.

  @tcsprasan @paval @seevin மாஸ்டரோட #365RQ2 வந்துட்டு இருந்த காலம். நானெல்லாம் இந்த quiz க்கெல்லாம் லாயக்கே இல்லன்னு ரொம்ப இன்ஃபீரியரா உணர்ந்துட்டு இருந்தேன். அவங்க கிளிப்ஸ்லாம் எனக்கு கண்டு பிடிக்கவே முடியாது. “நம்ம இவ்ளோ சினிமா பாட்டு சூன்யமா” ன்னு வாழ்க்கை வெறுத்துடும். “உனக்கு எதுவுமே தெரியாதா? உனக்குள்ள ஏதோ ஒரு தெறமை இருக்கும். கொஞ்சம் யோசி” ன்னு 7Gலசோனியா அகர்வால் சொல்வாங்களே, உடனே அந்த ஹீரோ கடகடன்னு பைக்க மாட்டுவாரே.. .. “இந்தப்பையனுக்குள்ளயும் ஏதோ இருந்துருக்கு பாரேன்” ரேஞ்சுல எனக்குன்னு வந்தது ##rajachorusquiz

  இங்க எல்லாரும் “விழியின் வழியே” முதல் பாட்டுன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு ஞாபகம் இருக்க வரை, விழியின் வழியே ட்ரையல் பாட்டு தான். அதுவே எனக்குக் கண்டு பிடிக்க முடியல. @umakrishh வந்து ரொம்ப தெரிஞ்ச பாட்டு, பிடிச்ச பாட்டுன்னல்லாம் சொல்லி , பாட்டோட மொத்த லிரிக்சையும் கமெண்ட்ல போட்டு எனக்குக் காதெல்லாம் புகை. ஆனா அடுத்த நாள் முதல் பாடல், “படிச்ச புள்ள” படத்துல இருந்து “பூங்காற்றே”. க்ளூஸ்(வில்வித்தை ஹீரோ,ராமாயன ஹீரோயின் 🙂 ) வெச்சு கண்டு பிடிச்சதும் எனக்கு ஒரே சந்தோஷம். சரி இனி தினமும் வரணும்ன்னு முடிவெடுத்துக்கிட்டேன். கோரஸ் quizல ஸ்பெசாலிட்டி என்னன்னா, க்ளூஸ் கொஞ்சம் எளிமையா இருக்கும். டைம்லைன்ல நாலு அறிவாளிகள் இலக்கியம் பேசிட்டு இருக்கப்ப, நமக்குப் புரியாம கவலையா ஒதுங்கி இருக்க நேரத்துல, நாலு பேரு வந்து சினிமா, கிரிக்கட் ன்னு பேச ஆரம்பிச்சா, ஹையான்னு ஒரு உணர்வு வரும்ல… அந்த மாதிரி தான் கோரஸ் quiz ஆரம்பிச்சப்ப நான் ஃபீல் பண்ணேன்.

  ஆனா இந்த quiz குடுத்த தன்னம்பிக்கை(அவ்!!!), தைர்யத்துல நான் ராஜா quiz சீசன்-2 அட்டென்ட் பண்ண ஆரம்பிச்சேன். அங்க “நான்லாம் கலந்துக்க முடியும், பாட்டு கண்டுபிடிக்க முடியும்”ன்னு எனக்குள்ள இருந்த 7G ஹீரோவ வெளிய கொண்டு வந்த சோனியா கானா மாஸ்டர் தான். @vrsaran, @rmdeva மாஸ்டர்ஸோட சீசன்-3 லையும் (ரெகுலர் இல்லன்னாலும்)நம்பிக்கையோட கலந்துக்கறேன் 🙂

  ஆனா கானா மாஸ்டர் குடுத்த சில க்ளூக்கள் எல்லாம் “ப்பாஆ” லெவல். மை டியர் மார்த்தாண்டனுக்குக் க்ளூ “என்னருமை தாண்டவக்கோனே வீட்ட விட்ட ஓடு”. அப்றோம் @nchokkan, @kaarthikarul இவங்கல்லாம் , இந்த ஆல்பம் ரெகமன்ட் பண்ணதுல்லாம் ஞாபகம் வருதே.

  ‘செம்பூவே’ பாட்டு வந்த அன்னைக்கு “இந்தப்பாட்டைக் கேட்டா மாஃபியாஸ் பக்கம் இருக்க நியாயம் புரியும்” ன்னு நான் கமெண்ட போட, மாஸ்டர் அந்தக்கமெண்டை ட்வீட்டுல போட, சில அடிகள் எனக்கு. 🙂

  இந்த சீசனில் என்னோட பெர்சனல் பேவரைட்டுல புதுசா சேர்ந்ததுல முதலிடம் “அல்லீ சக்கரவள்ளி லாலி” பாட்டு தான். அப்றோம் வார்னிங்க மீறி “மீன்கொடி தேரில்” விடியோவ ஆபீஸ்ல ஓபன் பண்ணி டெரர் ஆனதெல்லாம் இப்ப டைப் பண்ணும் போது கூட விபுசி 🙂

  “மனசு மயங்கும்” கண்டு பிடிச்சப்ப(அன்னைக்கும் பதவி கெடச்சுது), மாஸ்டர் கிட்ட இந்த ஆல்பம் பத்திப் பேசினப்ப “லாலி லாலி பாட்டு எனக்கு அம்மா மாதிரி” ன்னு சொன்னார்.

  தெய்வவாக்குல “அம்மனுக்கு எந்த ஊரு”பாட்டு எனக்கு தூக்கத்துல நினைவு வந்து எந்திரிச்சு வந்து கமென்ட் போட்டேன்.

  இந்த quiz பற்றிய டைமிங் கமெண்ட்களில் @kuumuttai @_Obfuscated_ ரெண்டு பேரும் செம்ம… பதில் போடாத அன்னைக்கு அடுத்த நாள் கூட கமெண்ட்ஸ்,ட்விட்டர் டைம்லைன் போய் இவங்க ரெண்டு பேரும் எதுனா சொல்லி இருக்காங்களான்னு பார்ப்பேன் 🙂

  அப்றோம் ஒரு மணிக்கு ரிஃபிரஷ் பண்ணி பண்ணி டக் பதில் சொன்னா கூட @Tparavai எப்டியும் அதுக்கு முன்னாடியே பதில் சொல்லிடறார்ன்னு சில நாள் ஸ்ட்ராடேஜி ப்ளான் பண்ணி , அட்லீஸ்ட் துணை முதல்வர் ஆவலாம்ன்னு இங்கிலீஸ்ல பதில் போட்டு வடை போன கதைகள் கூட இருக்கு.

  சொல்ல இவ்ளோ இருந்தாலும், quiz அட்டென்ட் பண்ணின நாட்கள் ரொம்பக் குறைவு. அதற்கு எவ்ளோ சப்பக்கட்டுகள் கொடுக்கலாம். அட்டென்ட் பண்றதுக்கே சாக்கு சொல்ற நானெல்லாம், மகள் பிறந்து, சமீபமா அவளுக்கு உடல்நிலை சரியில்லாம இருந்த நேரத்துல, இந்த மாதிரி எத்தனயோ கமிட்மெண்ட்ஸ்க்கு நடுல ஐநூறு நாட்கள் தொடர்ந்து இதை நடத்தின அந்த டெடிகேஷன எல்லாம் பத்திப் பேசறது அவ்ளோ நல்லார்க்காது :).

  @isai_ @yalisaisl @paramporul நூத்துக்கு நூறு மாஃபியா- @rajabalanm மின்னல் மாஃபியா – @vbss75, @_Rain_Lover @jothishna இப்டிப் பலரோட அறிமுகம் (ராஜா ரசிகர்ன்னா உடனே மியூச்சுவல் ஃபாலோ தான்) இந்த quiz மூலம் கெடைச்சுது.

  மொத்ததுல தேவயானிய குடும்பத்தலைவியா உணர வெச்ச பொம்மிஸ் நைட்டி மாதிரி, என்னைய ஒரு மாஃபியாவா உணர வெச்ச மாஸ்டருக்கு கோடானு கோடி நன்றிகள் _/\__/\__/\__/\__/\__/\__/\__/\_

 38. ரொம்ப லேட்டா வந்து எழுதறதே வருத்தமா இருக்கு..வேலை பார்த்துட்டு இருந்த வரைக்கும் ஒழுங்கா அட்டென்ட் பண்ணேன்..அது நிக்கவும் டைமிங் மிஸ் ஆகிடுச்சு அவ் ..:) இரு விழியின் வழியே ன்னு டாப் கியர் ல தூக்கி ஒரே மூச்சா 500 தொட்டாச்சு…நிஜமாகவே பெரிய சாதனை தான்..வெறும் வார்த்தைக்கு அல்ல..எந்த ஓர் விசயத்தையும் ஆழ்ந்து அறிந்து படைக்கும் பாங்கு உய்த்துணர்தல் அனைவர்க்கும் வாய்த்து விடாது..பல நல்ல பாடல்கள் அறிமுகங்கள் மறந்த பாடல்கள் நினைவூட்டல்கள், ஒரு போட்டி மூலம் பலரை ஒருங்கிணைத்தல் ,போட்டி நடத்துபவர் பாடலைப் பற்றி உணர்ந்ததை பங்கேற்பாளர்களுக்கும் கடத்துதல் இப்படி பல நிலைகளைக் கடந்து வெற்றி பெற்றிருக்கின்றது இந்த கோரஸ் க்விஸ்..முதல்வர்,எதிர்க்கட்சித் தலைவர் சண்டைகள் ,அவங்களுக்கு பஞ்சாயத்தை நடத்தி நியாயமான பதவிப்பிரமாணம் செய்ய வச்சு..ப்பா..இதுல சில பல பதில்களை டிசைன் டிசைனா யோசிச்சு வருவதைப் பார்க்கவே மறுநாள் வந்து கமெண்ட்ஸ் படிப்பேன்..:)) ரெகுலரா பங்கேற்காட்டியும் ,வந்து எட்டிப் பார்த்து பாடல் என்ன என தெரிஞ்சுட்டுப் போறதுண்டு 🙂 ஓர் இனிய சுகானுபவம் தந்தமைக்கு நன்றி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s