#TFMquiz தமிழ்த் திரையிசைப் புதிர்

 
இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் கோரஸ் குரல்களின் பயன்பாட்டின் சிறப்பை மையப்படுத்தி 500 நாட்கள் தொடர் போட்டி ஒன்றை நடத்திய திருப்தியில் சில மாத ஓய்வுக்குப் பின் மீண்டும் இன்னொரு பரிமாணத்தில் “தமிழ்த் திரையிசைப் புதிர்” என்ற போட்டியின் வாயிலாக உங்களைச் சந்திக்கிறேன்.

இந்தத் தமிழ்த் திரையிசைப் புதிர் என்ற போட்டி திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு இடம்பெறும். போட்டி முடிவு அடுத்த நாள் வெளியிடப்படும்.

இசைஞானி இளையராஜா மட்டுமன்றி அவருக்கு முன் கோலோச்சிய தமிழ்த் திரையிசையின் முன்னோடி இசை ஆளுமைகளையும் சம காலத்தில் இயங்கி வரும் இசையமைப்பாளர்களையும் அவர் தம் தனித்துவமான பாடல்களால் சிறப்புச் செய்வதே இந்தப் போட்டியின் நோக்கம். எனவே இந்தப் போட்டி ஒரு கலவையாக, பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களோடு அரங்கேறும்.

ஒவ்வொரு நூறு நாட்களிலும் இந்தப் போட்டியில் முதல்வராக வந்து பதிலளித்தவர் பரிசுக்குரியவர் ஆகத் தேர்ந்தெடுக்கப்படுவார். முதல்வராக வருபவர் பாடலின் முதல் இரு சொற்களையும் தமிழில் தட்டச்சுச் செய்ய வேண்டும்.

நாளை டிசெம்பர் 1 ஆம் திகதி ஆரம்பிக்கும் இந்தப் போட்டியின் முதல் வாரம் மிகவும் இலகுவான பாடல்கள், நான்கு வெவ்வேறு இசையமைப்பாளரோடு உங்களைச் சந்திக்கிறேன்.

Advertisements