#TFMquiz 16 கண்ணோடு கண்ணாக

மக்கள்ஸ்! நாளை ஜனவரி 1 முதல் புள்ளியோடு இடம்பெறும் போட்டி ஆரம்பமாகிறது.

இன்று இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பிரபுதேவா நடித்த ஒரு திரைப்படத்தின் பாடல்.

இந்தப் பாடல் உன்னிகிருஷ்ணன் மற்றும் உன்னிமேனன் குரல்களில் தனித்தனியாகவும் பதிவாகப்பட்டிருக்கின்றன.

பாடலோடு வருக.

போட்டியின் பதில் 

பாட்டு : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்

படம் : பெண்ணின் மனதைத் தொட்டு

பாடியவர் : உன்னிமேனன்

இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்

Advertisements

#TFMquiz 15 பொய் சொல்லாதே ஓடிப்போ

வித்யாசாகர் இசையில் ஹரிஹரன் குரலில் ஒலிக்க்கும் இனிய பாடல் இன்றைய தெரிவில் வருகிறது.

படம் ஏக பிரபலம் என்பதை ஓடிப் போய் ஷட்டரை மூடித் தான் சொல்லணுமா என்ன?

பாடலோடு வருக

மக்கள்ஸ் மறந்து விடாதீர் வரும் ஜனவரி 1 முதல் புள்ளியோடு போட்டி இடம்பெறவிருக்கிறது.

 போட்டியின் பதில் 

பாட்டு : பொய் சொல்லக் கூடாது 

படம் : ரன்

பாடியவர் : ஹரிஹரன்

இசை : வித்யாசாகர்

  http://www.youtube.com/watch?v=rnp2h0s9BvI&sns=tw

#TFMquiz14 ஆஹா என்னவொரு பாட்டு

மக்கள்ஸ்! வரும் ஜனவரி 1 முதல் புள்ளியோடு இடம்பெறும் போட்டி ஆரம்பமாகிறது.

இசையமைப்பாளரிடம் நல்ல பாடல்களைக் கறந்து விடுவதில் இயக்குநர் வஸந்த் சமர்த்தர் என்பது ஊரறிந்த ரகசியம். அந்த வகையில் வஸந்த் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்த பாடல்களும் அட்டகாஷ் ரகம்.

இங்கே வரும் பாடல் பாடகி நந்தினி ஶ்ரீகர் குரலில் ஒலிக்கும் ஒரு அருமையான மெலடி. இந்தப் பாடலின் இடையிசை யுவன் ஷங்கர் ராஜாவின் சாகித்தியத்தைச் சான்று பகிரும்.

இந்த இடையிசை படத்தின் காட்சியமைப்பில் இல்லை என்பது பெரும் குறை.

மூன்று பேராகவோ அல்லது தனியாகவோ பாடலைத் தேடிப் பிடித்து வாருங்கள்.

மக்களே நீண்ட நாட்களாக அறிவிக்கப்படாதிருந்த #RajaChorusQuiz இசைஞானி இளையராஜாவின் கோரஸ் குரல்கள் போட்டி முடிவு இதோ

வெற்றி பெற்ற அனைவருக்கும் புத்தகப் பரிசு ஒன்று காலக் கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்

#RajaChorusQuiz 301 – 400

301 – 400 நாட்கள் அதிக தடவை முதல்வராக வந்து பரிசுக்குரிய வெற்றியாளர் 45 போட்டிகள் (100 போட்டிகளில்)

301 – 400 நாட்கள் முதன்முறை பரிசு பெறும் வெற்றியாளர்

#RajaChorusQuiz 401 – 500

401 – 500 நாட்கள் அதிக தடவை முதல்வராக வந்து பரிசுக் குரிய வெற்றியாளர் 51 போட்டிகள் (100 போட்டிகளில்)
401 – 500 நாட்கள் முதன்முறை பரிசு பெறும் வெற்றியாளர்

 

#TFMquiz 13 தல காதல் போல வருமா

இன்று இடம்பெறும் இசையமைப்பாளர் யார் என்று நான் சொல்லாமலேயே நீங்களே கண்டு பிடித்துப் பாடலோடு வர வேண்டும்.

இன்று முக்கிய நாயகனாக விளங்கும் நடிகரின் படத் தலைப்பு அந்தக் காலத்து காதல் நாயகன் ஒருவருக்குக் கொடுத்த பட்டத்தை நினைவுபடுத்தும்.

பாடலோடு வருக

போட்டியின் பதில் 

பாட்டு : உன்னைப் பார்த்த பின்பு தான்

படம் : காதல் மன்னன்

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இசை : பரத்வாஜ்

 http://www.youtube.com/watch?v=fnkxqT8AXhM&sns=tw 

TFMquiz 12 மெல்லிசை மன்னர் இசையில் ஏசு பாலன் வருகை

இன்று ஏசு பாலன் பிறந்த தினம். அனைத்து உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள்.

இந்த நன்னாளில் அவரின் பிறப்பைப் போற்றிப் பாடும் பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வருகிறது.

பாடலை வாணி ஜெயராம் பாடுகிறார். இங்கே மூலப் பாடலுக்கு முன் வரும் தொகையறாவைக் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து வரும் அடிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தப் படத்தின் தலைப்பு ஏசு பிரானின் அடியவர் ஒருவரின் பெயர் தாங்கியது. முத்துராமன் நடித்திருப்பார்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு 
பாடல் : மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்

பாடியவர் : வாணி ஜெயராம்

படம் : புனித அந்தோனியார்

 http://www.youtube.com/watch?v=m5EMKu18C-8&sns=tw