மைலாப்பூர் சாமுவேல் ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட இசையமைப்பாளர் ஷியாம் அவர்களை தமிழை விட மலையாளத் திரையுலகமே அதிகம் ஆராதித்தது.

ஆனால் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் இவர் கொடுத்த தமிழ்த் திரையிசைப் பாடல்கள் முக்கியமானவை.

இன்று இடம்பெறும் பாடல் இயக்குநர் ஆர்.சி.சக்தி தன்னுடைய நண்பர் கமல்ஹாசனுக்கு குணசித்திர நாயகன் வேடமளித்து இயக்கிய படத்தில் இருந்து வருகிறது. படத்தில் ஶ்ரீதேவியும் நடித்திருக்கிறார்.

இங்கே கொடுக்கப்பட்ட பாடலில் எஸ்.பி.சைலஜா ஆலாபனை கொடுக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு 
பாடல் : மழை தருமோ என் மேகம்

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா

படம் : மனிதரில் இத்தனை நிறங்களா

 http://www.youtube.com/watch?v=d3VgNkkkADA&sns=tw 

Advertisements