TFMquiz 12 மெல்லிசை மன்னர் இசையில் ஏசு பாலன் வருகை

இன்று ஏசு பாலன் பிறந்த தினம். அனைத்து உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள்.

இந்த நன்னாளில் அவரின் பிறப்பைப் போற்றிப் பாடும் பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வருகிறது.

பாடலை வாணி ஜெயராம் பாடுகிறார். இங்கே மூலப் பாடலுக்கு முன் வரும் தொகையறாவைக் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து வரும் அடிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்தப் படத்தின் தலைப்பு ஏசு பிரானின் அடியவர் ஒருவரின் பெயர் தாங்கியது. முத்துராமன் நடித்திருப்பார்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு 
பாடல் : மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்

பாடியவர் : வாணி ஜெயராம்

படம் : புனித அந்தோனியார்

 http://www.youtube.com/watch?v=m5EMKu18C-8&sns=tw 

Advertisements

20 thoughts on “TFMquiz 12 மெல்லிசை மன்னர் இசையில் ஏசு பாலன் வருகை

  1. புனித அந்தோனியார் – மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்

    அழகான பாட்டு.. ஞாபகப்படுத்தியதற்கு நன்றி

  2. மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
    நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்….
    வாணி ஜெயராம்
    புனித அந்தோனியார்

  3. மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்
    நல்ல மனிதரின் நடுவே குழந்தை வடிவம் பெறுகிறான்
    படம் – புனித அந்தோணியார்

    என்னவொரு பாட்டு. என்னவொரு பாட்டு.

    வாணி ஜெயராம் குரலும் பின்னணி இசையும் அப்படியே சர்ச்சுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போயிரும்.

    இந்தப் படத்துல பாட்டெல்லாமே சூப்பர். ஆனந்தமானது அற்புதமானது-ன்னு ஏசுதாஸ் பாடிய பாட்டு உண்மையிலேயே அருமருந்து.

    ஏவாளை ஏமாற்றினேன்-ன்னு எல்.ஆர்.ஈசுவரி பாட்டு செம குத்து.

    துள்ளி வரும் மீன்களே பாட்டும் அட்டகாசமா இருக்கும்.

    இதே மாதிரி அன்னை வேளாங்கன்னி-ன்னு ஒரு பக்தி ஆல்பம். ஒவ்வொரு பாட்டும் பக்தியின் உச்சம். “அன்னையே ஆரோக்ய அன்னையே”ன்னு ஏசுதாஸ் வாணி ஜெயராம் பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அலைகடலின் ஓரத்திலேன்னு சுசீலாம்மா பாட்டு உருக்கும். வண்ண வண்ண லீலி மலர், குழலும் யாழும்னு கண்டிப்பாகக் கேட்க வேண்டிய இசைக்கோப்பு அது.

    முருகன் பாட்டு, சிவன் பாட்டு, அம்மன் பாட்டு, கிருஷ்ணகானம், இஸ்லாமியப் பாட்டு, கிருத்துவப் பாட்டுகள்னு சினிமாவிலும் சினிமாவுக்கு வெளியேயும் சிக்சர் அடிச்சவர் எம்.எஸ்.வி. அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கட்டும்.

  4. புனித அந்தோணியார் படத்திலிருந்து மண்ணுலகில் இன்று தேவன் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s