TFMquiz 37 எம்ஜிஆர் நகரில் தேடாதீர்

எம்ஜிஆர் நகர், கே.கே நகருக்கு முன்னோடி நகரில் ஒரு பாட்டு.

சந்திரபோஸ் வாரத்தில் இந்தப் பாட்டை விட்டு விட்டு முடிக்க முடியாதுல்ல 🙂

பாடலோடு வருக.

போட்டி முடிவு

பாடல் : மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

படம் : அண்ணா நகர் முதல் தெரு

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா

  http://www.youtube.com/watch?v=QJqpiKnSoUM&sns=tw 

TFMquiz 36 வண்டிக்காரா அங்க்

ஏவிஎம் தயாரிப்பில் கேப்டன் நடித்த இன்னொரு போலீஸ் படம். 

சும்மா ஹீரோயின் கூட இந்தப் பாட்டு செம துள்ளிசைத் தெம்மாங்கு.

பாடலோடு வருக.

போட்டி முடிவு

பாடல் : வண்டிக்காரன் சொந்த ஊரு

படம் : மாநகர காவல்

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா

 http://www.youtube.com/watch?v=DRO70uomtPE&sns=tw 

TFMquiz 35 பாதை போட்ட பாட்டு

ஒரு புதுமைப் பித்தர் இயக்குநரின் முதல் படமே தேசிய விருது கண்டது. இந்தப் படத்தில் இடம் பிடித்த காதல் ஜோடிப் பாடல் அந்தக் காலத்துச் சென்னை வானொலியில் ஏக பிரபலம். 

எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் குரல்களில் ஒலிக்கும் அந்தப் பாடலோடு வருக.

போட்டி முடிவு

பாடல் : பச்சப் புள்ள அழுதுச்சுன்னா

படம் : புதிய பாதை

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

 http://www.youtube.com/watch?v=hgHCqqsssP4&sns=tw 

TFMquiz 34 காக்கிக் காதல்

எண்பதுகளில் மிகப்பெரும் வெற்றியைக் குவித்த ஏவிஎம் தயாரிப்பில் உருவான படம்.

அர்ஜூன் நடிக்க, சீதா ஜோடி.

மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.சைலஜா பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு

பாடல் : காக்கிச் சட்டை போட்ட மச்சான்

படம் : சங்கர் குரு

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா

 http://www.youtube.com/watch?v=jNRv_kXxkWE&sns=tw 

TFMquiz 33 நடக்கும் என்பார்

இந்த வாரம் இசையமைப்பாளர் சந்திரபோஸ் வாரம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இசையமைத்த வகையில் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுத்த படத்தில் இருந்து

பாட்டு.

கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா பாடுகிறார்கள்.

மனிதனான நின்று நிதானித்துப் பாடலைத் தேடுக 😉

பாடலோடு வருக.

சரியான பதில்
பாடல் : ஏதோ நடக்கிறது

படம்: மனிதன்

பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா