#TFM Quiz 17 மெல்லிசை மன்னர் வாழ்த்தும் ஆங்கிலப் புத்தாண்டு

  அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய 2016 ஆங்கிலப் புதுவருட வாழ்த்துகள்.

இன்று முதல் இடம்பெறும் போட்டிகள் புள்ளி வழங்கப்படும் வகையில் தொடரவிருக்கின்றன.

ஆங்கிலப் புதுவருடம் என்றால் சகலகலாவல்லவன் படத்தின் “இளமை இனிமை இதோ” பாடல் மட்டுமல்ல இதுவும் தான் என்று சொல்லுமாற்போல இலங்கை வானொலியில் அடிக்கடி பிரபலப்படுத்தப்பட்ட பாட்டு இது.

மெல்லிசை மன்னரின் தனித்துவ இசையில் துள்ளாட்டம் போடும் பாட்டு.

நடிகர் திலகம் சிவாஜியோடு இணைந்து நடித்த இளைய திலகம் பிரபுவின் முதல் படம் இது.

பாடலோடு வருக.

போட்டியின் பதில் 
பாட்டு : நல்லோர்கள் வாழ்வைக் காக்க

படம் : சங்கிலி

பாடியவர் : T.M.செளந்தராஜன்

 http://www.youtube.com/watch?v=VvffL2njuCc&sns=tw 

போட்டி விதிமுறை

 தமிழ்த் திரையிசைப் புதிருக்கான பதிலை குறித்த போட்டி பகிர்ந்த பதிவின் comment box இல் மட்டும் இடவும்.
ட்விட்டரிலோ, பேஸ்புக்கிலோ பகிராதீர்.
இந்தத் தமிழ்த் திரையிசைப் புதிர் என்ற போட்டி திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு இடம்பெறும். போட்டி முடிவு அடுத்த நாள் வெளியிடப்படும்.
இசைஞானி இளையராஜா மட்டுமன்றி அவருக்கு முன் கோலோச்சிய தமிழ்த் திரையிசையின் முன்னோடி இசை ஆளுமைகளையும் சம காலத்தில் இயங்கி வரும் இசையமைப்பாளர்களையும் அவர் தம் தனித்துவமான பாடல்களால் சிறப்புச் செய்வதே இந்தப் போட்டியின் நோக்கம். எனவே இந்தப் போட்டி ஒரு கலவையாக, பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களோடு அரங்கேறும்.
ஒவ்வொரு நூறு நாட்களிலும் இந்தப் போட்டியில் முதல்வராக வந்து பதிலளித்தவர் பரிசுக்குரியவர் ஆகத் தேர்ந்தெடுக்கப்படுவார். முதல்வராக வருபவர் பாடலின் முதல் இரு சொற்களையும் தமிழில் தட்டச்சுச் செய்ய வேண்டும்.
தொடர்ந்து நூறு நாட்கள் சரியான பதிலை முதல் வாய்ப்பில் சொல்லும் மூவருக்குச் சிறப்புப் பரிசு உண்டு. திருத்தப்பட்ட பதிலுக்குப் புள்ளி இல்லை.
 

Advertisements

40 thoughts on “#TFM Quiz 17 மெல்லிசை மன்னர் வாழ்த்தும் ஆங்கிலப் புத்தாண்டு

 1. நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக – சங்கிலி. முக்கிய திருப்பம் LION என்பது தலைகீழாக சுற்றும்போது NO17 எனப் புரிதலை உண்டாக்கும்.

 2. பாடல்: நல்லோர்கள் வாழ்வைக் காக்க
  படம் : சங்கிலி

 3. நல்லோர்கள் வாழ்வை காக்க பாடல். படம் சங்கிலி என நினைக்கிறேன். சிறிய வயதில் திருச்சி வானொலியில் கேட்டது. அதற்கு பிறகு இந்த இசையை இன்றுதான் கேட்கிறேன் இன்றும் பாடல் நினைவில் இருப்பது ஆச்சர்யம்

 4. பாடல்: நல்லோர்கள் வாழ்வை காக்க
  படம்: சங்கிலி

 5. நல்லோர்கள் வாழ்வைக் காக்க
  நமக்காக நம்மைக் காக்க… ஹேப்பி நியூ இயர்..

  ஆங்கிலப் புத்தாண்டுக்குப் பொருத்தமான பாடல்.

  சங்கிலி திரைப்படத்திலிருந்து இந்தப் பாடல். 1982ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். சி.வி.இராஜேந்திரன் இயக்கம்.

  ஸ்ரீபிரியா, மேஜர் சுந்தரராஜன், சுமித்ரா, மனோரமா, தேங்காய் என்ற 80களின் பட்டாளங்களோடு முதன்முறையாக இந்தப் படத்தில் பிரபு அறிமுகமானார்.

  இஞ்சி பூண்டு மிளகாய் கிராம்பு எல்லாம் சரியாயக் கலந்து மசாலாப் படமாக சங்கிலியை எடுத்தார் சி.வி.இராஜேந்திரன். இந்தப் படத்தின் வெற்றியாலோ என்னவோ.. சிவாஜிக்கு அடுத்த சில வருடங்கள் இதே மாதிரியான படங்களாகவே அமைந்தன. சந்திப்பு திரைப்படம் வரை வெற்றியும் பெற்றது.

  சிவாஜி படத்தில் ஒரு பாத்திரமாகவே நடித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ.. பிரபுவுக்கு நல்ல நடிகராக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தனிப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகுதான் அவருக்கென்று ஒரு பாணி அமைந்தது.

  இந்தப் புதிரின் பாடலோடு சேர்த்து படத்தில் நான்கு பாடல்கள். நான்கும் முத்தான பாடல்கள்.

  மோகவீணை ஒரு இராகம் பாடக் கேட்டேன்…. வாணி ஜெயராமும் டி.எம்.எஸ்சும் பாடிய அருமையான ஜோடிப்பாடல்
  மலை ரோஜாப் பூவில் ஒன்னு… எஸ்.ஜானகி பாடிய சுறுசுறு பாடல்.
  ஏழு கடல் நாட்டிலொரு இராணி இருந்தாள்… பி.எஸ்.சசிரேகாவும் எஸ்.பி.ஷைலஜாவும் பாடிய குழந்தைகள் பாடல்.

  படத்தின் அத்தனை பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதினார்.

 6. நல்லோர்கள் வாழ்வைக் காக்க
  நமக்காக நம்மைக் காக்க
  ஹாப்பி நியூ இயர்…
  டி.எம்.செளந்திரராஜன்
  எம். எஸ். விஸ்வநாதன்
  சங்கிலி

 7. நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக… – செளந்திரராஜன் – சங்கிலி

 8. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  சங்கிலி படத்திலிருந்து நல்லோர்கள் வாழ்வை காக்க பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s