TFMquiz 58 சித்திரம் பாடுதடி

இன்றிலிருந்து இரு வாரங்கள் இசையமைப்பாளர் கங்கை அமரன் இசையில் மலர்ந்த பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.

முதலில் கங்கை அமரனுக்குப் பெரும் புகழ் சேர்த்த பாடல் மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி குரல்களில்.

சரோசா குப்பையா கொட்டுறே கொட்டு கொட்டு 😉 பாடலையும் கண்டு பிடிச்சு வந்துடு

போட்டி முடிவு : காதல் வைபோகமே

படம் : சுவரில்லாத சித்திரங்கள்

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

 http://www.youtube.com/watch?v=mQdqhRac_PU&sns=tw 

Advertisements

TFMquiz 57 தாய்க்கு ஒரு தாலாட்டு

டி.ராஜேந்தர் தொடர் பாடல்களில் இந்தச் சுற்றின் நிறைவுப் பாடல் இது.

எஸ்.ஜானகி & கே.ஜேசுதாஸ் பாடும் இனிய சோக கானம்.

ஒரு சபதம் எடுத்துப் பாடலோடு வருக.

போட்டி முடிவு : எனது கானம்

படம் : ஒரு தாயின் சபதம்

பாடியவர்கள் : எஸ்.ஜானகி, கே.ஜே.ஜேசுதாஸ்

  http://www.youtube.com/watch?v=OtRMOB-00S4&sns=tw 

TFMquiz 56 விஜய்காந்த் கூட்டணி 

பெரும் தயாரிப்பாளர் தாணு தயாரிக்க முன்னணி நாயகன் விஜய்காந்த் நடித்த திரைப்படத்துக்கு டி.ராஜேந்தர் கொடுத்த பாடல் இன்று.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : குத்து விளக்காகக் குலமகளாக

படம் : கூலிக்காரன்

பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

  http://www.youtube.com/watch?v=stzGNy9JdvU&sns=tw 

TFMquiz 55 மூங்கில் காடுகளே

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடடும் இந்தப் பாடல் டி.ராஜேந்தருக்கு ஒரு நட்சத்திரப் பாடல்.

இன்று வரை இந்தப் பாடலுக்கு நிகர் எதுவும் இல்லை.

பாடல் ஒன்றுக்கு சம்பந்தப்பட்ட சொற்கள் தான் தலைப்பில் இருக்கும்.
பாடலோடு வருக.
போட்டி முடிவு

பாடல் : மூங்கிலிலே பாட்டிசைத்து

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

படம் : ராகம் தேடும் பல்லவி

 http://www.youtube.com/watch?v=BMsokMo8zw4&sns=tw 

TFMquiz 54 ராகம் தேடும் நெஞ்சம்

தியாகராஜன், சரிதா நடித்த படத்தின் பாடல் இன்று டி.ராஜேந்தரின் இசையில் வரும் போட்டிப் பாடலாக.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குதூகலக் குரல் எழுப்ப எஸ்.ஜானகி பாடும் பாட்டு இது.

அட்டகாஷ் பாடலைக் கண்டு பிடித்து வருக.

 போட்டி முடிவு : நெஞ்சம் பாடும்

படம் : நெஞ்சில் ஒரு ராகம்

பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

 http://www.youtube.com/watch?v=_1WL__E65x8&sns=tw 

TFMquiz 53 “பரி” பாடல்

இசையமைப்பாளர் T.ராஜேந்தர் வாரம் இன்றும் தொடர்கிறது.

இன்று இடம்பெறுவது ஜோடிப் பாடல். கே.ஜே.ஜேசுதாஸ், சசிரேகா குழுவினர் பாடியது.

இந்தப் படத்தின் தலைப்பில் ஒரு பறவையின் பெயர் இருக்கும்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி

படம் : உறவைக் காத்த கிளி

பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், சசிரேகா, குழுவினர்

 http://www.youtube.com/watch?v=yaeaIhoRfrI&sns=tw 

TFMquiz 52 வசந்தகாலப் பயணம்

T.ராஜேந்தருக்கு ஆரம்ப கால வெற்றியைக் கொடுத்த படம் இது.

இந்தப் படத்தின் நாயகி ரஜினிகாந்த் உடன் புதுக்கவிதை பாடியிருக்கிறார் 🙂
பாடலோடு வருக.

போட்டி முடிவு : வசந்தம் பாடி வர

படம் : இரயில் பயணங்களில்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

  http://www.youtube.com/watch?v=82-CcatDvo0&sns=tw