#TFMquiz 102 கார்த்திக் ராஜா ஸ்பெஷல் 5

கார்த்திக் ராஜா ஸ்பெஷல் வாரத்தின் நிறைவுப் பாடல் இது.

சுந்தர்.C மற்றும் பிரபுதேவா இணைந்த இன்னொரு படம்.

இதே படத்தின் ஒரு பாடல் படத் தலைப்பை ஞாபகப்படுத்தும். ஆனால் இங்கே கொடுத்த பாடல் இன்னொன்று.

மிகவும் சிறிய பாடல் ஆனால் அந்த இசைக் கோர்ப்புக்காக விரும்பிச் சேர்த்திருக்கிறேன்.

பாடலோடு வருக

போட்டி முடிவு : உயிரே என் உயிரே

படம் : உள்ளம் கொள்ளை போகுதே 

பாடியவர் : ஹரிஹரன்

#TFMquiz 101 கார்த்திக் ராஜா ஸ்பெஷல் 4

இன்று வரும் பாடல் கார்த்திக் ராஜா இசையமைக்க, இளையராஜா பாடிய பாட்டு.

வெயிலால் வாடி வதங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் படத்தின் தலைப்பே குளிர்மையைத் தருமே 🙂

பாடலோடு வருக

பாடல் : அடியே கிளியே

பாடியவர் : இளையராஜா

படம் : குடைக்குள் மழை

 http://www.youtube.com/watch?v=Bra2-R6v0FI&sns=tw 

#TFMquiz தமிழ்த் திரையிசைப் புதிர் நூறாவது நாள்

தமிழ்த் திரையிசைப் புதிர்ப் போட்டியின் நூறாவது போட்டி இன்று.

இன்றைய போட்டியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசைக்க, ஹரிஹரன், சாதனா சர்க்கம் வெற்றிக் கூட்டணி குழுவினரோடு பாடும் பாட்டு.

இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, அவரின் உதவி இயக்குநராக இருந்தவர் இயக்கிய அட்டகாஷ் கெட்டி மேளம் கொட்டும் படம்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : ரகசியமாய் ரகசியமாய்

படம் : டும் டும் டும் 

பாடியவர் : ஹரிஹரன், சாதனா சர்க்கம், குழுவினர்

#TFMquiz 99 கார்த்திக் ராஜா ஸ்பெஷல் 2

இன்று கார்த்திக் ராஜாவின் இசையில் இடம்பெறும் பாடல் இன்றளவும் அவரின் பெருமை கூறும் பாடல்களில் ஒன்று.
அமிதாப் பச்சனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இரட்டை இயக்குநர்கள் இயக்க இன்றைய முன்னணி நாயகர்கள் அப்போது இணைந்து நடித்த படம்.

பாடலோடு வருக.

போட்டி முடிவு : வீசும் காற்றுக்கு

படம் : உல்லாசம்

பாடியவர் : உன்னிகிருஷ்ணன், ஹரிணி, குழுவினர்

#TFMquiz 98 கார்த்திக் ராஜா ஸ்பெஷல் 1

தமிழ்த் திரையிசைப் புதிர் நூறாவது நாளை நெருங்கும் இவ்வேளை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில் மலர்ந்த பாடல்களோடு இவ்வாரம்.

இன்றைய பாடல் ஒரு காலத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு சுலோகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாக அமைந்திருக்கும் படத் தலைப்போடு.
சுந்தர் சி இயக்கத்தில் ஒரு நாயகன் இரட்டை வேடம் போட்ட படம் இது.

பாடலோடு வருக.

பாடல்: இந்தச் சிரிப்பினை அங்கு பார்த்தேன்

படம்: நாம் இருவர் நமக்கு இருவர்

பாடியவர்கள்: ஹரிஹரன், விபா சர்மா