#TFMquiz 119 யுவன் ஷங்கர் ராஜா ஸ்பெஷல் 2

இன்று வரும் பாடல் இளமை துள்ள எடுத்த படத்தில் இருந்து.

தந்தை, மூத்த மகன், இளைய மகன் ஆகிய மூவரும் கூட்டுச் சேர்ந்த படம். இளைய மகன் நாயகன்.

இந்தப் பாடலை பம்பாய் ஜெயஶ்ரீ, உன்னி கிருஷ்ணன் ஆகியோர் பாடிய பாடலிது.

பாடலோடு வருக.

பாடல் : தீண்டத் தீண்ட

படம் : துள்ளுவதோ இளமை

Advertisements

#TFMquiz118 யுவன் ஷங்கர் ராஜா ஸ்பெஷல் 1

இன்று முதல் அடுத்த 10 போட்டிகள் யுவன் ஷங்கர் ராஜா இசையில் மலர்ந்தவை.

இன்றைய பாடல் திரையிலும், நிஜத்திலும் ஜோடி போட்ட நாயகன், நாயகி நடித்தது.

உன்னி கிருஷ்ணன் குழுவினர் பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

பாடல் : சன்யோரிட்டா சன்யோரிட்டா

படம் : பூவெல்லாம் கேட்டுப் பார்

#TFMquiz 117 மெல்லிசை மன்னரின் 80கள் 10

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் 80களைக் கொண்டாடும் நிறைவுப் பாடலிது.

எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணியில் இன்னொரு படம். விஜய்காந்த், ரகுமான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி, ஒரு காலத்தில் கலக்குக் கலக்கிய இந்தப் பாடலோடு வருக.

பாடல் : தேடாத இடமெல்லாம் /இதுவரை பாடித் திரிந்த

படம் : வசந்த ராகம்

#TFMquiz 116 மெல்லிசை மன்னரின் 80கள் 9

இன்று வரும் பாட்டு இந்தியாவின் குளிர்ப் பிரதேசமொன்றின் பெயரை ஸ்பெஷலாகத் தாங்கிய படத்தில் இருந்து.

நண்பன் மேல் கோபம் கொண்டு வரும் இந்தச் சோகப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.

பாடலோடு வருக.

பாடல் : உனக்கென்ன மேலே 

படம் : சிம்லா ஸ்பெஷல்

#TFMquiz 115 மெல்லிசை மன்னரின் 80கள் 8

இன்று வருவது பாடல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் இருந்து தங்கைப் பாசம் கொண்ட பாட்டு.

இந்தப் படத்தின் தலைப்பு திமுக வின் சின்னத்தோடு நெருங்கியது.

மலேசியா வாசுதேவன் பாடும் அழகான பாடலைக் கண்டு பிடித்து வருக.

பாடல் : தங்கச்சி சிரித்தாளே

படம் : சிவப்பு சூரியன்

#TFMquiz 114 மெல்லிசை மன்னரின் 80கள் 7

ரகுமான், அமலா ஜோடி கட்டிய படத்தில் இருந்து இன்றைய பாடல்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

பாடல் : பூக்களே வண்ண வண்ண

படம் : கண்ணே கனியமுதே

#TFMquiz 113 மெல்லிசை மன்னரின் 80கள்

இன்று வரும் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தைக் கண்டு பிடிக்க நீங்கள் வண்டலூர் செல்ல வேண்டியதில்லை அந்த ஊரை நினைத்தாலே மீதி வரும் 🙂

பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்தப் பாட்டு நெடு நாட்களாக என் விருப்பத்தில் ஒன்று.

இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் இயக்க, மோகன் நடித்த படம் இது.
பாடலோடு வருக.

பாடல் : நெடு நாள் ஆசை ஒன்று

படம் : சரணாலயம்

 http://www.youtube.com/watch?v=M_qPZWuHpT0&sns=tw