#TFMquiz 108 மெல்லிசை மன்னரின் 80கள் 1

இன்று முதல் அடுத்த இரு வாரங்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் எண்பதுகளில் கொடுத்த பாடல்கள் இடம்பெறுகின்றன.
இன்று வரும் பாடல் சிவாஜி கணேசன் இரட்டை வேடத்திலும், மகன் பிரபுவும் நடித்த படம்.

சிவாஜி ஶ்ரீதேவியுடன் ஜோடி கட்டி ஆடிய படம் 😉

இந்தப் பாடல் ஆனந்தம் தரும் பாட்டு

பாடலோடு வருக.

போட்டி முடிவு : ஆனந்தம் விளையாடும் வீடு

படம் : சந்திப்பு 

பாடியவர் : டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா

Advertisements

27 thoughts on “#TFMquiz 108 மெல்லிசை மன்னரின் 80கள் 1

 1. ஆனந்தம் விளையாடும் வீடு – சந்திப்பு.

 2. ஆனந்தம் விளையாடும் வீடு
  இது ஆனந்தம் விளையாடும் வீடு
  நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு – சந்திப்பு திரைப்படம். வாலி எழுதிய பாடல்.

  சந்திப்பு திரைப்படம் பிச்சுக்கிட்டு ஓடுன படமாம். இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரக்கூட்டமே இருக்கும். இரண்டு சிவாஜி (அப்பா-மகன்). பிரபு(இன்னொரு மகன்). சுஜாதா, ஸ்ரீதேவி, ராதா, மனோரமா, சரத்பாபு, நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன், சத்யராஜ், விஜயகுமார், வடிவுக்கரசி, லூஸ்மோகன், டெல்லி கணேஷ் என்று பட்டியல் ரொம்பப் பெருசு.

  மசாலாப் படத்துக்குத் தேவையான எந்த வாசனைச் சாமானும் குறைவில்லாம சேர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட படம். அப்போதைய டிரெண்டுக்கு வெற்றி பெற்றதில் வியப்பில்லை.

  சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆஸ்தான இசையமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைப்பு. வாலியின் பாடல் வரிகள். இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமைதான்.

  இந்தப் புதிர்ப்பாடல் மகிழ்ச்சியாகவும் சோகமாகவும் இரண்டு விதமாக வரும். குடும்பப் பாட்டின் இலக்கணம் சுத்தமான வந்த பாடல்களில் சிறப்பானது. டி.எம்.எஸ் பி.சுசீலா குரலில் மகிழ்ச்சிப் பாட்டும்.. டி.எம்.எஸ் குரலில் சோகப் பாட்டும் வரும். இரண்டுமே இனியவை.

  இராத்திரி நிலாவில் இரகசியக் கனாவில் – வாணி ஜெயராம் ஸ்டைலாகப் பாடிய அட்டகாசமான 80களின் தவிர்க்க முடியாத டிஸ்கோ பாட்டு. இந்தப் பாட்டைக் கேக்கலைன்னா.. உடனே கேட்டுருங்க. ஸ்ரீதேவி டான்ஸ்.

  அடி நான் வாங்கி வந்தேண்டி நாலு மொழம் பூவு – 80களின் பிரபல எஸ்.பி.பி எஸ்.ஜானகி ஜோடிப்பாட்டு. இதையும் கேக்கலைன்னா கேட்டுருங்க. அட்டகாசமான சுறுசுறுப்பாட்டு. எனக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டு. இது பிரபுவுக்கும் ராதாவுக்குமான ஜோடிப்பாட்டு.

  வார்த்தை நானடி கண்ணம்மா – டி.எம்.எஸ் வாணி ஜெயராம் டூயட். எம்.எஸ்.வி இசைல டி.எம்.எஸ் வாணி ஜெயராம் டூயட் எல்லாமே பொதுவாவே அருமை. இந்தப் பாட்டும் அருமை. ஆனால் பாடலைப் பார்க்க மட்டும் செய்யவும். இது சிவாஜி ஸ்ரீதேவி ஜோடிப்பாட்டு.

  உன்னைத்தான் நம்பிட்டேன் உன்னையே கும்பிட்டேன் – இது டி.எம்.எஸ் எஸ்.பி.பி டூயட் பாட்டு. அண்ணன் தம்பியான சிவாஜியும் பிரபுவும் பாடும் பாட்டு. குடிக்கின்ற அண்ணனைப் பாட்டுப்பாடி தம்பி திருத்தும் பாட்டு. இனிமையான பாசம் மிகுந்த தத்துவப்பாட்டு.

  கடைசியாகச் சொல்ல வேண்டியது… எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச பாட்டு.
  ஷோலாப்பூர் ராஜா ஷோலாப்பூர் ராணி – பி.சுசீலா, டி.எம்.எஸ், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.ஷைலஜா என்ற அபூர்வக் கூட்டணி பாடிய அட்டகாசமான கிளைமாக்ஸ் பாட்டு. எனக்குத் தெரிந்து இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து வேறு பாடல் பாடிய நினைவில்லை.
  வில்லனுடைய இடத்தில் டிஸ்கோ செட்டப்பில் படத்தின் எல்லாப் பாத்திரங்களும் மாறுவேடத்தில் வில்லன் முன் ஆடிப்பாடும் பாட்டு. சிவாஜி, ஸ்ரீதேவி, பிரபு, ராதா, மனோரமா, சரத்பாபு என்று மாறுவேடத்தில் இருப்பவர்களை நாம் எளிதாகக் கண்டுபிடித்தாலும் வில்லனால் கண்டுபிடிக்க முடியாமல் போவதுதான் ஒப்பனைக் கலைஞரின் சாதனை.

 3. ஆனந்தம் விளையாடும் வீடு இது ஆனந்தம் விளையாடும் வீடு…
  டி.எம்.செளந்திரராஜன் & பி.சுசிலா
  சந்திப்பு

 4. பாடல்: ஆனந்தம் விளையாடும் வீடு
  படம்: சந்திப்பு

 5. சந்திப்பு படத்திலிருந்து ஆனந்தம் விளையாடும் வீடு பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s