#TFMquiz 112 மெல்லிசை மன்னரின் 80கள் 5

இந்தப் பாடல் நடிகர் ரகுமானைத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படத்தில் இருந்து வருகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கம். நதியா இரண்டு வேடங்கள்.

கே.ஜே.ஜேசுதாஸ், வாணிஜெயராம் பாடிய பாட்டு இது.

பாடலோடு வருக.

பாடல் : மாலைப் பொன்னான மாலை

படம் நிலவே மலரே

 http://www.youtube.com/watch?v=cnlnHC8aNK8&sns=tw 

Advertisements

21 thoughts on “#TFMquiz 112 மெல்லிசை மன்னரின் 80கள் 5

  1. மாலை பொன்னான மாலை
    இளம் பூவே நீ வந்த வேளை..
    நிலவெ மலரே
    கே. ஜே. யேசுதாஸ் & வாணி ஜெயராம்

  2. பாடல்: மாலை பொன்னான மாலை
    படம்: நிலவே மலரே

  3. நிலவே மலரே படத்திலிருந்து மாலை பொன்னான மாலை பாடல்.

  4. மாலை பொன்னான மாலை
    இளம் பூவே நீ வந்த வேளை

    நடிகர் இரகுமானுக்குத் தமிழில் முதல்படம் .. நதியாவுக்கு இரண்டாவது. நதியாவுக்கு இரண்டாவது படம் இசை நயம் மிகுந்த படமாக அமைந்தது சிறப்பு. அப்போது இரகுமான் நன்றாக ஆடக்கூடியவர் என்று சொல்வார்களாம். இந்தப் படத்தில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த டிஸ்கோ போட்டிப் பாடலும் உண்டு. இரகுமானுக்குத் தமிழ்த் திரையில் அறிமுகப் பாடல் இது. மலேசியா வாசுதேவனும் எஸ்.என்.சுரேந்திரனும் கலக்கியிருப்பார்கள்.

    போட்டிக்குப் போட்டியிட்டுப் பாட வந்தது நானே – மலேசியா, சுரேந்திரன்

    எண்பதுகளில் தமிழ்த் திரைப்படங்களில் ஈழம் தொடர்பான பாடல்கள் மறைமுகமாக வருவதுண்டு. அந்த வகையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற சுதந்திர நாட்டின் அடிமைகளே பாடல் மிக அருமையானது. ஈழம் தொடர்பான திரைப்பாடல்களில் மெல்லிசை மன்னர் இரண்டாயிரங்களிலும் ஏ.ஆர்.இரகுமான் இசையில் பங்கெடுத்தார் என்பது இன்னும் சிறப்பு.

    சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் – அருமையான எஸ்.பி.பி மெலடி.

    அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை – ஷோபா சந்திரசேகர் குரலில் அருமையான பாடல்

    ஒரு டயமண்ட் ராணி என்று மலேசியா குரலில் மற்றொரு நடனப் பாடல்.

    இந்தப் படத்தின் சிகரமான பாட்டு என்றால் அது பி.சுசீலா குரலில் மண்ணில் வந்த நிலவே பாட்டுதான். தாலாட்டு என்றால் பி.சுசீலா. பி.சுசீலா என்றால் தாலாட்டு. புலமைப்பித்தனின் மிகச் சிறப்பான வரிகள்.

    இந்தப் படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். வீடியோக்கள் யுடியூபில் இல்லை. விரைவில் வலையேற்றுகிறேன். இந்தப் படத்தின் வெற்றி இந்தப் படத்தை தெலுங்கும் மலையாளமும் பேச வைத்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s