#TFMquiz 113 மெல்லிசை மன்னரின் 80கள்

இன்று வரும் பாடல் இடம்பெற்ற திரைப்படத்தைக் கண்டு பிடிக்க நீங்கள் வண்டலூர் செல்ல வேண்டியதில்லை அந்த ஊரை நினைத்தாலே மீதி வரும் 🙂

பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்தப் பாட்டு நெடு நாட்களாக என் விருப்பத்தில் ஒன்று.

இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் இயக்க, மோகன் நடித்த படம் இது.
பாடலோடு வருக.

பாடல் : நெடு நாள் ஆசை ஒன்று

படம் : சரணாலயம்

 http://www.youtube.com/watch?v=M_qPZWuHpT0&sns=tw 

Advertisements

18 thoughts on “#TFMquiz 113 மெல்லிசை மன்னரின் 80கள்

  1. பாடல்: நெடுநாள் ஆசை ஒன்று
    படம்: சரணாலயம்

  2. நெடுநாள் ஆசை ஒன்று – சரணாலயம் திரைப்படத்தில் இருந்து.

    பயணங்கள் முடிவதில்லை என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அடுத்து அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை என்று தோல்விப் படம் கொடுத்த ஆர்.சுந்தர்ராஜன் தன்னுடைய மூன்றாவது படமான சரணாலயத்தில் மீண்டும் வெற்றி பெற்றார். இந்தப் படத்திலும் மோகன் கதாநாயகன். ஆனால் நாயகி நளினி.

    பயணங்கள் முடிவதில்லை படத்தில் இளையராஜா.. அந்த ராத்திரிக்கு சாட்சியில்லை படத்தில் கே.வி.மகாதேவன் என்று இசையமைக்க.. சரணாலயத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனோடு கூட்டணி. படத்தில் அனைத்தும் முத்தான பாடல்கள்.

    எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
    வண்ண இருவிழியால் இந்தப் பூங்கோதை – மலேசியா வாசுதேவன்
    மலேசியா வாசுதேவனை அறிமுகப்படுத்திய மெல்லிசை மன்னரிடம் மலேசியாவுக்கென்று தனித்துவமான பாடல்கள் சுருளிராஜன் குரலில் “உப்புமா கிண்டி வையடி” பாடலாகவும் “பூப்பரிச்சு மால கட்டி” என்ற நகைச்சுவை வில்லுப்பாட்டாகவும் இருந்தது. அந்தக் குறை போக வந்த பாட்டுதான் இந்தப் பாட்டு. மிக அருமையான பாடல். கேட்டுப்பாருங்கள்.

    அடுத்ததும் மலேசியா வாசுதேவன் பாட்டுதான். ஆனால் உடன் பாடியது வாணி ஜெயராம்.
    காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
    அங்கு கானக்கருங்குயில்கள் கச்சேரியாம்

    அடுத்து வருவது எல்.ஆர்.ஈசுவரி.
    நம்ம சங்கிலியில் மாட்டினாரு என்று வாலி எழுதிய பாடல்.

    அடுத்து ஒரு அட்டகாசமான பாட்டு. இளையராஜாவையும் எம்.எஸ்.வியையும் கூட்டு சேர்க்கும் முன், கங்கை அமரனையும் மெல்லிசை மன்னரையும் இந்தப் படத்தில் கூட்டு சேர்த்து விட்டார் ஆர்.சுந்தர்ராஜன். கொல்லி மலைக் காட்டுக்குள்ளே என்று தொடங்கும் பாடலைப் பாடியவர்கள் மலேசியா வாசுதேவனும் எஸ்.பி.ஷைலஜாவும். கட்டாயம் கேட்க வேண்டிய அருமையான பாட்டு.

    அடுத்த பாட்டையும் எழுதியது கங்கையமரன் தான்.
    நீ ஒத்துக்கிட்டா பத்துத் தரம் முத்தம் வைப்பேன் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் இந்தப் பாட்டு ஈவ் டீசிங் பாட்டாக இருக்கக்கூடும்.

    இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் சுகமான இராகங்கள் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரோடு சேர்ந்து பணியாற்றினார் ஆர்.சுந்தர்ராஜன். அந்தப் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் இளையராஜா பாடியிருக்கிறார். அதற்குப் பிறகு மெல்லத் திறந்தது கதவு படத்தில் மெல்லிசை மன்னரையும் இசைஞானியையும் இணைத்து இசையமைக்க வைத்தார்.

  3. சரணாலயம் படத்திலிருந்து நெடுநாள் ஆசை ஒன்று பாடல்.

  4. நெடுநாள் ஆசை ஒன்று… – சரணாலயம்.

    மலேசியாவின் பெஸ்ட் இதே படத்தில்…,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s