#TFMquiz 114 மெல்லிசை மன்னரின் 80கள் 7

ரகுமான், அமலா ஜோடி கட்டிய படத்தில் இருந்து இன்றைய பாடல்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

பாடல் : பூக்களே வண்ண வண்ண

படம் : கண்ணே கனியமுதே

Advertisements

19 thoughts on “#TFMquiz 114 மெல்லிசை மன்னரின் 80கள் 7

 1. பாடல்: கண்ணே கனியமுதே
  படம்: பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படிக்கும்

 2. பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்… – கண்ணே கனியமுதே.

 3. எம்.எஸ்.வி இசையில் சித்ரா பாடிய பாடல் என்று கேட்டால் நிறைய யோசிக்காதிக்காதீர்கள். இந்தப் பாட்டையும் கஸ்தூரி மான் குட்டியாம் பாட்டையும் சொல்லுங்கள். இந்த இரண்டை விடவும் அருமையான பாடல்கள் சில பாடியிருக்கிறார் சித்ரா. ஆனாலும் இந்த இரண்டு பாடல்களும் பிரபலமடைந்துவிட்டன.

  1986ம் ஆண்டு.. அதாவது ஏ.ஆர்.ரகுமான் வருவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இளையராஜா இசைக்கோலோச்சிக் கொண்டிருந்த உச்சிப் பொழுதில்… இசையைப் பின்புலமாகக் கொண்ட திரைப்படத்துக்கு மெல்லிசை மன்னரிடம் போய் நின்ற இயக்குனர் சக்தி கண்ணனுக்கு கோடானுகோடி நன்றி. இந்த படத்தின் பாடல்களுக்காக நிச்சயமாக சக்தி கண்ணன் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் பாடல்களை எழுதியவரும் அவரே. இந்தப் படத்துக்குப் பிறகு யார் என்ற பேய்ப்படத்தை எடுத்து யார் கண்ணன் என்று அவர் பெயரே மாறிவிட்டது. கண்ணனுக்கு முன்னால் இருந்த சக்தி போய் யார் வந்துவிட்டது. இந்தப் படம் மலையாளத்தில் அறியாத பந்தம் என்ற பெயரில் வெளிவந்தது.

  பூக்களே வண்ண வண்ணக் கவிதைகள் படிக்கும் – கண்ணே கனியமுதே (இன்றைய புதிர்ப் பாடல்)

  இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களையும் நீங்கள் ஒருமுறையாவது கேட்டுவிடுங்கள். பிறகு உங்கள் விருப்பப்பட்டியலில் இவையெல்லாம் கட்டாயமாக இடம்பெறும்.

  அகிலம் திருநடனமிடும் ஓர் அற்புதம் நேரில் வரும் – ராஜ்குமார் பாரதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  நடனப் பள்ளியில் ஒவ்வொருவித நடனமாக ஆடும் பாட்டு. ராஜ்குமார் பாரதிக்குக் கிடைத்த நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. கிளாசிகல் இசையில் அவர் பாட… மார்டர்ன் + பஞ்சாபி பாணிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவார்.

  அடுத்து எனக்கு மிகமிகப் பிடித்த பாட்டு. வாணி ஜெயராம் குரலில்.
  தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
  நால்வர் தோள் தரும் நேரமும் ஓர் பாட்டு
  எத்தனை சுமைகள் உன் மனத்தில் இருப்பினும்
  இறக்கி வைக்கலாம் இசை கேட்டு…
  அட்டகாசமான வரிகள். தான் நடத்தும் இசைப்பள்ளிக்கு ஆசிரியையாக தன்னுடைய தாயையே நியமிக்கிறான் மகன். ஆனால் அது தன்னுடைய மகன் என்று தாய்க்குத் தெரியாது. அந்தத் தாய் பாடும் பொழுது தானும் ஒரு மாணவனாக நின்று ஆடுகிறான் மகன்.

  ஒரு பிள்ளை அழைத்தது என்னை – இது இன்னொரு வாணி ஜெயராம் பாடல். சிறுவயதில் தொலைந்து போன தன்னுடைய மகனை நினைத்து தாய் பாடும் பாட்டு. இந்தப் பாட்டு இணையத்தில் இல்லை. அடுத்த வாரம் வலையேற்றுகிறேன்.

  நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு ஒரு டூயட் பாட்டு உண்டு இந்தப் படத்தில். அதுவும் கோவை சரளாவோடு. இசைப்பள்ளியில் துப்புரவுப் பணியாளர்களாக உள்ளவர்கள் இவர்கள் இருவரும். அவர்களின் கனவுப்பாட்டு இது. தன்னை மைக்கேல் ஜாக்சனாக நினைத்துக் கொண்டு செந்தில் பாடும் பாட்டு. மலேசியா வாசுதேவனும் எல்.ஆர்.ஈசுவரியும் இணைந்து பாடியிருப்பார்கள். செந்திலுக்குத்தானே என்று எந்த வகையிலும் இசைச்சமரசம் செய்துகொள்ளாமல் பாடல் கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.வி. இதோ கேளுங்கள்… எம் பேரு ஜூனியர் மைக்கேல் ஜாக்சன்..

  அடுத்து வருவது இனிமையான எஸ்.ஜானகி பாட்டு. இந்தப் பாட்டின் வீடியோ யுடியூபில் இல்லை. அடுத்த வாரம் வலையேற்றுகிறேன். அழகான பாவத்தோடு எஸ்.ஜானகி மிகச் சிறப்பாகப் பாடியிருப்பார். இந்தச் சுட்டியில் கேட்கலாம்.
  http://tamilsongs.co/file.php?p=1&file=load/A%20to%20Z%20Movie%20Wise%20Songs/K/Kanne%20Kaniyamuthe/Thagathimithom.mp3&sort=0

  கடைசியாக… படத்தின் உச்சப்பாடல். பி.எஸ்.சசிரேகாவும் கே.ஜே.ஏசுதாசும் பாடிய பாரதியார் பாடல்.
  நின்னையே இரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா..
  தன்னையே சகியென்று சரணமெய்தினேன்…
  பரதநாட்டியப் பாடலாகவும் இருக்க வேண்டும்.. காதல் பாட்டாகவும் இருக்க வேண்டும்… பாரதியார் பாட்டாகவும் இருக்க வேண்டும்.. இனிமையான பாட்டாகவும் இருக்க வேண்டும்.. காலத்துக்கும் நிலைத்து நிற்கும் பாட்டாகவும் இருக்க வேண்டும்… இதோ இத்தனைக்கும் சாட்சியாய்..

 4. கண்ணே கனியமுதே படத்திலிருந்து பூக்களே வண்ண வண்ணக் கவிதைகள் படைக்கும் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s