#TFMquiz 117 மெல்லிசை மன்னரின் 80கள் 10

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் 80களைக் கொண்டாடும் நிறைவுப் பாடலிது.

எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணியில் இன்னொரு படம். விஜய்காந்த், ரகுமான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி, ஒரு காலத்தில் கலக்குக் கலக்கிய இந்தப் பாடலோடு வருக.

பாடல் : தேடாத இடமெல்லாம் /இதுவரை பாடித் திரிந்த

படம் : வசந்த ராகம்

Advertisements

25 thoughts on “#TFMquiz 117 மெல்லிசை மன்னரின் 80கள் 10

 1. தேடாத இடமெல்லாம் தேடினேன்
  எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  வசந்தராகம்

 2. தேடாத இடமெல்லாம் தேடினேன்…- பாலசுப்ரமணியம் – வசந்தராகம்

 3. தேடாத இடமெல்லாம் தேடினேன்
  இதுவரை பாட்டை பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
  எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  வசந்தராகம்

 4. தேடாத இடமெல்லாம் தேடினேன்
  இதுவரை பாட்டைப் பிரிந்த பாடகன்- பாலசுப்ரமணியம் – வசந்த ராகம்

 5. தேடாத இடமெல்லாம்.. இதுவரை பாட்டைப் பிரிந்த ..

 6. தேடாத இடமெல்லாம்…இதுவரை பாட்டைப் பிரிந்த

 7. இதுவரை பாட்டை திறிந்த பாடகன் எனக்கொரு பல்லவி கிடைத்தது

 8. வசந்த ராகம் படத்திலிருந்து தேடாத இடமெல்லாம் / இதுவரை பாட்டைப் பிரிந்த பாடல்.

 9. மெல்லிசை மன்னரின் எண்பதுகளின் இசைப்பாடல்களைக் கொண்டு இரண்டு வாரப் புதிர் நடத்தியதற்கு மிக்க நன்றி.

  எண்பதுகளில் மெல்லிசை மன்னர் இசையமைத்த படங்கள் குறைந்தாலும் தரம் குறையவில்லை. சரியான படங்கள் அமையும் போது இசை உச்சத்தைத் தொட்டதைத்தான் வரலாறு கண்டது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூறில் ஐயர் தி கிரேட் திரைப்படத்தில் மிகச் சிறப்பான பாடல்களையும் மிகச் சிறந்த பின்னணி இசையையும் மெல்லிசை மன்னர் வழங்கியதை வசதியாக உலகம் மறந்து போய்விட்டது. அவரவர்க்கு அவரவர் காரணம்.

  இந்த நிலையில் இரண்டு வாரங்களாக தினமும் அவருடைய பாடல்களைக் கொடுத்தமைக்கு நன்றி. பாலச்சந்தரின் படங்கள் தவிர்த்து முக்தா சீனிவாசன், ஆர்.சி.சக்தி, இறையருட் கலைச்செல்வர் கே.சங்கர், எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், விசு, ஆர்.சுந்தர்ராஜன், (மலையாள)பரதன், பில்லா கிருஷ்ணமூர்த்தி, சி.வி.இராஜேந்திரன், அமீர்ஜான், போன்ற இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றி மிக அட்டகாசமான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

  மெல்லிசை மன்னர் என்றென்றும் திரையிசைச் சக்கரவர்த்தி. தமிழ் இருக்கும் வரை அவர் புகழ் வாழும்.

 10. தன்னுடைய மனைவியைக் காணாமல் ஊரெல்லாம் உலகெல்லாம் தேடினான் ஒருவன். கடைசியாகச் சென்னையில் அவளைச் சந்திக்கிறான். அவன் பாடகனாக மேடையில். அவள் பார்வையாளராக முதல் வரிசையில். அவள் இன்னொரு கணவனோடு வந்திருப்பது தெரியாமல் மகிழ்ச்சியோடு பாடுகிறான். அவள் இறந்து போனதாக நினைத்த கணவன் உயிரோடு வந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியோடு பாடலைக் கேட்கிறாள்.
  இதுவரைப் பாட்டைப் பிரிந்த பாடகன் எனக்குப் பல்லவி கிடைத்தது – எஸ்.பி.பாலசுப்ரமணியம்

  முக்கோணச் சூழ்நிலை. முதல் கணவன் இரண்டாம் கணவன் மனைவி மூவரும் பாடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் முடிவு தெரியாமல் தெளிவு தேடிப் பாடுகிறார்கள். பி.சுசீலா, கே.ஜே.ஏசுதாஸ், எஸ்.என்.சுரேந்திரன் குரலில் – நான் உள்ளதைச் சொல்லட்டுமா… ஊரறியப் பாடட்டுமா..

  இது படத்தின் கிளைமேக்ஸ் பாடல் காட்சி. மனைவியை இரண்டாம் கணவனோடு வாழவைத்துவிட்டு விஷம் குடித்துவிட்டு முதல் கணவன் பாடும் பாட்டு இது.
  நான் அழுதா என்ன… நான் சிரிச்சா என்ன – எஸ்.என்.சுரேந்திரன்

  அவளொரு நாட்டியத் தாரகை. அவள் மீது ஒரு அரசியல்வாதிக்கு ஆசை. அவளைத் தூக்கி வந்து ஆட வைக்கிறான். தன்னுடைய துயரங்களை எல்லாம் சொல்லி அழுது பாடுகிறாள்.
  சோகம் தானா இராகம் – வாணி ஜெயராம்

  இதுவரை வந்த பாடல்களை வாலி எழுதியிருக்க.. அடுத்த இரண்டு பாடல்களைப் புலமைப்பித்தன் எழுதியிருக்கிறார்.

  தன்னுடைய உயிருக்கு உயிரான ஆடல் அழகியைத் தெய்வமாகப் போற்றுகிறான் ஒருவன். அவள் படத்தை வைத்து பூசை செய்வது போலப் பாடும் பாட்டு.
  ஒரு தெய்வம் நேரில் வந்தது – எஸ்.என்.சுரேந்திரன்
  இந்தப் பாடல் இணையத்தில் இல்லை. என்னிடம் இருக்கிறது.

  அடுத்து வருவது எனக்கு மிகமிகமிகப் பிடித்த பாட்டு. எஸ்.ஜானகியின் குரலில் வந்த சூப்பர்ஹிட் பாட்டு. இந்தப் பாட்டும் படமும் தமிழகத்தில் சுதா சந்திரனைப் பிரபலப்படுத்தியது என்பதில் மிகையில்லை.
  கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
  கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே…
  அந்த மீராவைப் போல் ஏங்கினேன்..
  அந்த இராதாவைப் போல் வாடினேன்..
  கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே

 11. பாடல்: தேடாத இடமெல்லாம் தேடினேன்
  இது வரை பாட்டை
  படம்: வசந்த ராகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s