#TFMquiz 141 சங்கர் – கணேஷ் இசையில் 9 

மணிவண்ணன் இயக்கத்தில் விஜய்காந்த், கெளதமி நடித்த படத்தில் இருந்து ஒரு பாட்டு. 

இது ஜேசுதாஸ் குரலில் சோகப்பாட்டு. இன்னொரு வடிவம் பெண் குரலில் உண்டு.

மங்கல காரியத்துக்குப் பயன்படும் ஜவ்வாதுடன் சொல்லப்படும் இன்னொரு பொருளை நினைத்துப் பாருங்கள். அதனோடு காற்றடித்தால் படம் பேர் வருமே 🙂

பாடலோடு வருக 

#TFMquiz 140 சங்கர் – கணேஷ் இசையமைப்பில் 8

இந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்து ஜானகியோடு பாடிய பாட்டு ஒன்றும் இருக்கிறது. ஆனால் இதே படத்தில் சங்கர் கணேஷ் இரட்டையர் இசையமைத்தது இந்தப் பாட்டு.

பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.

ஒரு ஆட்டோ பிடித்தால் பாட்டைப் பிடிக்கலாம் பாடலோடு வருக 🙂

#TFMquiz 139 சங்கர் – கணேஷ் இசையமைப்பில் 7

கே.பாக்யராஜ் ஜோடியோடு ஜோடி கட்டிய படம் 🙂

ஒரே சொல்லை மூன்று முறை போட்டுப் படத்தைக் கண்டு பிடிச்சுப் பாடலோடு வருக

பாடல் : அழகிய விழிகளில்

படம் : டார்லிங் டார்லிங் டார்லிங்

#TFMquiz 138 சங்கர் – கணேஷ் இசையமைப்பில் 6

இன்று இடம்பெறும் பாடல் இடம் பிடித்த படத்தின் தலைப்பு வானத்தில் தோன்றும் ஒரு பொருளைக் குறிக்கும் அதுவே சினிமாவில் கூட அடையாளப்படுத்தப்படுகிறது.

நடிகை ஶ்ரீப்ரியா நடித்த இந்தத் திரைப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடலோடு வருக.

பாடல் : அவள் ஒரு மேனகை

படம் : நட்சத்திரம்

#TFMquiz 137 சங்கர் – கணேஷ் இசையமைப்பில் 5

கார்த்திக் – ரேவதி நடித்த இந்தத் திரைப்படத்தின் பாடல்களை இளையராஜா இசையமைத்ததாகவே நம்பிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

இதயத்தை வருடும் சோகப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.

பாடலோடு வருக

பாடல் : யாரோடு யார் என்ற கேள்வி

படம் : இதயத் தாமரை