ராஜா இசைப் புதிர் #RajaIsaiQuiz

ராஜா இசைப் புதிர் #RajaIsaiQuiz
வரும் October 3 முதல் இனிதே ஆரம்பம்
போட்டி குறித்த விளக்கம் இதோ
திரையிசையில் ஆயிரம் படங்களைத் தாண்டிச் சாதனை படைக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு இந்தப் போட்டி இடம்பெறவிருக்கின்றது. 
ஒரு பாடலின் முகப்பு இசை பகிரப்பட்டு அந்தப் பாடல் எதுவென்று நீங்கள் கண்டு பிடிப்பதே இப்போட்டியாக அமையும்.
அனைத்துப் பாடல்களும் தமிழில் வெளிவந்த பாடல்களாகவே இருக்கும்.
உங்கள் பதிலை குறித்த கேள்வி கேட்கப்படும்
https://radiospathy.wordpress.com/
தளத்தின் போட்டிப் பக்கத்தில் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு போட்டியிலும் முதலில் பதிலளித்துச் சிறப்பு முதல்வர் பட்டம் பெறுபவருக்கான தகுதி என்னவெனில் பாடலின் முதல் இரு சொற்களையும் தமிழில் தட்டச்சிப் பகிர வேண்டும்.
பாடலுக்கான பதிலைத் திருத்துபவருக்குப் புள்ளி இல்லை.
புதிருக்கான பதிலை குறித்த போட்டி பகிர்ந்த பதிவின் comment box இல் மட்டும் இடவும்.
ட்விட்டரிலோ, பேஸ்புக்கிலோ பகிராதீர்.
இந்தப் போட்டி திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு இடம்பெறும். போட்டி முடிவு அடுத்த நாள் இந்திய நேரம் நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும்.
500 போட்டிகளாக அமையும் ராஜா இசைப் புதிர் ஒவ்வொரு 100 போட்டிகளும் தனிச் சுற்றுகளாகக் கணிக்கப்படும்.

Advertisements

#TFMquiz 200 இனிதே நிறைந்த தமிழ்த் திரையிசைப் புதிர்

இன்று நிறைவுப் பாடலாக ஒலிக்கும் பாடலை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோரோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.

நட்பின் பெருமையைப் புகழும் பாட்டுக்கு இசை கொடுத்திருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். இந்தப் படத்தில் முக்கிய பத்திரமேற்றவர் எஸ்.பி.பி.சரண்.

200 நாட்களாக வெற்றிகரமாக வலம் வந்த தமிழ்த் திரையிசைப் புதிர் இன்றோடு நிறைவை நாடுகிறது.

இத்தனை நாட்களும் ஆர்வத்தோடு பங்கெடுத்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

பாடல் : நட்பு நட்பு/ வானுக்கு நிலத்தோடு

https://www.youtube.com/shared?ci=L7lk4ix9kHo

#TFMquiz 199 சந்திரபோஸ் இசையில் ஒன்று 

சந்திரபோஸ் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் & பி.சுசீலா பாடியது. வி.சி,குகநாதன் இயக்க சிவகுமார் & ஶ்ரீதேவி நடித்தது.

பாடலோடு வருக.

படம் : மச்சானைப் பார்த்தீங்களா

பாடல் : மாம்பூவே சிறு மைனாவே

https://www.youtube.com/shared?ci=ty4mU-NfXqY

#TFMquiz 198 வித்யாசாகர் இசையில் ஒன்று

வித்யாசாகர் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாட்டு இன்று.

பிரபு நடித்த படம். தலைப்பில் தமிழ் நாட்டின் ஒரு நகரத்தின் முந்திய பெயர் இருக்கும்.

பாடலோடு வருக.

படம் : மிஸ்டர் மெட்ராஸ்

பாடல் : பூங்காற்று வீசும்

https://www.youtube.com/shared?ci=el1-TLxMTeE

#TFMquiz 197 கங்கை அமரன் இசையில்

சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம், கங்கை அமரன் இசை.

நீதித்துறை சம்பந்தப்பட்டவர் பெயர் படத்தலைப்பில் இருக்கும்.

T.M.செளந்தரராஜன், P.சுசீலா மற்றும் S.P.சைலஜா பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

படம் : நீதிபதி

பாடல் : பாசமலரே அன்பில் விளைந்த

https://www.youtube.com/shared?ci=7Fk_i5PmzyY

#TFMquiz 196 கண் பார்த்ததும்

வி.எஸ்.நரசிம்மன் இசையில் இன்றைய பாட்டு.

முரளிக்கு மைக் கொடுத்த படம்.

கே.ஜே.ஜேசுதாஸ் பாடுகிறார்.

பாடலோடு வருக.

படம் : புதியவன்

பாடல் : நானோ கண் பார்த்தேன்

https://www.youtube.com/shared?ci=1FPhlAU7qrw

#TFMquiz 195 செம்பருத்திப் பூவே

தேவா இசையில் இன்றைய பாட்டு.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.

குஞ்சுமோன் தயாரித்த ஆரம்ப காலப் படமிது. சரத்குமார் உண்டு ஆனால் நாயகன் அல்ல.

பாடலோடு வருக.

படம் : வசந்தகாலப் பறவை

பாடல் : செம்பருத்தி செம்பருத்தி/ கூப்பிட்டா மலர் தேடி

https://www.youtube.com/shared?ci=8hsF4MzHi1g