#RajaIsaiQuiz 42 பொன் முடிச்சு

நடிகர் முரளியின் திரைப்படங்களில் ஒன்று. 

மனோ மற்றும் சித்ரா பாடுகிறார்கள்.

ஆர்.சுந்தரராஜன் இயக்கியது.

பாடலோடு வருக.

பாடல் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்

படம் : சாமி போட்ட முடிச்சு

#RajaIsaiQuiz 41 அருகில் வா கிளியே

இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடுகிறார். எஸ்.ஜானகி பாடிய வடிவமும் உண்டு.

மம்முட்டி நடித்த திரைப்படம்

பாடலோடு வருக.

பாடல் : அன்பே வா அருகிலே

படம் : கிளிப்பேச்சு கேட்கவா

https://www.youtube.com/shared?ci=gyYACpYOfbA

#RajaIsaiQuiz 40 செங்கமலம் அமுதம் 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி இருவரும் ஆராதித்துப் பாடும் அழகான பாட்டு.

அந்தக் காலத்து நாயகன் சுமன் நடிப்பில் வெளியான படமிது.

பாடலோடு வருக

பாடல் : ஒரு குங்குமச் செங்கமலம்

படம் : ஆராதனை

https://www.youtube.com/shared?ci=BW4LX8R88yE

#RajaIsaiQuiz 39 பொன் நெஞ்சு பூ மஞ்சம்

பிரபு நடித்து அவர் குடும்ப நிறுவனம் தயாரித்த படப் பாட்டு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் அழகான சோகப் பாட்டு.

படத்தின் தலைப்பில் ஆண் பெயர் இருக்கும்.

பாடலோடு வருக

பாடல் : பூவுக்குப் பூவாலே

படம் : ஆனந்த்

https://www.youtube.com/shared?ci=yUiYCX9Djcc

#RajaIsaiQuiz 38 காதலிக் குயிலே

இந்த ஊர் நல்லா இருக்கணும்னு ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டினேன் ஆனா நீங்க யாரும் படிக்க வரல, இந்தப் பாட்டுக்காவது பதிலோடு வாங்கப்பா அப்புறம் என் பாவம் பொல்லாது 🙂

நேற்றைய போட்டியில் க்ளூ தவறுதலாக “ஆ”எழுத்தில் அமையும் பாடல் என்று குறிப்பிடப்பட்டது. அது “ஆ” என்ற எழுத்தில் படமாகும். அந்தப் போட்டிக்கான பதிலைக் கொடுக்க இன்னுமொரு நாள் மேலதிகமாக வழங்கப்படுகிறது.

பாடலோடு வருக.

பாடல் : குயிலே குயிலே பூங்குயிலே

படம் : ஆண் பாவம்

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், சித்ரா

https://www.youtube.com/shared?ci=fRZLMFS0w78