#RajaIsaiQuiz 60 தொண்ணூறுகளில் சித்ரா 5

சார் அமலா சார் ;-)) அமலாவின் படத்தில் இருந்து இன்றைய பாடல்.

இதுக்கு மேல் என்ன க்ளூ கொடுக்க? மெளனமாகவே இருந்துடுறேன் அவ்வ்

பாடலோடு வருக.

பாடல்: ஒரு ராஜா வந்தானாம்

படம் மெளனம் சம்மதம்

#RajaIsaiQuiz 59 தொண்ணூறுகளில் சித்ரா 4 

ராம்கி நடித்த படத்தில் இருந்து இந்தப் பாடல்.

படத்தின் நாயகி பழம் பெரும் நடிகையின் மகள்.

பாடலோடு வருக.

பாடல் : உச்சிமலை மேகங்கள்

படம்: வெள்ளையத் தேவன்

#RajaIsaiQuiz 58 தொண்ணூறுகளில் சித்ரா 3 

மார்கழி மாதம் வந்தால் இந்தப் படத்தின் தலைப்பும் தானாக வந்து விடுமே 😉

தற்போது டிவி பஞ்சாயத்து பண்ணும் நடிகை நடித்த படம்.

பாடலோடு வருக.

பாடல் : உல்லாசப் பூங்காற்றே

படம்: கோலங்கள்

 

#RajaIsaiQuiz 57 தொண்ணூறுகளில் சித்ரா 2 

இன்று வரும் பாடல் அரசியலோடு சம்பந்தப்பட்ட படத்தில் இருந்து. பிரபல மலையாள நடிகர் நாயகனாக  நடித்தது.

இயக்குநரின் மனைவியே பாடல் காட்சியில் நடித்திருக்கிறார்.

பாடலோடு வருக.

பாடல் : மேலூரு மாமன்

படம் : மக்கள் ஆட்சி

https://www.youtube.com/shared?ci=Mqz0BD-B1VE

#RajaIsaiQuiz 56 தொண்ணூறுகளில் சித்ரா 1

இந்த வாரம் இடம் பெறும் பாடல்கள் தொண்ணூறுகளில் பாடகி சித்ரா பாடிய பாடல்களாக அமைந்துள்ளன.

முதலில் வருவது கன்னடத்தில் வெற்றி பெற்று தமிழுக்கு மீள எடுத்த படத்தில் இருந்து.

இந்தப் படத் தலைப்பு ஜெமினிகணேசன், சாவித்திரி நடித்த ஒரு படத்தின் பாடலின் முதலடி.

பாடலோடு வருக.

பாடல் : ஶ்ரீராமனே உன்னை சீதை

படம் : கண்களின் வார்த்தைகள்

https://www.youtube.com/shared?ci=qtbXgc7d4LE