#RajaMusicQuiz 21 தமிழ் தாவிய மெட்டு 1

இன்றிலிருந்து அடுத்த மூன்று வாரங்களுக்கான போட்டி மொழி மாற்றுத் திரைப்படங்களின் பாடல்களாக இடம்பெறவிருக்கிறது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இசைஞானி இளையராஜா கொடுத்துத் தமிழுக்குப் பின்னர் மொழி மாற்றிய பாடல்களாக இவை அமையும்.

இன்றைய போட்டி மிகவும் இலகுவானது. கே.விஸ்வநாத் இயக்கிய படத்திலிருந்து P.சுசீலா பாடுகிறார்.

பாடலோடு வருக.

Advertisements

#RajaMusicQuiz 10 காவல்துறை – காதல் துறை

இன்றைய போட்டி

காவல்துறை அதிகாரியின் காதல் பாட்டு இது. இளைய நடிகர் இரட்டை வேடம் போட்ட படங்களில் ஒன்று.

அருண்மொழி மற்றும் மின்மினி ஜோடியின் மெல்லிசை கீதம் கேட்கக் கேட்கத் திகட்டாதது.

பாடலோடு வருக.

பாடல் : தென்றல் வரும் முன்னே முன்னே

படம் : தர்ம சீலன்

#RajaMusicQuiz 9 அந்தி நேரத் தென்றல் 

இன்றைய போட்டி

இன்றைய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி கூட்டுக் குரல்களில் ஒலிக்கும் அட்டகாஷ் இசையின்பம்.

நான் இந்தப் பாடலுக்கெல்லாம் க்ளூ கொடுப்பவன் அல்ல என்று கடந்து போகாமல் ஒரேயொரு க்ளூ

இந்தப் படத்தின் தலைப்பை மட்டும் எடுத்து இன்றைய நடிகர் ஒருவர் நடித்த படமொன்று சில வருடங்களுக்கு முன் வெளிவந்தது. தனுஷ் படமல்ல.பாடலோடு வருக.

பாடல் : மாலை சூடும் வேளை

படம் : நான் மகான் அல்ல

#RajaMusicQuiz 8 நெஞ்சம் கொஞ்சும் மாலை

இன்றைய போட்டி

படத்தின் தலைப்பில் கடல் வாழ் உயிரினத்தின் பெயர் இருக்கும்.  புதுமை இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் அதே கதாநாயகியை வைத்து இவர் இயக்கிய முந்திய படம் தமிழ் சினிமாவின் மைல் கல். ஆனால் இந்தப் படமோ தோல்வி கண்டது.

உமா ரமணனுக்குக் கிடைத்த அற்புதமான தனிப் பாடல்களில் இதுவுமொன்று.

பாடலோடு வருக.

பாடல் : மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே

படம் : நண்டு

#RajaMusicQuiz 7 பூமகள் ஊர்வலம்

இன்றைய போட்டி

கடந்த வாரம் பிறந்த தினம் கொண்டாடிய பாடகர் மனோ பாடிய பாடலோடு இன்றைய இசை விருந்து.

தயாரிப்பாளர் மற்றும் கேயார் புதுமுகங்களை வைத்து இயக்கிய படமிது. படத்தின் தலைப்பு எண்பதுகளின் பாடலொன்றை நினைவுபடுத்தும்.
பாடலோடு வருக.

பாடல் : அதோ மேக ஊர்வலம்

படம் : ஈரமான ரோஜாவே

ராஜா இசைப் புதிர் – இடைவரிகள் #RajaIsaiQuiz

ராஜா இசைப் புதிர் #RajaIsaiQuiz
வரும் October 23 முதல் இனிதே ஆரம்பம்

போட்டி குறித்த விளக்கம் இதோ

திரையிசையில் ஆயிரம் படங்களைத் தாண்டிச் சாதனை படைக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு இந்தப் போட்டி இடம்பெறவிருக்கின்றது. 

ஒரு பாடலின் இடைவரிகள் ஒலி வடிவில் பகிரப்படும் அந்தப் பாடல் எதுவென்று நீங்கள் கண்டு பிடிப்பதே இப்போட்டியாக அமையும்.

அனைத்துப் பாடல்களும் தமிழில் வெளிவந்த பாடல்களாகவே இருக்கும்.

உங்கள் பதிலை குறித்த கேள்வி கேட்கப்படும்

https://radiospathy.wordpress.com/

தளத்தின் போட்டிப் பக்கத்தில் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு போட்டியிலும் முதலில் பதிலளித்துச் சிறப்பு முதல்வர் பட்டம் பெறுபவருக்கான தகுதி என்னவெனில் பாடலின் முதல் இரு சொற்களையும் தமிழில் தட்டச்சிப் பகிர வேண்டும்.

பாடலுக்கான பதிலைத் திருத்துபவருக்குப் புள்ளி இல்லை.

புதிருக்கான பதிலை குறித்த போட்டி பகிர்ந்த பதிவின் comment box இல் மட்டும் இடவும்.

ட்விட்டரிலோ, பேஸ்புக்கிலோ பகிராதீர்.

இந்தப் போட்டி திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு இடம்பெறும். போட்டி முடிவு அடுத்த நாள் இந்திய நேரம் நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும்.

500 போட்டிகளாக அமையும் ராஜா இசைப் புதிர் ஒவ்வொரு 100 போட்டிகளும் தனிச் சுற்றுகளாகக் கணிக்கப்படும்.

#RajaIsaiQuiz 99 நினைக்க நினைக்க இனிமை

கார்த்திக் உடன் அதிகம் பிரபலமில்லாத நாயகி நடித்தது. இந்தப் படத்தைக் கண்ணதாசனின் மகன் ஒருவர் இயக்கியது.

மனோ, சித்ரா பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

பாடல் : ஒரு நாள் நினைவிது

படம் : திருப்பு முனை

https://www.youtube.com/shared?ci=AwgQQCwXkA4